இதுல ஒரு 3 தினமும் வாயில பிச்சு போடும்.... நடக்கும் மாற்றத்தை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீங்க!...

அத்திப்பழம் ஆரோக்கியம் நிறைந்தது என்பது நமக்குத் தெரிந்திருந்தாலும் அதை எப்படி சாப்பிடுவது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதனாலேயே நாம...

அத்திப்பழம் ஆரோக்கியம் நிறைந்தது என்பது நமக்குத் தெரிந்திருந்தாலும் அதை எப்படி சாப்பிடுவது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதனாலேயே நாம் பலரும் அத்திப்பழம் சாப்பிடுவதை தவிர்த்துவிடுகிறோம்.

இன்னொன்று, அந்த பழத்தை இரண்டாகப் பிளந்தால் முழுக்க முழுக்க விதைகளாக, புழுக்களைப் போல் இருக்கும். அதுவும் சிலருக்கு அருவருப்பாக இருப்பதால் தவிர்த்து விடுகிறார்கள்.

எங்கே கிடைக்கும்?

இதன் ஆரோக்கியம் கருதி சாப்பிட்டாலும், பிரஷ்ஷான பழம் எல்லா நேரத்திலும் கிடைப்பதில்லை. அதற்காகவே தற்போது உலர்த்தி பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் எல்லா இடங்களிலும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கின்றன. அதனால் எல்லா பருவ காலங்களிலும் நம்மால் அத்திப்பழத்தை சாப்பிட முடியும்.
அத்திப்பழம்

பலரும் உலர் பழங்கள், நட்ஸ் என்றாலே முந்திரி, உலர் திராட்சை, பாதாம் ஆகியவற்றோடு நின்று விடுகிறார்கள். இந்த பழத்தைப் பார்த்தாலும் அதன் நிறம், வடிவம், தோற்றம் பலருக்கும் பிடிக்காததால் தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் மற்ற உலர் பழங்களை விடவும் அத்திப் பழத்தில் மிக அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதனால் இனி மற்ற உலர் பழங்களுக்குப் பதிலாக அதிகமாக அத்திப்பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

செரிமான சக்தி

உலர்நு்த அத்திப்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. ஒரு நாளைக்கு 3 துண்டுகள் அளவுக்கு அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு நம்முடைய உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்கிறது. இதனால் மலச்சிக்கல் தீர்கிறது. இதர செரிமானப் பிரச்சினைகளும் குறையும். குடலியக்கமும் சீராகும்.
எடை இழப்பு

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் தாராளமாக உலர்நு்த அத்திப்பழத்தைச் சாப்பிடலாம். உலர் அத்தியில் அதிக நார்ச்சத்து இருப்பதோடு கலோரியும் மிகமிக குறைவு. ஒரு அத்திப்பழத்தில் 47 கலோரிகள் மட்டுமே உள்ளது. இது நம்முடைய உடலில் 0.2 கிராம் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது. அதனால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், ஸ்நாக்ஸ் டைமில் இந்த அத்திப்பழத்தை ஸ்நாக்ஸ் ஆக எடுத்துக் கொள்ளலாம்.

ரத்த அழுத்தம்

உணவில் உப்பு அதிகம் சேர்த்து வந்தீர்கள் என்றால், உடலில் சோடியத்தின் அளவும் அதிகரிக்கும். அப்படி உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்து, பொட்டாசியத்தின் அளவு குறைந்தது என்றால், அதன் காரணமாகவே ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. உலர் அத்திப்பழத்தில் சோடியம் மிகமிக குறைவு என்பதால், உயர் ரத்த அழுத்தம் குறைய ஆரம்பிக்கும்.
ஆன்டி ஆக்சிடண்ட்

உலர் அத்திப்பழத்தில் மிக மிக அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட் உள்ளது. குறிப்பாக, மற்ற பழங்களை விட இதில் அதிகம் ஆன்டி ஆக்சிடண்ட் உள்ளது. அதோடு வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ அதிக அளவில் உள்ளது.
இதய நோய்கள்

உலர் அத்தியில் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் இருப்பதால், ஃபீரி ரேடிக்கல்களால் உடலின் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. இதனால் இதய நோய் தடுக்கப்படுகிறது. ரத்த அழுத்தம் குறைவதால், கரோனரி என்னும் இதய நோயின் தாக்கமும் குறைவாக இருக்கிறது.
புற்றுநோய்

இதில் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருப்பதால், டீஎன்ஏ பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டு, அதனால் புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படுகிறது. புற்றுநோய் உண்டவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.

எலும்புகளின் வலிமை

ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 3 சதவீதம் அளவுக்கு கால்சியம் நிறைந்திருக்கிறது. இது ஒரு நாளைக்கு நம்முடைய உடலுக்குத் தேவையான கால்சசியத்தின் அளவாகும். இதனால் ஒரு நாளைக்கு ஒரு உலர்ந்த அத்திப்பழம் வீதம் சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து எலும்புகள் வலிமையாக ஆரம்பிக்கும்.
நீரிழிவு உலர்ந்த

அத்திப்பழம் கொஞ்சம் இனிப்புசுவையுடையது. அதனால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்ற சந்தேகமும் வருவதுண்டு. ஆனால் இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால் நீரிழிவைக் கட்டுப்படுத்தும். அதேசமயம் சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு எத்தனை பழங்கள் சாப்பிடலாம் என்று ஆலோசித்து அந்த அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.
ரத்த சோகை

உலர்ந்த அத்திப்பழத்தில் இரும்புச் சத்து மிக அதிகமாக உள்ளது. அதிலும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 2 சதவீதம் அளவுக்கு இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடல் முழுவதும் ஹீமோகுளோபிளை எடுத்துச் செல்ல, கனிமச்சத்துக்கள் இன்றியமையாதது. எனவே தினமும் ஒரு உலர் அத்திப்பழத்தை சாப்பிட்டுக் கொண்டு வந்தால், உடலின் ஹீமோகுளோபின் அதிகரித்து, ரத்தசோகை வருவதும் தடுக்கப்படும்.

பாலுணர்ச்சி தூண்டல்

கிரேக்கர்கள் அத்திப்பழத்தை ஒரு இயற்கை பாலுணர்வு ஊக்கியாகச் செயல்படுகிறது என்று சாப்பிட்டு வந்தனர். அத்திப்பழமானது ஒரு புனித பழமாகவும் காதல் மற்றும் கருவுறுதலுக்கான பழமாகவும் கருதினர். இது பாலுணர்வைத் தூண்டச் செல்கிறது. இதற்கு அத்திப்பழத்தில் உள்ள அதிக அளவிலான ஜிங்க், மாங்கனீசு ஆகியவை இனப்பெருக்க மண்டலத்தை அதிகரிக்கச் செய்கிறது.

மேலும் பல...

0 comments

Blog Archive