ஒரு பீனிக்ஸ் பறவையின் 15 வருட சினிமா வாழ்க்கை... நயன்தாரா: சாதித்ததும்... சறுக்கியதும்!

நடிகை நயன்தாரா திரைத்துறைக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவடைவதை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் உச்ச நட...

நடிகை நயன்தாரா திரைத்துறைக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவடைவதை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் உச்ச நடிகை யார் என்று கேட்டால் சற்றும் யோசிக்காமல் நயன்தாரா என பதில் கூறிவிடலாம். இப்போது எல்லாம் நாயகனை மனதில் வைத்து கதை எழுதும் இயக்குனர்களைவிட, நயன்தாராவை மனதில் வைத்து கதை எழுதும் இயக்குனர்கள் தான் அதிகம்.

அந்த அளவுக்கு தனது சினிமா கேரியரில் கோலாச்சி நிற்கிறார் நயன். அதன்காரணமாகவே அவரை லேடி சூப்பர் ஸ்டார் என அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

2018ம் ஆண்டின் சூப்பர் "ஸ்டார்ஸ்" யாரு.. வாங்க.. ஓட்டுப் போடுங்க!

நயன்தாராவின் முதல் படம்

நயன்தாராவின் இந்த அசுர வளர்ச்சி, ஏதோ ஒரே நாளில் வந்துவிட்டது அல்ல. 2003ம் ஆண்டு கிறிஸ்துமுஸ் நாளில் 'மனசினக்கரே' மலையாள படம் மூலம் அறிமுகமானது டயானா மரியம் குரியன் எனும் நயன்தாராவின் திரை வாழ்க்கை. தமிழில் வெளிவந்த அவரது முதல் படம் சரத்குமாரின் ஐயா. அதைத்தொடர்ந்து ரஜினியின் சந்திரமுகி.

இளம் ஹீரோக்களின் படங்கள்

இந்த படங்களில் நடித்தது நயன்தாராவுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தாலும், இளம் ஹீரோக்கள் அவரை ஒப்பந்தம் செய்த தயங்கினர். ஆனால் தன்னால் எல்லா நடிகர்களுடனும் நடிக்க முடியும் என நிரூபித்துக்காட்டினார். சிம்புடன் வல்லவன், தனுஷுடன் யாரடி நீ மோகினி, அஜித்துடன் பில்லா, விஜய்யுடன் வில்லு என எல்லா ஹீரோக்களுடனும் நடித்தார்.

ஆசைப்படும் நடிகர்கள்

சூர்யா, ஜெயம் ரவி, ஆர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என நயன்தாராவுடன் நடிக்காத ஹீரோக்களே இல்லை என்ற நிலைதான் இன்று. நயன்தாராவுடன் ஒரு படமானாலும் நடித்துவிட வேண்டும் என்ற போட்டி தான் இப்போது இங்கு நிகழ்கிறது.

சராசரி ஹீரோயின்

தொடக்க காலத்தில் எல்லா ஹீரோயின்களையும் போல, சராசரி கிளாமர் ரோல்களில் தான் நடித்து வந்தார் நயன்தாரா. அதுவும் பில்லா படத்தில் பிகினி உடையில் நயன்தாராவை பார்த்து, ஜொள்ளுவிடாத ஆட்களே இங்கில்லை எனக் கூறலாம்.

இமேஜை மாற்றிய ராஜா ராணி

இப்படிப்பட்ட நிலையில் இருந்த நயன்தாராவின் இமேஜை மாற்றியது ராஜா ராணி திரைப்படம் தான். அட்லி இயக்கத்தில் வெளிவந்த அந்த படத்தில், குறுப்புக்கார பெண்ணாகவும், மெச்சூர்டான மனைவி ரோலிலும் மிகச்சிறப்பாக நடித்திருப்பார் நயன்தாரா. இதேபோல் தனி ஒருவன் படமும் நயன்தாராவின் நடிப்பு திறனுக்கு தீனிபோட்டது.

ஹீரோயின் படங்கள்

இந்த படத்தை தொடர்ந்து , அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நோடிகள் போன்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்த நயன்தாராவுக்கு கை மேல் பலன் கிடைத்தது. இந்த படங்களை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். வசூல் ரீதியாக நல்ல ரிசல்ட்டை தந்தன இப்படங்கள்.

பேர் சொல்லும் படங்கள்

இதனை தொடர்ந்து தான் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் அவர். ஐரா, கொலையுதிர் காலம் என நயன்தாராவின் பேர் சொல்லும் படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதில் அஜித்தின் விஸ்வாசமும் ஒன்று.
நயன்தாரா மீதான குற்றச்சாட்டு
நயன்தாரா மீதான குற்றச்சாட்டு

அதேசமயம் நயன்தாரா மீது ஏராளமான புகார்கள் வாசிக்கப்படுவதும் உண்டு. அவர் நடிக்கும் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்கு கூட வருவதில்லை என்பது முக்கியமான புலம்பல். ஆனால் கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் பட புரோமோஷன்களை அவர் தவிர்த்தே வருகிறார். குறிப்பாக பத்திரிகையாளர்களை சந்திப்பதே இல்லை அவர். இருப்பினும் அவரை பற்றி எழுதாத நாட்களே பத்திரிகைகளுக்கு இல்லை.

சறுக்கல்கள்

தனிப்பட்ட வாழ்க்கையில் பல சறுக்கல்களை சந்தித்தவர் நயன். காதல் விவகாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு பெறும் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தவர். வேறொருவராக இருந்திருந்தால், இந்த மனஉளைச்சலில் இருந்து மீண்டு வருவதற்கே ஆண்டுகள் பல பிடித்திருக்கும்.

ரேஸில் ஓடும் குதிரை

ஆனால் நயன்தாராவோ ரேஸில் ஓடும் குதிரை கீழே விழுந்தமாத்திரத்தில் சட்டென எழுந்து ஓடுவது போல், சினிமா ரேஸில் முன்பைவிட அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார். தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைகள், அவரை பட்டை தீட்டிய வைரமாக மாற்றியிருக்கின்றன. இன்றைய சினிமாவில் நயன்தாரா ஒரு சகாப்தம்.... தொடரட்டும் அவரது வெற்றிப் பயணம்...

மேலும் பல...

0 comments

Blog Archive