சீதாப்பழம் பற்றிய அதிர்ச்சி வதந்திகள்! யாரும் நம்பாதீங்க...?

பழங்கள் ஆரோக்கியமானவை என்பது அனைவருக்கு தெரியும். பழங்களைப் பிடித்க்கதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். நமது தினசரி உணவில் பழங்களை கட்டாயம்...

பழங்கள் ஆரோக்கியமானவை என்பது அனைவருக்கு தெரியும். பழங்களைப் பிடித்க்கதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். நமது தினசரி உணவில் பழங்களை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பழங்கள் பல நன்மைகளை செய்கின்றது. எல்லா வகைப் பழங்களையும் சாப்பிடுவது நல்லது. ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு சுவை மற்றும் குணம் உண்டு.

சூடு அதிகம்

மாம்பழம், பப்பாளி போன்ற பழங்கள் வெப்பமண்டலமான பிரதேசங்களில் விளைவதால் அவை சூடு அதிகம் உள்ள பழங்களாக கருதப்படுகின்றன. ஆகவே இவை உடல் வெப்பத்தை அதிகரிக்கும் பழங்களாக உள்ளன.

வாழைப்பழம், சீதாப்பழம் போன்றவை உடலில் குளிர்ச்சியை அதிகரித்து சளியை உண்டாக்குகின்றன. சில பழங்களை தவிர்க்க சில அறிவியல் பூர்வமான நிருபணங்கள் இருப்பது நம்மை ஆச்சர்யப்பட வைப்பதாக உள்ளது.

எப்படி கண்டுபிடிக்கலாம்?

சூடு அதிகம் உள்ள பழங்கள் மற்றும் குளிர்ச்சியான பழங்கள் என்று எவ்வாறு பிரிக்கப்படுகின்றன? எல்லா பழங்களையும் சூடு மற்றும் குளிர்ச்சி என்று வகைபடுத்துகிறது ஆயுர்வேதம்.

பழங்களின் தன்மை மற்றும் அதனை எடுத்துக் கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றம் போன்றவற்றை பொறுத்து இந்த பிரிவுகள் தோன்றுகிறது. உடலின் உட்புற வெப்பநிலையை சில பழங்கள் அதிகரிக்கும், சில பழங்கள் குறைக்கும். இதனை வைத்து அந்த பழம் குளிர்ச்சியானது மற்றும் சூடானது என்று வகைப்படுத்தப்படுகிறது.

சீதாப்பழம் குளிர்ச்சியானதா?

சீதாப்பழம் என்பது ஒரு இனிப்பு சுவையை உடைய பழம். மேலே பச்சை நிற தடித்த தோல் மற்றும் உள்ளே மென்மையான சதைப் பகுதி மற்றும் விதைகள் கொண்டது.

விதையின் மேலே சதைப் பகுதி போர்த்தப்பட்டு இருக்கும் மிகவும் இனிப்பான சுவையைக் கொண்டது இந்த சீதாப்பழம். இந்த பழம் ஒரு குளிர்ச்சியான பழம் ஆகும். இதனை எடுத்துக் கொள்வதால் உடலின் உட்புற வெப்ப நிலை குறைகிறது.

இதனால் இந்த பழத்தை சாப்பிடுவதால் சளி பிடிக்கிறது என்று பொதுவாகக் கூறப்படுகிறது.

எது உண்மை?

சீதாப்பழம் சாப்பிடுவதால் சளி பிடிக்கிறது என்பது உண்மை அல்ல. பொதுவாக , பழங்கள் சாப்பிடுவதால் சளி பிடிப்பதில்லை என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை.

பொதுவாக உண்டாகும் சளி தொந்தரவுகள் கிருமிகளால் உண்டாகிறது. இதற்கும் நாம் சாப்பிடும் பழங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. அதனால், சீதாப்பழம் உட்கொள்வதால் சளி பிடிக்கிறது என்பது உண்மை இல்லை என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

அப்படியென்றால் இது பொய்யா?

குளிர்ச்சியான பழங்களை சாப்பிடுவதால் சளி தொந்தரவுகள் ஏற்படுகிறது என்று காலங்காலமாக நம்பப்படுகிறது. இதனை முற்றிலும் மறுப்பதற்கில்லை.

    குளிர்ச்சியான பழங்கள் உடல் வெப்பத்தைக் குறைக்கிறது என்பது உண்மை, ஆனால் மிகவும் அதிக அளவு உட்கொள்ளும்போதே உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஆனால் எந்த ஒரு மனிதராலும் மிக அதிக அளவு பழங்களை சாப்பிட முடியாது.

ஒரே நேரத்தில் மிகவும் அதிகமாக இந்த வகைப் பழங்களை உட்கொள்வதால் உடலின் வெப்பநிலை குறைந்து உடல் நல பாதிப்புகள் தோன்றலாம். இதனால் நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து கிருமி தொற்று தாக்கும் அபாயம் உண்டாகிறது. இதனால் சளி அல்லது ஜலதோஷம் உண்டாகிறது.

மேலும் பல...

0 comments

Blog Archive