உச்சந்தலையில ஷாம்பு போட்டு இப்படிதான் தேய்க்கணும்... அப்பதான் முடி கொட்டாது...
June 23, 2019உங்கள் உச்சந்தலையை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் நிர்வகிப்பதால் வலிமையான மற்றும் ஆரோக்கியமான கூந்தல் உருவாகிறது. அதே நேரம் உங்கள் உச்சந்தலை ...
சில நேரங்களில் வெறும் ஷாம்பூ பயன்படுத்துவதால் மட்டும் உச்சந்தலை சுத்தமாக இருப்பதில்லை. உங்கள் உச்சந்தலைக்கு புத்துணர்ச்சி ஊட்டுவதற்கு இன்னும் சில நிலைகளை கடைபிடிக்க வேண்டியுள்ளது. உங்கள் உச்சந்தலை பிசுபிசுப்பாக இருப்பதாகவும், அதிக எண்ணெய்ப் பசையுடன் இருப்பதாகவும் நீங்கள் உணர்ந்தால் இன்னும் அதிக முறை உங்கள் கூந்தலை சுத்தம் செய்ய வேண்டும் என்று உணர்ந்தால், உங்கள் உச்சந்தலைக்கு ஒரு சிறப்பான ஸ்க்ரப் தேவை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
உச்சந்தலை ஸ்க்ரப்
உங்கள் உச்சந்தலையை புத்துணர்ச்சியூட்டி ஆழமான முறையில் சுத்தம் செய்ய நீங்கள் உச்சந்தலை ஸ்க்ரப்பிங் முறையை முயற்சிக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் ஒரு அற்புதத்தை உணர முடியும். இந்த பதிவில் உச்சந்தலையை எவ்வாறு ஸ்க்ரப் செய்வது, அதன் நன்மைகள் என்ன என்பது பற்றி உரையாடவிருக்கிறோம்.
ஸ்க்ரப்பிங் என்றால் என்ன?
உச்சந்தலை ஸ்கரப் செய்வது என்பதை எளிய முறையில் உணர்த்த வேண்டும் என்றால், உச்சந்தலையின் மேற்படலத்தைப் பிரிப்பது என்பதாகும். நம்முடைய உச்சந்தலையின் ஆரோக்கியம் , நம்முடைய கூந்தலின் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை நேரடியாக பாதிக்கிறது. நமக்கு ஆரோக்கியமான மற்றும் வலிமையான தலைமுடி வேண்டுமென்றால் ஆரோக்கியமான உச்சந்தலையை பராமரிக்க வேண்டும். இந்த வேலையை செய்வதற்காக உச்சந்தலை ஸ்க்ரப் பயன்படுகிறது.
உச்சந்தலையை அழுத்தி தேய்த்து ஸ்க்ரப் செய்வதால் அழுக்கு, தூசு மற்றும் ரசாயனக் கட்டமைப்புகள் உச்சந்தலையில் இருந்து வெளியேறி உச்சந்தலை புத்துணர்ச்சி அடைகிறது. உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் பிசுபிசுப்பு அதிகம் இருந்தால், உச்சந்தலையை ஸ்க்ரப் செய்வதால் அதிக எண்ணெய் உற்பத்தி குறைந்து, உச்சந்தலை புதுப்பிக்கப்படுகிறது.
ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது இந்த உச்சந்தலையை ஸ்க்ரப் செய்து கொள்வது நல்ல பலன்களைத் தரும். இதனால் உங்கள் கூந்தல் பளபளப்பாகவும், வலிமையாகவும், நீளமாகவும் வளர்கிறது. ஆகவே உங்கள் கூந்தலை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள விரும்பினால் உங்கள் வழக்கமான கூந்தல் பராமரிப்பில் உச்சந்தலை ஸ்க்ரப்பிங் முறையையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
நன்மைகள்
நன்மைகள்
. உச்சந்தலையில் மேற்படல பிரிப்பை மேற்கொண்டு இறந்த சரும அணுக்கள், அழுக்கு மற்றும் தூசு போன்றவற்றை வெளியேற்ற உதவுகிறது.
. உச்சந்தலை உற்பத்தி செய்யும் அதிக எண்ணெய்யை அகற்றவும் உதவுகிறது.
. தலைமுடியின் வேர்க்கல்களில் உள்ள அடைப்பைப் போக்க உதவுகிறது.
. உச்சந்தலையில் இரத்த இட்டத்தை அதிகரித்து, கூந்தலின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.
. கூந்தல் உதிர்வதைத் தடுக்க உதவுகிறது.
. கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
. பொடுகு தொந்தரவிற்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.
வீட்டிலேயே ஸ்க்ரப் செய்வது எப்படி?
அழகு நிலையங்களில் இதனை தொழில் ரீதியில் செய்து வந்தாலும், உங்கள் வசதிக்கேற்ற முறையில் வீட்டிலேயே ஸ்க்ரப் செய்து கொள்வதால் இன்னும் அதிக பலன் கிடைக்கும். மேலும் இயற்கை மூலப்பொருள் கொண்டு இதனை செய்யும்போது கூந்தலுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படாது.
ஓட்ஸ் மற்றும் பழுப்பு சர்க்கரை
உச்சந்தலையின் மேற்படலத்தில் உள்ள அழுக்கை நீக்கி இறந்த அணுக்களை வெளியேற்ற பழுப்பு சர்க்கரை உதவுகிறது. உச்சந்தலையை சுத்தம் செய்ய ஓட்ஸ் உதவுகிறது. மேலும் ஓட்ஸ்ஸில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை உச்சந்தலையில் உண்டாகும் அரிப்பைக் கட்டுப்படுத்தி இதமான உணர்வைத் தருகிறது .
தேவையான பொருட்கள்
. இரண்டு ஸ்பூன் பழுப்பு சர்க்கரை
. இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர்
. ஒரு ஸ்பூன் கண்டிஷனர்
. பத்து துளி பாதாம் எண்ணெய்
செய்முறை
1. ஒரு கிண்ணத்தில் கண்டிஷனர் சேர்க்கவும்.
2. இதனுடன் ஓட்ஸ், பழுப்பு சர்க்கரை ஆகியவற்றைக் கலந்துக் கொள்ளவும்.
3. பிறகு இதனுடன் பாதாம் எண்ணெயைச் சேர்க்கவும்.
4. எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்துக் கொள்ளவும்.
5. இந்த கலவையைக் கொண்டு உச்சந்தலையில் 5 நிமிடங்கள் சுழல் வடிவத்தில் மசாஜ் செய்யவும்.
6. பின்பு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு தலை முடியை அலசவும்.
7. பிறகு தலை முடியை நன்றாக காய விடவும்.
கடல் உப்பு, ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு
கடல் உப்பு, ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு
உச்சந்தலையில் உள்ள கழிவுகளை அகற்றி உச்சந்தலைக்கு இதமளிக்க உதவுவது கடல் உப்பாகும். ஆலிவ் எண்ணெய் உச்சந்தலையின் ஆழத்தில் ஊடுருவி ஈரப்பதத்தைத் தந்து கூந்தலின் வேர்க்கால்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து இருக்கிறது. மேலும் எலுமிச்சையில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் தன்மை காரணமாக, உச்சந்தலை தீங்கு விளைவிக்கும் கூறுகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறது . இதனால் பொடுகு மற்றும் கூந்தல் உதிர்வு போன்றவை தடுக்கப்படுகின்றன.
தேவையான பொருட்கள்
. இரண்டு ஸ்பூன் கடல் உப்பு
. ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்
. அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு
. ஒரு ஸ்பூன் கண்டிஷனர்
செய்முறை
1. ஒரு கிண்ணத்தில் கடல் உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும்.
2. இரண்டையும் ஒன்றாகக் கலக்கவும்.
3. இந்தக் கலவையுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
4. இந்தக் கலவையுடன் கண்டிஷனர் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும்.
5. உங்கள் உச்சந்தலையை ஈரமாக்கிக் கொள்ளவும்.
6. உங்கள் உச்சந்தலையில் இந்த கலவையைத் தடவி சுழல் வடிவத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்யவும்.
7. ஒரு மிதமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும்.
பாதாம், தேங்காய் எண்ணெய் மற்றும் டீ ட்ரீ எண்ணெய்
கூந்தலின் வேர்கால்களுக்கு புத்துணர்ச்சி தரும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் பாதாமில் உள்ளன. கூந்தலுக்குள் ஆழமாக ஊடுருவி, சேதங்களைத் தடுக்க உதவுகிறது தேங்காய் எண்ணெய். டீ ட்ரீ எண்ணெய்யின் கிருமி எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அரிப்பைப் போக்கி, எரிச்சலைத் தடுத்து, ஆரோக்கியமான உச்சந்தலை உருவாக்கத்தை செயல்படுத்த உதவுகிறது.
தேவையான பொருட்கள்
. இரண்டு ஸ்பூன் அரைத்த பாதாம் விழுது
. ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
. ஒரு ஸ்பூன் டீ ட்ரீ எண்ணெய்
செய்முறை
1. ஒரு கிண்ணத்தில் எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்துக் கொள்ளுங்கள்.
2. தலைக்கு வழக்கம் போல் ஷாம்பூ தேய்த்து குளித்து அதிக நீரை பிழிந்துக் கொள்ளுங்கள்.
3. பிறகு இந்த கலவையை தலையில் தடவி, மென்மையாக ஐந்து நிமிடம் சுழல் வடிவத்தில் மசாஜ் செய்து கொள்ளுங்கள்
4. பிறகு தலையை அலசுங்கள்.
5. தலையைத் துடைத்து காய வைத்துக் கொள்ளுங்கள்.
சோள மாவு மற்றும் டீ ட்ரீ எண்ணெய்
சோள மாவு மற்றும் டீ ட்ரீ எண்ணெய்
டீ ட்ரீ எண்ணெயுடன் சேர்த்து கலக்கப்பட்ட சோளமாவு உச்சந்தலையை சுத்தம் செய்து சேதங்களைத் தடுக்க உதவுகிறது. இதனால் கூந்தலின் புத்துணர்ச்சி அதிகரிக்கிறது.
தேவையான பொருட்கள்
. ஒரு ஸ்பூன் சோளமாவு
. அரை ஸ்பூன் டீ ட்ரீ எண்ணெய்
செய்முறை
1. ஒரு கிண்ணத்தில் சோளமாவு ஒரு ஸ்பூன் போடவும்.
2. அதில், டீ ட்ரீ எண்ணெய் சேர்த்து இரண்டையும் நன்றாகக் கலக்கவும்.
3. இந்த கலவை கொண்டு உச்சந்தலையில் சுழல் வடிவத்தில் ஐந்து நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யவும்.
4. பிறகு வழக்கமான முறையில் ஷாம்பூ தேய்த்து தலையை அலசவும்.
முட்டையின் மஞ்சள் கரு, தயிர் மற்றும் விளக்கெண்ணெய்
முட்டையின் மஞ்சள் கரு கூந்தலின் வேர்கால்களில் புத்துணர்ச்சி தந்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உச்சந்தலையை புத்துணர்ச்சி பெறச் செய்யும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் தயிரில் உள்ளன. மேலும் பொடுகைப் போக்கவும் தயிர் உதவுகிறது, விளக்கெண்ணெய் , இரத்த ஓட்டத்தை அதிகரித்து , உச்சந்தலையில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
தேவையான பொருட்கள்
. இரண்டு முட்டை மஞ்சள் கரு
. ஒரு கிண்ணத்தில் தயிர்
. ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய்
. ஒரு ஸ்பூன் உப்பு
செய்முறை
1. மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்.
2. எல்லாவற்றியும் ஒன்றாகக் கலக்கவும்.
3. இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவி சுழல் வடிவத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யவும்.
4. பிறகு ஒரு ஷவர் கேப் அணிந்து தலையை மூடிக் கொள்ளவும்.
5. 15 நிமிடங்கள் அப்படியே விடவும்.
6. பிறகு ஒரு மிதமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும்.
தேன், பெப்பெர்மின்ட் எண்ணெய் மற்றும் பழுப்பு சர்க்கரை
உச்சந்தலையில் உள்ள ஈரப்பதத்தை உள்ளுக்குள்ளேயே பூட்டி வைக்கும் திறன் தேனுக்கு உண்டு. மேலும் உச்சந்தலையின் pH அளவைப் பராமரிக்க தேன் உதவுகிறது. இதனால் உச்சந்தலை சீரான முறையில் கண்டிஷன் செய்யப்படுகிறது. இதனால் சேதங்கள் தடுக்கப்படுகின்றன. பெப்பெர்மின்ட் எண்ணெய் கூந்தலின் வேர்க்கால்களை புத்துணர்ச்சி பெறச் செய்து, கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
தேவையான பொருட்கள்
. ஒரு ஸ்பூன் ஆர்கானிக் தேன்
. ஒரு ஸ்பூன் பெப்பெர்மின்ட் எண்ணெய்
. ஒரு ஸ்பூன் பழுப்பு சர்க்கரை
செய்முறை
1. மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் போடவும்.
2. எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும்.
3. இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவவும்.
4. பிறகு மென்மையான முறையில் சுழல் வடிவத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்யவும்.
5. பிறகு மென்மையான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும்.
பேக்கிங் சோடா மற்றும் டீ ட்ரீ எண்ணெய்
உச்சந்தலையை சிறப்பாக சுத்தம் செய்யவும் ஆரோக்கியமான முறையில் பராமரிக்கவும் ஒரு சக்தி வாய்ந்த தீர்வாக இருப்பது பேக்கிங் சோடா மற்றும் டீ ட்ரீ எண்ணெயின் ஒருங்கிணைப்பு.
தேவையான பொருட்கள்
. ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா
. டீ ட்ரீ எண்ணெய் சில துளிகள்
. ஒரு ஸ்பூன் ஷாம்பூ
செய்முறை
1. ஒரு கிண்ணத்தில் ஷாம்பூ சேர்க்கவும்.
2. அதில் மேலே கூறிய அளவு பேக்கிங் சோடா மற்றும் டீ ட்ரீ எண்ணெய் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும்.
3. பிறகு இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் சுழல் வடிவத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்யவும்.
4. பிறகு வெதுவெதுப்பான நீரால் தலையை அலசவும்.
அஸ்பிரின் ஸ்க்ரப்
அஸ்பிரின் மாத்திரையில் சலிசிலிக் அமிலம் உள்ளது. இது முடி உதிர்வைத் தடுத்து, வேர்கால்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.
தேவையான பொருட்கள்
. 6-8 அஸ்பிரின் மாத்திரைகள்
. 4 ஸ்பூன் வெதுவெதுப்பான நீர்
செய்முறை
1. ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றிக் கொள்ளவும்.
2. அந்த நீரில், அஸ்பிரின் மாத்திரைகளைக் கலந்து அது கரையும் வரை நன்றாகக் கலக்கவும்.
3. ஒரு பிரஷ் கொண்டு உங்கள் உச்சந்தலையில் இந்த கலவையைத் தடவவும்.
4. பிறகு 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும்.
5. பிறகு வழக்கமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும்.
6. தலையை அலசியபின் நன்றாகக் காய விடவும்.
பிக்பாஸ்-3 வீட்டிற்குள் செல்லும் மொத்தம் 17 போட்டியாளர்கள் லிஸ்ட்? இதோ, செம்ம TRP வரப்போகிறது!
June 22, 2019பிக்பாஸ் மூன்றாவது சீசன் நாளை பிரமாண்டமாக தொடங்கவுள்ளது. இதில் யார் கலந்துக்கொள்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு பலரிடமும் உள்ளது. இந்நிலையில் ...
இந்நிலையில் நமக்கு கிடைத்த தகவல் அனைத்தையும் நாம் ஒவ்வொரு நாளும் கூறிக்கொண்டே தான் இருக்கின்றோம்.
அந்த வகையில் டுவிட்டரில் பிக்பாஸ்-3 நிகழ்ச்சிக்கு வரும் மொத்த போட்டியாளர்கள் லிஸ்ட் என்று ஒருவர் டுவிட் செய்துள்ளார். இந்த லிஸ்டில் நாம் முன்பே குறிப்பிட்ட ஒரு சிலரும் உள்ளனர்.
இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனாலும்,இது பலராலும் பகிரப்பட்டு வருகின்றது, இதோ...
#BigBoss3 #Cast
Fathima Babu
Power star
Cheran
Sherin
Kavan actress
Sandy master
Pink Abirama
Sakshi Agarwal
Paruthiveeran Saravanan
Jangerry comedy Madhumitha
Malaysian male model
Mohan vaithiya
One more srilankan model
17 contestants.
நூறு ஆண்டுகள் வாழ நம் முன்னோர்களின் இந்த எளிய உணவுப்பழக்கங்களை பின்பற்றினாலே போதும்...!
June 22, 2019இந்திய சமையற்கலை மிகவும் புகழ் பெற்றதாகும், அதற்கு காரணம் நமது சுவை மிகுந்த மசாலாக்கள் மட்டுமல்ல, நமது சமையற்கலை வழங்கும் பல ஆரோக்கிய நன்மை...
நமது முன்னோர்கள் வாழ்ந்த ஆரோக்கிய வாழ்விற்கு அவர்களின் வாழ்க்கை முறையும், ஆரோக்கியமான உணவுப்பழக்கமும்தான் காரணம். இப்போதிருக்கும் நமது வாழ்க்கை முறையில் நம்முடைய அத்தியாவசிய தேவை நம்முடைய பாரம்பரிய உணவுமுறைதான். நமது பாரம்பரிய உணவுமுறைகளில் இருந்து இப்பொது நாம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டிய பழக்கவழக்கங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டு காய்கறிகள்
வீட்டில் காய்கறிகளை வளர்ப்பதன் சிறந்த நன்மை என்னவெனில் இவற்றில் பூச்சிக்கொல்லிகளின் அளவு குறைவாக இருப்பதுடன் ஊட்டச்சத்துக்களும் அதிகமாக இருக்கும். ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி வீட்டில் வளரும் காய்கறிகள் கடைகளில் இருக்கும் காய்கறிகளை விட 75 சதவீதம் ஆரோக்கியமானதாக இருக்கும். மேலும் இது உங்கள் உடல் செயல்பாடுகளை அதிகரிப்பதுடன் இதய ஆரோக்கியம் மற்றும் உடலின் ஒட்டுமொத்த வலிமையையும் அதிகரிக்கும்.
உலக்கை மற்றும் குழவி
ரெடிமேட் மசாலா பொருட்கள் நல்லவைதான் ஆனால் வீட்டில் தயாரிக்கப்படும் மசாலா பொருட்கள் ஆரோக்கியமானவை. இதற்கு காரணம் இயற்கை கற்களில் செய்யப்படும் உலக்கை மற்றும் குழவிதான். இந்த கற்களில் தயாரிக்கப்படும் மசாலா பொருட்கள் உணவின் சுவையை மட்டுமின்றி அதன் ஆரோக்கியத்தின் அளவையும் அதிகரிக்கும். அதற்கு காரணம் அவற்றில் எந்தவித செயற்கை பொருட்களும் சேர்க்கப்படுவதில்லை என்பதால்தான்.
மண்பானை
களிமண் பாத்திரங்கள் அல்லது மண் பாத்திரங்கள் இயற்கையாகவே நீரை குளிர்ச்சியாக்க பயன்படுகிறது. மேலும் இது மனிதர்களின் குணப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கிறது. ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி இந்த மண்பானை தண்ணீர் குடிப்பது குளிர்சாதன பெட்டியில் இருக்கும் தண்ணீரை விட பலமடங்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது.
வெண்கல பாத்திரம்
ஆரோக்கியமாக சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் வெண்கல பாத்திரம் ஒரு சிறந்த தேர்வாகும். பழங்காலத்தில் இது செல்வமிக்க குடும்பங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவின் ஊட்டச்சத்துக்கள் 97 சதவீதம் பாதுகாக்கப்படும். தற்போது சில உணவகங்கள் மீண்டும் வெண்கல பாத்திரத்தில் உணவு பரிமாறும் பழக்கத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார்கள்.
இரும்பு பாத்திரம்
இரும்பு பாத்திரங்கில் சமைப்பது என்பது மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகும் ஏனெனில் இது உணவு வேகும் வேகத்தை குறைப்பதுடன் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்களையும் பாதுகாக்கிறது. உலகின் பாதுகாப்பான உணவு சமைக்கும் முறைகளில் இதுவும் ஒன்றாகும். குறிப்பாக அமிலங்கள் நிறைந்த உணவுகளை இதில் சமைப்பது நமது உடலுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடும்.
கைகளால் சாப்பிடுவது
ஆயுர்வேதத்தின் படி கைகளால் உணவை எடுத்து உங்கள் வாயில் வைத்து சாப்பிட கைகளை வளைப்பது ஒரு யோகா முத்திரை ஆகும். இது உடலின் உறுப்புகளை செயல்பட வைத்து மூச்சுவிடுவதை சீராக்கும். நமது விரல்கள் உணவை தொடும்போது அதிலிருக்கும் நரம்புகள் அதனை உணர்ந்து மூளைக்கு உணவை செரிமானம் அடையவைக்கும் இரசாயனங்களை வெளியிடும் சிக்னலை அனுப்புகிறது. இதனால்தான் கைகளால் உணவை சப்பிடும்போது அதன் சுவை அதிகமாக இருக்கிறது.
கண்ணாடி குடுவைகள்
கண்ணாடி குடுவை என்பது மிகவும் தூய்மையான மற்றும் இயற்கை சார்ந்த மறுசுழற்சி செய்யக்கூடிய ஒரா பொருளாகும். இது உணவை சேமிக்கும் உலகின் மிகவும் பாதுகாப்பான ஒரு பொருளாக கருதப்படுகிறது. இது உணவிற்குள் எந்த இரசாயனத்தையும், நுண்ணுயிர்களையும் நுழைய அனுமதிக்காது. அதேசமயம் இது உணவின் நிறம் மற்றும் சுவையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
உங்கள் எடையின் படி ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிப்பது உங்களுக்கு ஆரோக்கியம் தெரியுமா?
June 22, 2019தண்ணீர் இல்லாத வாழ்க்கை என்பதை எவராலும் நினைத்து பார்க்க முடியாது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மட்டுமின்றி அடிப்படை வாழ்க்கைக்கு கூட தண்ணீர் அ...
ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படையான மற்றும் எளிதான வழி தண்ணீர் குடிப்பதாகும். தினமும் சரியான அளவு தண்ணீர் குடிக்கும் போது உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மேலும் பசியையும் கட்டுப்படுத்தும். இந்த பதிவில் உங்கள் எடைக்கு ஏற்ப எவ்வளவு நீர் குடிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
தினமும் தேவையான நீர்
நீங்கள் ஒவ்வொரு நாளும் குடிக்க வேண்டிய நீரின் அளவு உங்களின் பாலினம், செயல்பாடுகள், ஆரோக்கிய நிலைகள் மற்றும் உங்களின் எடை போன்ற படிநிலைகளை பொறுத்து அமைகிறது. ஒரு நாளைக்கு 8 டம்ளர் அல்லது 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியமானது என்று கூறப்படுகிறது. ஆனால் சில ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
உணவுக்கு முன் தண்ணீர் குடிப்பது
பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி சாப்பிடுவதற்கு 20 அல்லது 30 நிமிடத்திற்கு முன் 2 கப் தண்ணீர் குடிப்பது உங்களை நிறைவாக உணர வைக்கும். இது எடை குறைப்பில் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது.
அதிக தண்ணீர் குடிப்பதின் பக்க விளைவுகள்
மனித உடல் 66 சதவீதம் நீரால் ஆனது, நமது உடலில் இருக்கும் அதிக எடையை குறைக்க இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதிகளவு தண்ணீர் குடிப்பது நமது உடலில் இருக்கும் தண்ணீரின் அளவில் சமநிலையின்மையை ஏற்படுத்தும். இதனால் வாந்தி, தலைவலி, சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
நீர் குடிக்க வழிகாட்டி
தினமும் காலை 2 அல்லது 4 கிளாஸ் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கவும். நீங்கள் குளிரூட்டப்பட்ட சூழ்நிலையில் பணிபுரிபவராக இருந்தால் தினமும் 2.5 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்காதீர்கள். நீங்கள் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால் உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன் 16 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். உடற்பயிற்சி முடிந்த பிறகு 16 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
உங்கள் எடை
நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானது என்பதை முடிவு செய்யும் முதல் காரணி உங்களின் எடை ஆகும். ஒருவர் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டுமென்பது முழுக்க முழுக்க அவர்களின் உடல் எடையை சார்ந்தது. பொதுவாக ஒருவர் எவ்வளவு எடை அதிகமாக இருக்கிறார்களோ அவ்வளவு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும்.
எடையை கணக்கிடுவது எப்படி?
முதலில் உங்கள் எடையை கிலோவில் இருந்து பவுண்ட்க்கு மாற்றி கொள்ளுங்கள். 1 கிலோ என்பது 2.20 பவுண்ட் ஆகும். அதற்கு பிறகு உங்கள் எடையை 2/3 ஆல் பெருக்குங்கள். இது நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை காட்டும். உதாரணத்திற்கு உங்கள் எடை 200 பவுண்டாக இருந்தால் அதனை 2/4 ஆல் பெருக்கும்போது அது கிட்டதட்ட 113 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று வரும். 1 அவுன்ஸ் என்பது 29 மிலி ஆகும்.
உடற்பயிற்சிகள்
நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால் நீங்கள் உங்கள் உடலில் இருக்கும் அதிகளவு நீரை வியர்வை மூலம் இழப்பீர்கள். நீங்கள் உடற்பயிற்சி செய்யும் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் 350 மிலி நீரை குடிக்கவும். நீங்கள் தினமும் 45 நிமிடம் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால் நீங்கள் 17 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
தலைவலியை நொடியில் குணப்படுத்த இந்த இடத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்தால் போதும்...!
June 22, 2019மனித உடல் என்பது பல அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிறைந்ததாகும். மனித உடலில் மறைந்திருக்கும் ரகசியங்களை தெரிந்து கொள்ளும் ஆராய்ச்சிகள் உலகம்...
நமது உடலின் சில பகுதிகளை தூண்டுவது உடலில் இருக்கும் வலி மற்றும் விரும்பத்தகாத உணர்வுகளை குறைக்கும் வழியாகும். நமது உடல் பாகங்களின் சில பாகங்களும், நம் உடலின் இயல்பான செயல்பாடுகளும் நம்மை ஆச்சரியப்படுத்துவது மிகவும் இயல்பானது. உங்கள் உடலில் இருக்கும் சில பாகங்களை தூண்டினால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிலாக்ஸ் ஆக்க உதவும்
நீங்கள் அதிக மனஅழுத்தத்தில் இருந்து விடுபட விரும்பினால் உங்கள் மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டு முகத்தை குளிர்ந்த நீரால் நன்கு கழுவவும். குளிர்ந்த நீர் உங்களின் சுழற்சியை அதிகரிப்பதுடன் உங்களை ரிலாக்ஸாக உணர வைக்கும். இது பல நாடுகளில் பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு குணப்படுத்தும் முறையாகும்.
தொண்டை புண்ணை குணப்படுத்த
தொண்டை புண்ணை குணப்படுத்த டீ குடிப்பது நல்ல மருந்தாக கருதப்படுகிறது. ஆனால் அதனை விட எளிய வழி ஒன்று உள்ளது. உங்கள் தொண்டையில் பிரச்சினை ஏற்பட்டால் உங்கள் காதை திருகவும். உங்கள் காதில் இருக்கும் நரம்புகளை தூண்டுவதன் மூலம் உங்கள் தொண்டை பிரச்சினைகளை குணப்படுத்தி நிவாரணத்தை வழங்கும்.
ஊசி பயத்தை நீக்கும்
ஊசி போடுவது குறித்து அனைவருக்குமே அடிமனதில் சிறிய பயம் இருக்கும். ஆனால் இந்த பயத்தை போக்க ஒரு எளிய வழி உள்ளது. ஊசி போடுவதற்கு முன் சிறிது இருமினால் ஊசி மீது இருக்கும் பயம் போய்விடும்.
மூக்கடைப்பை குணப்படுத்தும்
உங்கள் மூக்கு பாதைகளை ரிலாக்ஸாக வைக்க உங்கள் நாக்கை வாயின் மேற்புறம் நோக்கி அழுத்த வேண்டும். உங்கள் ஆள்காட்டி விரலை கொண்டு புருவத்தை நன்கு அழுத்தவும். இதனை செய்வதற்கு ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் மூச்சை இழுத்து பிடிக்கவும்.
தீக்காயங்களை குணப்படுத்தும்
தீக்காயங்கள் குணமாக அதிக காலம் ஏ எடுத்துக்கொள்ளும். உங்கள் விரலின் நுனிகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து தொடவும். இந்த முறை தீக்காயங்களால் ஏற்பட்ட வடுக்களையும் குணப்டுத்தும்.
உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்தும்
உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்தும்
உங்கள் கட்டைவிரல் மீது ஊதினால், இது உங்கள் வயிற்றில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்வதுடன் இது உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்தவும் உதவும். இது மிகவும் பயனுள்ள மருத்துவ முறையாகும்.
தலைவலியை குணப்படுத்தும்
உங்கள் கையில் வலியை குறைக்கும் மாத்திரைகள் இல்லையென்றால், நீங்கள் உங்கள் கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் உள்ள பகுதியில் மசாஜ் செய்யவும். இந்த மசாஜ் உங்கள் தலைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் தலைவலியை குறைக்கும்.
பல் வலி
உங்களுக்கு பல் வலி அல்லது பல் கூச்சம் இருந்தால் உங்கள் கையின் பின்புறத்தில் ஐஸ்கட்டியை வைக்கவும். கையின் பின்புறத்தில் ஐஸ்கட்டியை தேய்த்து விட்டு அப்படியே ஆள்காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையில் இருக்கும் பகுதியிலும் வைத்து தேய்க்கவும். வலிக்கான சிக்னல்களை மூளைக்கு அனுப்பும் நரம்புகள் இந்த இடத்தில் இருக்கிறது. இந்த குளிர்ந்த வெப்பநிலை சிக்னல்கள் அனுப்புவதை தடுக்கும்.
சர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி தினமும் சாப்பிடலாமா?
June 22, 2019ஆசியாவைச் சேர்ந்த மக்களுக்கு அரிசி ஒரு முக்கிய உணவாகும். இன்றைய நாட்களில் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டவர்களில் நிறைய பேர் அரிசை விட மற்...
அரிசியைப் பற்றியும் அதன் பல்வேறு வகைகளைப் பற்றியும் நிறைய விவாதங்கள் நடந்த வண்ணம் உள்ளன. ஆரோக்கியத்தில் அரிசியின் பங்கு குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துக் கொண்டே இருக்கின்றனர்.
அரிசி
குறிப்பாக வெள்ளை அரிசியை புறக்கணிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே உள்ளது. ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் சிலர், சிவப்பு அரிசி, பழுப்பு அரிசி, திணை அரிசி, கவுனி அரிசி என்று பல்வேறு அரிசி வகைகளை உட்கொள்ளத் தொடங்கியுள்ளனர். உண்மையில் இந்த வகை அரிசி நமது முன்னோர்களால் அதிகம் உட்கொள்ளப்பட்டு பின்பு வெள்ளை அரிசியின் வருகையால் மறைக்கப்பட்டவை.
கருப்பு அரிசி
கருப்பு அரிசி என்னும் கவுனி அரிசி மிகவும் ஆரோக்கியமான அரிசியாக கருதப்படுகிறது. இது மிகவும் அரிய வகை அரிசியாகும். இந்தியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்த அரிசியின் அறிமுகம் உள்ளது. வட கிழக்கு நாடுகளில் சக் ஹோ என்றும் தென்னிந்தியாவில் கவுனி அரிசி என்று அழைக்கப்படுகிறது.
ஊட்டச்சத்துக்கள்
அரிசியின் நிறத்தை வைத்தே அதன் ஊட்டச்சத்தை கணிக்க முடியும். அரிசி எந்த அளவுக்கு அடர் நிறம் கொண்டுள்ளதோ, அந்த அளவிற்கு அதில் ஊட்டச்சத்து அதிகம் இருக்கும். இந்த அளவுகோல் வைத்து பார்க்கும்போது, கருப்பு அரிசி என்னும் கவுனி அரிசி, அரிசி வகைகளின் ஆரோக்கிய வரிசையில் முதல் இடத்தைப் பிடிக்கிறது. இத்தகைய பெருமை பொருந்திய கருப்பு அரிசியின் அற்புத நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
அன்டி ஆக்சிடென்ட்
கருப்பு கவுனி அரிசியில் அளவுக்கு அதிகமான அன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்து உள்ளன. கருப்பு அரிசியில் காணப்படும் அந்தோசயனின் உள்ளடக்கம், மற்ற தானியங்களை விட அதிகம் இருப்பதால், சிவப்பு அரிசி, திணை அரிசி போன்றவற்றை விட இது ஒரு சிறந்த உணவாக போற்றப்படுகிறது.
இந்த அந்தோசயனின் என்னும் அன்டி ஆக்சிடென்ட் இந்த தானியத்தில் இருப்பதால், இதனை உட்கொள்பவர்களுக்கு இதய நோய், புற்று நோய் மற்றும் இன்னும் பல நோய்கள் தடுக்கப்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
நார்ச்சத்து
கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து மற்றும் கனிமங்கள் அதிகம் உள்ளன. ஒரு கிண்ணம் அல்லது 100 கிராம் கவுனி அரிசியில் 4.9 கிராம் அளவுக்கு நார்ச்சத்து உள்ளது. பழுப்பு அரிசியில் உள்ள நார்ச்சத்தின் அளவை விட இது இரண்டு மடங்கு உயர்ந்ததாகும்.
ஆகவே, உங்கள் உணவில் அதிக நார்ச்சத்து கிடைக்கக் வேண்டும் என்று விரும்புகிறவர்கள், மற்ற வகை அரிசியை உட்கொள்வதை விட கருப்பு கவுனி அரிசியை எடுத்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.
அழற்சி எதிர்ப்பு தன்மை
கருப்பு அரிசி இயற்கையாகவே குணப்படுத்தும் தன்மை கொண்ட உணவுப் பொருள். கருப்பு கவுனி அரிசி, உடலில் அழற்சி உண்டாக்கும் கூறுகளைக் குறைத்து, அழற்சி எதிர்ப்பு கூறுகளை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதனால், புற்று நோய், ஒவ்வாமை மற்றும் கீல்வாதம் போன்ற அழற்சி தொடர்புடைய நோய்கள் தடுக்கப்படுகின்றன.
நச்சுகள்
நச்சுகள்
கருப்பு கவுனி அரிசி இயற்கையாகவே அதிக அளவில் உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் தன்மை கொண்ட ஒரு உணவுப் பொருள். கருப்பு அரிசியில் காணப்படும் பல்லூட்டச்சத்துகள் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுகளைப் போக்க உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
அடுத்த முறை நீங்கள் அரிசி வாங்கும்போது, கட்டாயம் இந்த சிறப்பு தன்மை வாய்ந்த கருப்பு அரிசியை வாங்க நீங்கள் முயற்சிக்கலாம்.
க்ளுடன் அல்லாத தானியம்
கருப்பு அரிசி, மற்ற அரிசி வகைகளைப் போல், இயற்கையாகவே க்ளுடன் இல்லாமல் இருக்கும் அரிசியாகும். க்ளுடன் ஒவ்வாமை இருந்து உங்களுக்கு செலியாக் நோய் பாதிப்பு இருந்தால், உங்கள் தினசரி உணவு அட்டவணையில் கருப்பு அரிசியை இணைத்துக் கொள்ளலாம்.
சர்க்கரை நோயாளிகள்
சர்க்கரை நோயாளிகள்
கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் குளுக்கோஸ் நீண்ட நேரம் உங்கள் உடலில் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. கருப்பு அரிசி போன்ற முழு தானியங்களை உட்கொள்வதால் உங்கள் உடலில் டைப் 2 நீரிழிவு அபாயம் குறைக்கப்படுகிறது, உங்கள் உடல் எடை கண்காணிக்கப்படுகிறது.
இதனால் உங்கள் உடலின் ஆற்றல் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு நீரிழிவு பாதிப்பு இருந்தால், வெள்ளை அரிசியை உண்பதற்கு மாற்றாக, கருப்பு கவுனி அரிசியை தினசரி உணவில் எடுத்துக் கொள்வதால், உங்கள் உடல் நீரிழிவை எதிர்த்து போராட உதவுகிறது.
எடையைக் குறைக்க
கருப்பு கவுனி அரிசி, ஓர் முழு தானியம். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது என்பதை முன்னரே பார்த்தோம். இந்த ஒருங்கிணைந்த பண்பு, உடலில் பசிக்கான அறிகுறியை குறைத்து, அதிகம் சாப்பிடுவதைக் குறைக்க உதவுகிறது. பொதுவாக இன்சுலின் எதிர்ப்பு உடல் எடை அதிகரிப்புடன் தொடர்புடையது.
ஆனால் கருப்பு அரிசி இன்சுலின் எதிர்ப்பை தடுக்க உதவுகிறது. இதனால் மறைமுகமாக எடை குறைப்பில் உதவுகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உங்கள் எடை அதிகரித்து உடல் பருமனால் கவலைப்படுபவர்கள் நிச்சயம் கருப்பு அரிசியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் விரைவாக உங்கள் எடை குறையும்.
இதய ஆரோக்கியம்
மாரடைப்பு மற்றும் பக்க வாதத்தின் முக்கிய காரணமான தமனியில் கொழுப்பு படிதலை குறைக்க கவுனி அரிசி உதவுகிறது. இது ஒரு சிறந்த குணப்படுத்தும் தன்மை கொண்ட ஒரு உணவுப் பொருள். மேலும் இதய நோய்க்கான மற்ற இரண்டு முக்கிய காரணிகளை குறைக்கவும் கருப்பு கவுனி அரிசி உதவுகிறது, அது, LDL ,ட்ரை க்ளிசரைடு அளவு மற்றும் மொத்த கொலஸ்ட்ரால் ஆகியவையாகும்.