மநீம-க்கு இதுதான் முதல் தேர்தல்.. திருவாரூர் தேர்தலில் கமல் போட்டியிடுவாரா? என்ன திட்டம்?
January 01, 2019திருவாரூர் தொகுதியில் நடக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கமல்ஹாசன் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. திருவா...
திருவாரூர் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும்.
ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். இந்த தேர்தலில் எந்த கட்சி சார்பாக யார் களமிறக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
மக்கள் நீதி மய்யம் போட்டியிட வாய்ப்பு
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடந்தால் அதில் பெரும்பாலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று ஏற்கனவே கமல்ஹாசன் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் கமல்ஹாசன் கட்சி தொடங்கிய பின், அவர் சந்திக்க போகும் முதல் தேர்தலாக திருவாரூர் தேர்தல் மாறியுள்ளது. முதல் தேர்தலே மிக முக்கியமான ஒன்றாக ஆகியுள்ளது.
யார் நிறுத்தப்படுவார்கள்
மக்கள் நீதி மய்யம் சார்பில் திருவாரூர் தொகுதியில் யார் நிற்க வைக்கப்படுவார்கள் என்பது தற்போது பெரிய கேள்விக்குறி ஆகியுள்ளது. கு. ஞானசம்பந்தம், சினேகன் உள்ளிட்ட சில பிரபலங்கள் கட்சியில் இருக்கிறார்கள். இதனால் இவர்களில் யாராவது தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடுவார்களா என்ற கேள்வி உருவாகி உள்ளது.
பார்வை
கமல்ஹாசன் ஏற்கனவே டெல்டா தொகுதிகளில் நற்பெயர் பெற்று இருக்கிறார். கஜா புயலின் போது மக்களுக்கு உதவியது. கஜா சேத நிலவரங்களை பார்வையிட்டது, என்று நிறைய நற்பெயர்களை கமல்ஹாசன் பெற்று உள்ளார். மக்கள் நீதி மய்யம் இங்கு போட்டியிடும்பட்சத்தில், கமல்ஹாசன் இன்னும் நேரில் போய் மக்களுடன் மக்களாக உழைக்க வேண்டி இருக்கும்.
கமல்ஹாசன் போட்டி
ஒருவேளை இந்த தொகுதியில் கமல்ஹாசனே மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தனி எம்எல்ஏவாக வெற்றிபெற்று சட்டசபை செல்வாரா என்ற கேள்வி உருவாகி உள்ளது. அப்படி தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அது மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சில சமயம்
சில சமயங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி இந்த தேர்தலை புறக்கணிக்கவும் வாய்ப்புள்ளது. கமல்ஹாசனும் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியும் நல்ல நட்பில் இருந்தவர்கள். கருணாநிதி மீது கமலுக்கு நிறைய மரியாதை இருப்பதால், அந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவதை இந்த முறை மட்டும் தவிர்க்க வாய்ப்புள்ளது.
தோட்டத்திலிருந்து எலிகளை விரட்டும் வழிகள்!!!
December 31, 2018நாம் பாடுபட்டு பண்படுத்திய தோட்டங்களுக்கு பூச்சிகள் தான் எதிரிகளாக இருக்கின்றன. தோட்டத்தை பராமரிக்கும் மனிதனுக்கு, அங்கிருக்கும் தாவரங்களின...
மனிதர்களுடன் வசிக்க பழகி விட்டிருக்கும் எலிகள் தான், தோட்டங்களையும் வசிப்பிடமாக கொண்டிருக்கின்றன. இவை அங்கிருக்கும் தானியங்களுக்கு மிகவும் அபாயம் தரும் விஷயங்களாக இருப்பதற்கு காரணம், இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது தான்! ஆம், நம்முடைய தோட்டங்களிலிருந்து எலிகளை முழுமையாக ஒழித்துக் கட்டுவதென்பது நடவாத காரியமாகும். எனினும், தோட்டங்களுக்கு இந்த எலிகள் வந்து செல்வதை, கட்டுப்படுத்த முடியும் என்பது ஆறுதலான சங்கதி.
முதலில், எலிகள் உங்களுடைய தோட்டத்திற்கு வரக்கூடிய நேரங்களில் மிகவும் தனித்தன்மையானவை என்பதால், அந்த நேரங்களைக் கணிப்பது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும். எனினும், தக்காளிகள் அல்லது உருளைக் கிழங்குகளை கடித்து போட்டு விட்டிருப்பதைக் கண்டால், எலிகள் வந்து போயிருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம். சில நேரங்களில், இலைகள் கூட கடித்து விடப்பட்டிருக்கும். நீங்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அடையாளமாக இதைக் கொள்ளலாம். இவ்வாறு எலி வந்து போவதை தெரிந்து கொண்ட பின்னர், அவற்றை விரட்டியடிக்கும் வழிகளில் கவனம் செலுத்தலாம்.
முதலாவதாக, உங்களுடைய வீட்டிலிருந்து தோட்டத்திற்குள் வர எந்தவிதமான ஓட்டைகளும் இல்லாததை உறுதி செய்யுங்கள். இவ்வாறு எலிகள் தோட்டத்திற்கு வர வழி காட்டும் துவாரங்களை அடைத்து விட்டால் முதல் பணி தொடங்கி விட்டது எனலாம்.
அடுத்ததாக, உங்களிடம் செல்லப்பிராணிகள் இருந்தால், அவற்றின் உணவுக் கிண்ணங்களை சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்யுங்கள். ஏனெனில், செல்லப் பிராணிகளுக்கு உணவு வைக்கும் பாத்திரங்களால், எலிகளும் ஈர்க்கப்படுகின்றன. அவை வழக்கமாகவே மோசமான சுகாதாரமுடைய இடங்களுக்கு சென்று வரும் என்பது உண்மை. எனவே, உங்களுடைய தோட்டமும் கூட சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள்.
எட்டிக்காய், கற்பூரம் மற்றும் லாவெண்டர்களை பயன்படுத்துங்கள். இவை பூச்சிகளை மற்றும் எலிகளை விரட்டியடிப்பதில் சிறந்த பங்கு வகிக்கும் பொருட்களாகும். மேலும், அம்மோனியம் பூச்சிக் கொல்லிகளை அருகிலுள்ள கடைகளில் கேட்டு வாங்கி பயன்படுத்துங்கள். அம்மோனியாவின் நெடியை வாங்கிக் கொண்டு எலிகள் அதிக நேரம் இருப்பதில்லை.
இறுதியாக, உங்களுடைய தோட்டத்தில் எலிகளை பிடிக்கும் பொறிகளை அமைத்திடுங்கள். எலிகளை விரட்டுவதில் மிகவும் திறமையான வழிமுறையாக இது இருக்கும். உங்களுடைய தோட்டத்திலிருந்து எலிகளை விரட்டுவதற்கு உதவியாக, கடைகளில் பல்வேறு வகையான எலிப்பொறிகள் விற்கப்பட்டு வருகின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்துங்கள் மற்றும் எலிகளை விரட்டுங்கள்.
எவ்வளவு சுத்தமா வெச்சிருந்தாலும் உங்க வீட்டு மெத்தை நாற்றம் அடிக்குதா? இத ட்ரை பண்ணுங்க
December 31, 2018உங்கள் படுக்கை துர்நாற்றம் வீசுகிறதா? நீங்கள் எப்போதாவது உங்கள் மெத்தையின் கிருமிகளை அழித்திருக்கிறீர்களா? அப்பொழுது நீங்கள் மோசமான வாசனைகள...
எல்லாவற்றிற்கும் மேலாக இவை உங்கள் மெத்தையை புதிதாக்குகிறது மற்றும் மெத்தைக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய இரசாயனங்கள் இவற்றில் இல்லை.
கட்டில் மெத்தை
உங்கள் மெத்தையிலிருந்து கெட்ட வாசனைகளை நீக்க, நீங்கள் வாசனை திரவியங்கள் அல்லது விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை. சந்தையில் இதற்கான சில தீர்வுகள் இருப்பினும், இயற்கைப் பொருள்களின் மூலமாக வீட்டை சுத்தம் செய்யும் தந்திரங்களைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.
இந்த இயற்கை முறை மாற்றுக்கள் மலிவானவை மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்காது. மேலும், அவை கிருமிகள், பூஞ்சை மற்றும் பிற நுண்ணுயிரிகளை அகற்ற உதவுகிறது.
அவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதால் உங்கள் மெத்தையின் மேற்பரப்பு குறைபாடு மற்றும் ஒவ்வாமைப் பிரச்சனைகள் சரி செய்யப்படுகிறது. கண்ணுக்குத் தெரியாத வியர்வை மற்றும் இறந்த செல்கள் மூலமாக உருவாகும் கறைகளை அகற்றவும் உதவுகிறது. இன்றைக்கே இதை உங்கள் வீட்டு மெத்தையில் முயற்சி செய்து பாருங்கள்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா என்பது மெத்தைகளில் இருந்து மோசமான வாசனைகளை அகற்று உதவும் மிகவும் பயனுள்ள கரிம பொருட்களில் ஒன்றாகும். அதன் deodorant பண்புகள் mold மற்றும் உடல் திரவங்கள் காரணமாக ஏற்படும் மோசமான வாசனைகளை நீக்க உதவுகின்றன.
இது ஒரு இயற்கை சோப்பு போல செயல்படுகிறது, கறை அல்லது எதிர்பாராத சிந்திய திரவங்களை அகற்றுவதில் திறம்படச் செயல்படுகிறது.மெத்தைத் துணியைப் பாதுகாப்பதின் மூலம் அதன் ஆயுளை நீடிக்கச் செய்கிறது. இந்த விஷயத்தில், பேக்கிங் சோடாவின் பண்புகளைக் கூட்டி ஒரு ஆழ்ந்த சுத்திகரிப்புக்காக ஹைட்ரஜன் பெராக்சைடை சேர்க்கலாம்,
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்
• ¼ கப் பேக்கிங் சோடா (50 கிராம்)
• 1 கப் 3% ஹைட்ரஜன் பெராக்சைடு (250 மிலி)
• 2 சொட்டு திரவ சோப்
தயாரிப்பு
• பேக்கிங் சோடாவை ஒரு வாளிக்குள் ஊற்றவும். பின்னர், ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்க்கவும்.
• இதை நன்கு கலந்து பின் திரவ சோப்பைச் சேர்க்கவும்.
• நன்கு கலந்த கலவையைப் பெற்ற பிறகு, கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேமிக்கவும்.
எப்படி உபயோகிப்பது
• பயன்பாட்டிற்கு முன்னர் இதை நன்கு கலக்கி மெத்தையின் மீது தெளிக்கவும்.
• தெளித்த திரவம் முற்றிலும் வறண்டுபோகும் வரை காத்திருங்கள் . முடிந்தால், மெத்தையை தூய்மையான காற்று கிடைக்கக்கூடிய இடத்தில் வைக்கவும்.
• காய்ந்தவுடன் பேக்கிங் சோடாவின் எச்சத்தை நீக்க ஒரு பிரஷ்ஷைக் கொண்டு துடைக்கவும்.
• குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஒருமுறை இதைச் செய்யவும்.
வெள்ளை வினிகர்
வெள்ளை வினிகருக்கு இனிமையான வாசனை இல்லை. இருப்பினும், மெத்தைகளில் இருந்து மோசமான வாசனைகளை சீராக்க சிறந்த வீட்டு வைத்தியம் இதுவே. கூடுதலாக, இது அலர்ஜிக்கு சிறந்த தீர்வு ஏனெனில் அது மெத்தைப் பரப்புகளில் வாழும் பூச்சிகள் மற்றும் பாக்டீரியாக்களை நீக்குகிறது.
இருப்பினும், நீங்கள் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். மிகவும் இனிமையான வாசனைக்கு, இதனுடன் லாவெண்டர் அல்லது எலுமிச்சை அத்தியாவசிய எண்ணெய்களை இணைக்கலாம்
.
தேவையான பொருட்கள்:
• ½ கப் வெள்ளை வினிகர் (125 மிலி)
• 1 கப் சூடான நீர் (250 மிலி)
• அத்தியாவசிய எண்ணெயில் 10 சொட்டுகள்
தயாரிப்பு
• ஒரு கப் சூடான நீரில் வெள்ளை வினிகரை சேர்க்கவும் .
• பின்னர், அத்தியாவசிய எண்ணெயைச் சேர்த்து வரும் கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேர்க்கவும்.
எப்படி உபயோகிப்பது:
• மெத்தை மீது இதைத் தெளிக்கவும் மற்றும் காற்றில் உலரச் செய்யவும்.
• விரும்பத்தகாத வாசனையைக் கவனிக்கும்போதெல்லாம் இதைப் பயன்படுத்தவும்.
குறிப்பு: இந்த தீர்வால் கறையை நீக்க முடியாது. எனவே, உங்கள் மெத்தையை முழுவதுமாக சுத்தம் செய்வதற்கு, நீங்கள் அதை மற்ற தீர்வுகளோடு சேர்த்துக் கொள்ளலாம்.
பேக்கிங் சோடா, லாவெண்டர் எண்ணெய்:
லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய் தேவையற்ற நாற்றங்களை மறைக்க வல்ல ஒரு இயற்கையான காற்று சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இதனால்தான் இதை பேக்கிங் சோடாவுடன் இணைக்கும் போது மோசமான மெத்தையின் வாசனையை எளிதாக நீக்கலாம். மேலும் இந்தக் கரைசல் கிருமி நாசினி மற்றும் பூச்சிகளை அகற்றும் வேலையை சிறப்பாகச் செய்கிறது.
தேவையான பொருட்கள்
• 1 கப் பேக்கிங் சோடா (200 கிராம்)
• 20 சொட்டுகள் லாவெண்டர் எண்ணெய்
தயாரிப்பு
• பேக்கிங் சோடாவை ஒரு கிண்ணத்தில் ஊற்றவும்.
• அடுத்து, லாவெண்டர் எண்ணெயை அதனுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
• இந்த பேஸ்ட் ஈரமாக இருந்தால், ஒரு சில நிமிடங்களுக்கு காயவையுங்கள்.
எப்படி உபயோகிப்பது
• மெத்தை மீது இந்தத் தயாரிப்பை பரப்பவும்
• 10 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு ப்ரெஷ் கொண்டு துடைக்கவும்.
• இறுதியாக vacuum கொண்டு பேக்கிங் சோடாவின் எச்சங்களை நீக்கவும்.
• ஒரு மாதத்திற்கு ஒரு முறை இதை உபயோகிக்கவும்.
பெட்ஷீட்
படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் மெத்தையின் பெட்ஷீட்களை அகற்றிவிட்டு இரண்டு மணி நேரத்திற்கு அதற்கு ஓய்வு கொடுங்கள். என்ன முறைகளை உபயோகித்தாலும் ஈரப்பதமும் வெப்பமும் காரணமாக உருவாகும் கிருமிகளை தடுக்க உங்கள் மெத்தைகளை காற்றோட்டமான இடத்தில் வைப்பது சிறந்தது.
உங்கள் படுக்கை துர்நாற்றம் வீசுகிறதா? நீங்கள் எப்போதாவது உங்கள் மெத்தையின் கிருமிகளை அழித்திருக்கிறீர்களா? அப்பொழுது நீங்கள் மோசமான வாசனைகளைக் கவனித்திருந்தால், உங்கள் மெத்தையை புதியதாக வாசனை வீசச்செய்ய இந்தத் தந்திரங்களைப் பயன்படுத்தவும்.
துரோகங்களும், ரகசியங்களும் நிறைந்த நம்பவே முடியாத 5 இந்திய சதி கோட்பாடுகள்.!
December 30, 2018சதியாலோசனை கோட்பாடுகள் - சுருக்கமாக சொன்னால் திட்டமிட்டு மறைக்கப்படும் ரகசியங்கள். விளக்கமாக சொன்னால், ஒரு குழுவோ அல்லது ஒரு நிறுவனமோ அல்லத...
துரோகங்கள் நிறைந்த நம்பவே முடியாத 5 இந்திய சதி கோட்பாடடுகள்.!
பொதுவாக ரகசியங்கள் என்றாலே அதில் ஏதோ சிக்கல்களும், பிரச்சனைகளும் இருக்கும் என்று தான் அர்த்தம். அப்போது ஒரு கூட்டமே/ ஒரு நாடே/ ஒரு அரசாங்கமே மறைக்கும் ரகசியங்களில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்.?
எப்படியோ எங்கோ கசிந்து.!
அப்படியாக, இந்தியாவின் பண்டைய கால புராண கதைகளில் இருந்து அதிநவீன தொழில்நுட்ப காலமான இன்றுவரை மிகவும் பாதுகாப்பக்க மறைக்கப்படும் சதியாலோசனை கோட்பாடுகள் ஆயிரமாயிரம் உள்ளன. அவைகளில் சில மட்டுமே எப்படியோ எங்கோ கசிந்து வெளிப்பட்டுள்ளன. அவைகளில் மிகவும் வியக்கத்தக்க 5 கோட்பாடுகளை பற்றிய விவரங்களையும், அது சார்ந்த சதியாலோசனை கோட்பாடுகளைப்பற்றி இதுநாள் வரை வெளியாகி உள்ள தகவல்களையும் உள்ளடக்கியதே இந்த கட்டுரை.!
இந்திய சதி கோட்பாடு #05 :
ஷிவ்கார் பாபூஜி டால்பேட் அவர்களின் விமான டிசைன் பற்றியது. ரைட் சகோதரர்கள் உலகின் முதல் விமானத்தை கண்டுப்பிடித்த 8 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியரான ஷிவ்கார் பாபூஜி டால்பேட், அவரின் சொந்த விமானம் ஒன்றை உருவாக்கியதாகவும், அது சுமார் 1500 அடி உயரம் வரை பறக்க கூடியது என்றும் கூறுகிறது ஒரு சதியாலோசனை கோட்பாடு.
நிதி உதவி வழங்கி ஊக்கப்படுத்த வேண்டாம்.!
1895-ஆம் ஆண்டு விபத்துக்குள்ளான அந்த விமானத்திற்கு எந்த விதமான நிதி உதவியும் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டாம் என்று பரோடா மகாராஜாவிடம் பிரிட்டிஷ் அரசு கேட்டுக் கொண்டதாகவும் விளக்கம் அளிக்கிறது அந்த சதியாலோசனை கோட்பாடு.
வரலாற்று துரோகம்.!
உலகின் முதல் விமான தொழில்நுட்பம் சார்ந்த வடிவமைப்பு ஒரு இந்தியரிடம் இருப்பதா என்று பிரிட்டிஷ் அரசாங்கம் செய்த வரலாற்று துரோகத்திற்க்கும், அப்படி ஒரு விமானம் பறந்தது என்பதற்கும் எந்த விதமான சான்றும் இல்லை.
மிகவும் பலவீனமானது
மறுபக்கம் ஷிவ்கார் பாபூஜி டால்பேட் (Shivkar Babuji Talpade) அவர்களின் சொந்த பறக்கும் ஊர்தி வடிவமைப்பு என்று கூறப்படும் அந்த விமான டிசைன் ஆனது மிகவும் பலவீனமானது போன்று தெரிகிறது என்ற கருத்தும் நிலவுகிறது.
இந்திய சதி கோட்பாடு #04 :
பண்டைய கால இந்தியாவில் நடந்த அணு போர் பற்றியது. 2010-ஆம் ஆண்டில் இந்திய நகரமான ஜோத்பூரில் கதிரியக்க சாம்பல் (Radioactive ash) கண்டுப்பிடிக்கப்பட்ட பின்னரே இந்த சதியாலோசனை கோட்பாடு கிளம்பியது.
கதிரியக்க சாம்பல்.!
குறிப்பிட்ட மகாபாரத வசனங்களில் மகாபாரத யுத்தமானது நடந்தாக சொல்லப்படும் இந்த இடத்தில் கதிரியக்க சாம்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளத்தால், பண்டைய காலத்திலேயே அணு ஆயுதப்போர் நடத்தப்பட்டுள்ளது என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. இதன் வழியாக, பண்டைய இந்தியர்களின் கற்பனைக்கு எட்டாத தொழிநுட்ப வளர்ச்சியையும் யூகிக்க முடிகிறது.
இந்திய சதி கோட்பாடு #03 :
இந்திய சதி கோட்பாடு #03 :
மன்னர் அசோகரின் ரகசிய சமூகம் என்று கூறப்படும் அடையாளம் தெரியாத 9 பேர் பற்றியது. மனித இனத்திற்கு அத்யாவசியமான 9 விடயங்களை உள்ளடக்கிய 9 புத்தகங்கள் கொடுக்கப்பட்டு மனித இனத்தை அழிவை நோக்கி செல்ல விடாமல் பாதுகாக்கும்படி அசோகரால் 9 பேர் நியமிக்கப்பட்டனர் என்கிறது ஒரு சதியாலோசனை கோட்பாடு.
தி நயன் அன்நோன்.!
அப்படியாக அந்த புத்தகங்களில் போர், சமூகவியல், தகவல்தொடர்பு, ரசவாதம், மரணம், நுண்ணுயிரியல், ஒளி, ஈர்ப்பு மற்றும் அண்டவியல் ஆகிய 9 விடயங்கள் அடங்கி இருந்தது என்றும் அந்த கோட்பாட்டில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ரகசிய சமூக நிகழ்வானது கிபி 270-ல் நடைபெற்றது என்று நம்பப்படுகிறது. இது சார்ந்த 'தி நயன் அன்நோன்' (The Nine Unknown) என்றவொரு நாவலும் இருக்கிறது என்பது கூடுதல் சுவாரசியம்.!
இந்திய சதி கோட்பாடு #02 :
இந்திய ராணுவத்தின் கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணையான அக்னி 5-ன் தாக்குதல் எல்லை பற்றியது. அதாவது, அக்னி 5 ஏவுகணையின் தாக்குதல் தூரம் (வீச்சு) மிகவும் ரகசியமாய் வைக்கப்பட்டிருந்தது, பின் அது 5500 - 5800 கிமீ தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடியது என்று இந்திய அரசாங்கம் கூறியது. ஆனால், 17000 கிலோ எடை கொண்ட அக்னி 4 ஏவுகணையானதே சுமார் 4000கிமீ தூரம் வரை சென்று தாக்கும் போது, அக்னி 5 அதைவிட அதிகமான தூரத்தை கடக்கும் என்கிறார்கள் சில சதியாலோசனை கோட்பாட்டாளர்கள்.
முக்கியமாக சீனா.!
சில கணிப்புகளின் படி, அக்னி 5 ஏவுகணையானது சுமார் 50000 கிலோ எடையும், 8000 கிமீ வரை பாய்ந்து சென்று தாக்கும் வல்லமையும் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், எதிரிகளை கலங்கடிக்கவே (முக்கியமாக சீனாவை) அக்னி 5-ன் தாக்குதல் எல்லை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் கருத்து கூறுகிறார்கள்.
இந்திய சதி கோட்பாடு #01 :
இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஹோமி பாபாவை (Homi Bhabha) கொலை செய்தது சிஐஏ தானா.? என்பது பற்றியது. ஹோமி பாபா உயிர் இழக்க காரணமான விமான விபத்தானது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை சம்பவம் என்கிறது ஒரு சதியாலோசனை கோட்பாடு.
இந்தியா முன்னேற்றம் அடைவதை நிறுத்த கொலை.!
தோரியத்தில் (Thorium ) இருந்து சக்தியை பிரித்து எடுப்பதில் இந்தியா முன்னேற்றம் அடைவதை நிறுத்த அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமை (CIA) தான் ஹோமி பாபாவை கொலை செய்தது என்கிறார்கள் சில சதியாலோசணை கோட்பாட்டாளர்கள். ஆனால், இந்த கோட்பாடுக்கு இதுநாள் எந்த விதமான சிறு ஆதாரமும் கூட இல்லை.
உங்களின் புதிய வாழ்க்கை வெற்றிக்கரமாக அமைய சாணக்கியர் கூறும் இந்த அடிப்படை தகுதிகள் இருக்க வேண்டும்
December 30, 2018சாணக்கியர் ஒரு மிகச்சிறந்த அறிவாளி மற்றும் தந்திரத்தில் தலைசிறந்தவர் என்று நாம் நன்கு அறிவோம். அதற்கு சிறந்த உதாரணம் நூற்றாண்டுகள் கடந்தும்...
வாழ்க்கையின் அனைத்து தருணங்களுக்கும் சரியான வழிமுறையை கூறிய சாணக்கியர் புதியதாக ஒரு செயலை தொடங்கும்போது அதனை தொடங்கவேண்டும் என்று கூறாமல் விட்டிருப்பாரா?. கண்டிப்பாக இல்லை, புதிய வேலையோ அல்லது தொழிலோ தொடங்கும்போது அதனால் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது? என்பதை தன் சாணக்கிய நீதி நூலில் கூறியுள்ளார். இந்த பதிவில் புதிய செயல்கள் தொடங்கும் முன் நீங்கள் செய்ய வேண்டியவை என்னென்ன என்று பார்க்கலாம்.
திறன்
எந்தவொரு புதிய திட்டத்தையோ அல்லது தொழிலையோ தொடங்கும் முன் உங்கள் திறனை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். உங்கள் திறமைக்கேற்ற வேலையை மட்டுமே நீங்கள் செய்ய ஒத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிக்கொள்ள நேரிடும்.
நாவடக்கம்
உங்களின் புதிய முயற்சியின் வெற்றியும், தோல்வியும் நீங்கள் உங்கள் நாக்கை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொறுத்துதான் இருக்கிறது என்று சாணக்கியர் கூறுகிறார். நீங்கள் எவ்வளவு மென்மையாகவும், நாவடக்கத்துடனும் பேசுகிறீர்களா உங்கள் வெற்றிவாய்ப்பு அவ்வளவு அதிகமாக இருக்கும்.
எதிரிகளை நண்பர்களாக்குதல்
இதனை மிகவும் எளிதில் புரிந்துகொள்ளலாம். நீங்கள் அனைவரிடமும் இனிமையாக நடந்துகொள்ளும்போது உங்கள் எதிரிகள் அனைவரும் தானாக உங்கள் நண்பர்கள் ஆகிவிடுவார்கள். இது உங்கள் முயற்சியின் வெற்றி வாய்ப்பை மேலும் அதிகரிக்கும்.
ஆரோக்கியம்
கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் மிகச்சிறந்த ஒரு பரிசு எதுவென்றால் அது நம் உடல்தான். எனவே எந்தவொரு புதுமுயற்சி தொண்டைக்கும் முன்னரும் உங்கள் ஆரோக்கியத்தை பரிசோதிப்பதும், பாதுகாப்பதும் அவசியம்.
மனைவி
ஒரு புது வேலையோ அல்லது புது தொழிலோ தொடங்கும் முன்னர் உங்கள் மனைவியிடம் ஆலோசிக்க வேண்டியது அவசியமாகும். உங்கள் மனைவி உங்கள் வாழ்க்கையின் பாதியாவார். எனவே நீங்கள் எந்தவொரு முயற்சி தொடங்கும் முன்னரும் அவர்களிடம் ஆலோசிக்க வேண்டியது அவசியமாகும்.
ரகசியங்களை பாதுகாத்தல்
ரகசியங்களை பாதுகாத்தல்
ஒரு புது விஷயத்தை தொடங்கும்போதோ அல்லது முயற்சிக்கும்போதோ அதற்கான யோசனைகளை உங்களுக்குள்ளேய வைத்துக்கொள்ள வேண்டுமென்று சாணக்கியர் கூறுகிறார். அனைவரிடமும் உங்கள் திட்டங்களை கூறுவது உங்கள் வெற்றியை வெகுவாக பாதிக்கும்.
கடினமாக இருக்க வேண்டும்
நீங்கள் வாழ்க்கையில் வெற்றிகரமாக இருக்க விரும்பினால் வாழ்க்கையில் சில கடினமான முடிவுகளை நிச்சயம் எடுக்கவேண்டும். இதற்காக சிலரிடம் நீங்கள் கடுமையாக நடந்து கொள்ளக்கூட நேரிடலாம். அதற்காக தயங்காதீர்கள்.
ஸ்டீபன் ஹாக்கிங் சொன்ன ஆபத்து 'மிகவும் தாமதமாக' தெரிய வந்துள்ளது!
December 30, 2018அறிவார்ந்த அன்னிய நாகரிகங்கள் இருக்கிறார்களா? இல்லையா என்கிற கேள்வி சபையில் எழும் போதெல்லாம் அந்த உரையாடலின் முடிவானது இன்னும் ஆழமாக தேடி ப...
ஸ்டீபன் ஹாக்கிங் சொன்ன ஆபத்து 'மிகவும் தாமதமாக' தெரிய வந்துள்ளது!
அவற்றை எப்படி கண்டுபிடிப்போம்? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? பார்க்க எப்படி இருப்பார்கள்? அவர்களை அடைய நாம் என்ன என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - அல்லது எப்போது - நாம் அவர்களை கண்டுபிடிப்போம், அல்லது நமக்கு முன்னர் நம்மை அவர்கள் கண்டுபிடிப்பார்களா? இப்படி ஏகப்பட்ட கேள்விகள் உள்ளன.
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஸ்டீபன் ஹாக்கிங்
ஆனால் இதற்கெல்லாம் இயற்பியல் பேராசிரியர் மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஒரே பதில் - அவர்களை தேட வேண்டாம் என்பது மட்டும் தான். அவர் ஏன் அப்படி கூறுகிறார்? அவரின் கூற்றுப்படி, மேம்பட்ட நாகரிகங்களை (ஏலியன்ஸ்) தேடி கண்டு பிடிப்பது அல்லது அவர்களை சென்று அடைவது என்பது மனித நேயத்திற்கும், அவர்கள் வாழும் இந்த பூமிக்கும் ஒரு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்க முடியும். இன்னும் சொல்லப்போனால் அவர்களை தொடர்புகொள்ள கூட முயற்சிக்க கூடாது என்கிறார். ஆனாலி நிலைமை கைமீறி விட்டது.
எஸ்எஸ்ஹேக்கிங்
ஏனெனில் நாம் (மனித இனம் ) ஏற்கனவே பல ஆண்டுகளாக அண்டத்தில் முடிந்த அளவிற்கு நமது இருப்பை ஒளிபரப்பியிருக்கிறோம். அதாவது தூது அனுப்பி உள்ளோம்.
ஹேக்கிங்கின் "இறந்துபோன" இந்த எச்சரிக்கை ஆனது ஸ்டீபன் ஹாக்கிங்கின் பிடித்த இடங்கள் என்று அழைக்கப்படும் புதிய ஆன்லைன் படத்தின் வழியாக மீண்டும் உயிர் பெற்று உள்ளது. அந்த படத்தில் எஸ்எஸ்ஹேக்கிங் என்று அழைக்கப்படும் சிஜிஐ விண்கலம் தான் தனக்கு மிகவும் பிடித்த இடம் என்று அவர் கூறியதாகவும் தெரிய வருகிறது.
ஜிலீஸ் 832சி
அந்த படத்தில் "நான் வளர்ந்தவுடன், நாம் தனியாக இல்லை என்பதை விட மிகவும் உறுதியாக நம்புகிறேன். வாழ்நாள் முழுவதும் யோசித்து, புதிய உலகளாவிய முயற்சியை கண்டுபிடிப்பதற்கு நான் பிரேக்த்ரோ லிசன் ப்ராஜக்ட் (Breakthrough Listen project) திட்டம் மூலம் உதவி செய்கிறேன். இது நம்மை போன்றே கிரகங்களில் வாழ்க்கைக்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதை ஆராயும் ஒரு திட்டம், அதன் விளைவாக அருகில் உள்ள மில்லியன் கணக்கான நட்சத்திரங்களை ஸ்கேன் செய்யப்படும். ஒருநாள் ஜிலீஸ் 832சி போன்ற ஒரு கிரகத்தில் இருந்து ஒரு சிக்னலைப் பெறுவோம். ஆனால் நாம் எச்சரிக்கையாக பதில் அளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
நட்சத்திரங்களை ஸ்கேன் செய்யும்
ஜிலீஸ் 832சி என்பது பூமியில் இருந்து 16 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை உங்களுக்கு பிரேக்த்ரோ லிசன் ப்ராஜக்ட் (Breakthrough Listen project) பற்றி தெரியாது என்றால் - அது ரேடியோ சிக்னல்களுக்கான நெருங்கிய நட்சத்திரங்களை ஸ்கேன் செய்யும் ஒரு திட்டமாகும், இதை நிகழ்த்துவதின் மூலம் அண்டத்தில் உள்ள அறிவார்ந்த வாழ்க்கை ஆதாரத்தை (ஏலியன்ஸ்) கண்டுபிடிக்க உதவலாம் என்று நம்பப்படுகிறது. இது ஒரு லட்சிய முயற்சியாகும், இந்த திட்டம் ரஷ்ய பில்லியனர் யூரி மில்னர் நிதியுதவியின் கீழ் (சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) நடக்கிறது.
யாருக்கும் தெரியாது
யாருக்கும் தெரியாது
சமீபத்தில், இந்த 100 மில்லியன் டாலர்கள் திட்டமானது, அதன் கவனத்தை அனுகூலமான 'ஏலியன் மெகாஸ்ட்ரேக்ஸருக்கு' மாற்றுவதாக அறிவித்தது, அது சில நட்சத்திரங்கள் கொண்ட கேஐசி 8462852 என அழைக்கப்படும் ஒரு விண்மீனைக் குறிக்கின்றது. ஆய்விற்காக இந்த விண்மீன் குறி வைக்கப்பட்டதற்கு ஒரு நியாயமான காரணம் உள்ளது. அது இந்த விண்மீன் மண்டலத்தில் ஏற்படும் மின்மினுப்பு தான். அது 'இண்டர்ஸ்டெல்லர் ஜங்க்' அல்லது ஒரு வால்மீன் குச்சியால் ஏற்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் அங்கு உண்மையில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.
மனித இனத்தின் அழிவு
பிரபஞ்சத்தில் அறிவார்ந்த வாழ்க்கையை கண்டுபிடிக்க ஹாக்கிங் அசாதாரண முயற்சிகளை செய்த போதிலும், அவர் உண்மையில் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்ய வேண்டாம் என்கிற வெளிப்படையான மற்றும் முரண்பாடான கருத்தையே முன்வைத்தார். அது மனித இனத்தின் அழிவு அல்லது அந்நிய படையெடுப்பு போன்ற சாத்தியமான ஆபத்துகளை உருவாக்கும் என்பது தான் அவரின் கருத்து.
பாக்டீரியா
வெளியான படத்தில் "அவர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்கள், நாம் எப்படி பாக்டீரியாவை பார்க்கிறோமோ அதை போல் தான் அவர்கள் நம்மை பார்ப்பார்கள்" என்று அவர் கூறுகிறார். ஆகமொத்தம் பிள்ளையார் சுழி போட்டாகிவிட்டது. இனி முன் எச்சரிக்கை எதையும் நிகழ்த்த முடியாது. தயார் நிலையில் மட்டுமே இருக்க முடியும்.