எம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி?

மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை பாராட்டி அதிமுகவின் வாக்கு வங்கிக்கு குறிவைத்து பேசுகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டா...

மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை பாராட்டி அதிமுகவின் வாக்கு வங்கிக்கு குறிவைத்து பேசுகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

தேனி அருகே வீரபாண்டியில் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசினார்.

எம்ஜிஆர் இருந்த இயக்கம்

எம்.ஜி.ஆர். இருந்த இயக்கம்தான் திமுக; அண்ணா மறைவுக்குப் பின்னர் கருணாநிதியை தலைவராக்க ஆதரவு தந்தவர் கருணாநிதி என பட்டியல் போட்டார் ஸ்டாலின். சட்டசபையில் கருணாநிதி என பெயர் சொல்லவே எம்ஜிஆர் தடை விதித்ததை சுட்டிக்காட்டினார்.

40 ஆண்டுகால நண்பர்

மேலும் எம்.ஜி.ஆர். மறைந்த போது முதன் முதலாக அஞ்சலி செலுத்தியவர் கருணாநிதி, 40 ஆண்டுகால நண்பரை இழந்துவிட்டேன் என வருந்தியவர் கருணாநிதி என அடுக்கிக் கொண்டே போனார். அத்துடன் அப்படிப்பட்ட எம்.ஜி.ஆருக்கும் தற்போதைய அதிமுகவுக்கும் தொடர்பிருக்கிறதா? என கேள்வியும் எழுப்பினார்.

ஜெ.வின் துணிச்சல்

அடுத்ததாக ஜெயலலிதாவை சர்வாதிகாரி என விமர்சித்திருக்கிறோம்; ஆனால் மாநில உரிமைகளுக்காக டெல்லியுடன் துணிச்சலுடன் போராடியவர் ஜெயலலிதா. கருணாநிதி, ஜெயலலிதா முதல்வர்களாக இருந்த காலத்தில் தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வு வரவில்லை என்பதை பெருமையோடு பேசினார் ஸ்டாலின்.

அதிமுகவினரை இழுக்கும் பேச்சு

லோக்சபா தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி கணிசமாக திமுக பக்கம் போனது... பின்னர் அமமுகவினர் இப்போது திமுகவுக்கு தாவி வருகின்றனர். அதிமுகவின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகி நிற்கிறது. இந்த பின்னணியில் அதிமுக தொண்டர்களை திமுக பக்கம் இழுக்கும் வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை புகழ்ந்து பேசி வருகிறார் ஸ்டாலின் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

மேலும் பல...

0 comments

Blog Archive