உங்களின் புதிய வாழ்க்கை வெற்றிக்கரமாக அமைய சாணக்கியர் கூறும் இந்த அடிப்படை தகுதிகள் இருக்க வேண்டும்

சாணக்கியர் ஒரு மிகச்சிறந்த அறிவாளி மற்றும் தந்திரத்தில் தலைசிறந்தவர் என்று நாம் நன்கு அறிவோம். அதற்கு சிறந்த உதாரணம் நூற்றாண்டுகள் கடந்தும்...

சாணக்கியர் ஒரு மிகச்சிறந்த அறிவாளி மற்றும் தந்திரத்தில் தலைசிறந்தவர் என்று நாம் நன்கு அறிவோம். அதற்கு சிறந்த உதாரணம் நூற்றாண்டுகள் கடந்தும் அவர் இன்றும் நம் நினைவில் இருப்பதுதான். அவர் கூறிய வாழக்கை வழிமுறைகள் தற்காலத்திற்கு மட்டுமல்ல, இன்னும் பல நூற்றாண்டுகளுக்கும் பொருந்தக்கூடியதாகும். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை தன்னுடைய நூல்கள் வழியாக உலகிற்கு இன்றும் கூறிக்கொண்டு இருக்கிறார் சாணக்கியர்.

வாழ்க்கையின் அனைத்து தருணங்களுக்கும் சரியான வழிமுறையை கூறிய சாணக்கியர் புதியதாக ஒரு செயலை தொடங்கும்போது அதனை தொடங்கவேண்டும் என்று கூறாமல் விட்டிருப்பாரா?. கண்டிப்பாக இல்லை, புதிய வேலையோ அல்லது தொழிலோ தொடங்கும்போது அதனால் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது? என்பதை தன் சாணக்கிய நீதி நூலில் கூறியுள்ளார். இந்த பதிவில் புதிய செயல்கள் தொடங்கும் முன் நீங்கள் செய்ய வேண்டியவை என்னென்ன என்று பார்க்கலாம்.

திறன்

எந்தவொரு புதிய திட்டத்தையோ அல்லது தொழிலையோ தொடங்கும் முன் உங்கள் திறனை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். உங்கள் திறமைக்கேற்ற வேலையை மட்டுமே நீங்கள் செய்ய ஒத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிக்கொள்ள நேரிடும்.

நாவடக்கம்

உங்களின் புதிய முயற்சியின் வெற்றியும், தோல்வியும் நீங்கள் உங்கள் நாக்கை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொறுத்துதான் இருக்கிறது என்று சாணக்கியர் கூறுகிறார். நீங்கள் எவ்வளவு மென்மையாகவும், நாவடக்கத்துடனும் பேசுகிறீர்களா உங்கள் வெற்றிவாய்ப்பு அவ்வளவு அதிகமாக இருக்கும்.

எதிரிகளை நண்பர்களாக்குதல்

இதனை மிகவும் எளிதில் புரிந்துகொள்ளலாம். நீங்கள் அனைவரிடமும் இனிமையாக நடந்துகொள்ளும்போது உங்கள் எதிரிகள் அனைவரும் தானாக உங்கள் நண்பர்கள் ஆகிவிடுவார்கள். இது உங்கள் முயற்சியின் வெற்றி வாய்ப்பை மேலும் அதிகரிக்கும்.

ஆரோக்கியம்

கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் மிகச்சிறந்த ஒரு பரிசு எதுவென்றால் அது நம் உடல்தான். எனவே எந்தவொரு புதுமுயற்சி தொண்டைக்கும் முன்னரும் உங்கள் ஆரோக்கியத்தை பரிசோதிப்பதும், பாதுகாப்பதும் அவசியம்.


மனைவி

ஒரு புது வேலையோ அல்லது புது தொழிலோ தொடங்கும் முன்னர் உங்கள் மனைவியிடம் ஆலோசிக்க வேண்டியது அவசியமாகும். உங்கள் மனைவி உங்கள் வாழ்க்கையின் பாதியாவார். எனவே நீங்கள் எந்தவொரு முயற்சி தொடங்கும் முன்னரும் அவர்களிடம் ஆலோசிக்க வேண்டியது அவசியமாகும்.
ரகசியங்களை பாதுகாத்தல்

ரகசியங்களை பாதுகாத்தல்

ஒரு புது விஷயத்தை தொடங்கும்போதோ அல்லது முயற்சிக்கும்போதோ அதற்கான யோசனைகளை உங்களுக்குள்ளேய வைத்துக்கொள்ள வேண்டுமென்று சாணக்கியர் கூறுகிறார். அனைவரிடமும் உங்கள் திட்டங்களை கூறுவது உங்கள் வெற்றியை வெகுவாக பாதிக்கும்.

கடினமாக இருக்க வேண்டும்

நீங்கள் வாழ்க்கையில் வெற்றிகரமாக இருக்க விரும்பினால் வாழ்க்கையில் சில கடினமான முடிவுகளை நிச்சயம் எடுக்கவேண்டும். இதற்காக சிலரிடம் நீங்கள் கடுமையாக நடந்து கொள்ளக்கூட நேரிடலாம். அதற்காக தயங்காதீர்கள்.

மேலும் பல...

0 comments

Blog Archive