துரோகங்களும், ரகசியங்களும் நிறைந்த நம்பவே முடியாத 5 இந்திய சதி கோட்பாடுகள்.!

சதியாலோசனை கோட்பாடுகள் - சுருக்கமாக சொன்னால் திட்டமிட்டு மறைக்கப்படும் ரகசியங்கள். விளக்கமாக சொன்னால், ஒரு குழுவோ அல்லது ஒரு நிறுவனமோ அல்லத...

சதியாலோசனை கோட்பாடுகள் - சுருக்கமாக சொன்னால் திட்டமிட்டு மறைக்கப்படும் ரகசியங்கள். விளக்கமாக சொன்னால், ஒரு குழுவோ அல்லது ஒரு நிறுவனமோ அல்லது ஒரு நாட்டின் அரசாங்கமோ ஒரு விடயத்தை மிகவும் திட்டமிட்டு நடத்தி அதை மிகவும் ரகசியமாகவே பாதுகாத்து வைத்திருக்கும் நிகழ்வுகள் அல்லது விடயங்களாகும்.

துரோகங்கள் நிறைந்த நம்பவே முடியாத 5 இந்திய சதி கோட்பாடடுகள்.!

பொதுவாக ரகசியங்கள் என்றாலே அதில் ஏதோ சிக்கல்களும், பிரச்சனைகளும் இருக்கும் என்று தான் அர்த்தம். அப்போது ஒரு கூட்டமே/ ஒரு நாடே/ ஒரு அரசாங்கமே மறைக்கும் ரகசியங்களில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்.?

எப்படியோ எங்கோ கசிந்து.!

அப்படியாக, இந்தியாவின் பண்டைய கால புராண கதைகளில் இருந்து அதிநவீன தொழில்நுட்ப காலமான இன்றுவரை மிகவும் பாதுகாப்பக்க மறைக்கப்படும் சதியாலோசனை கோட்பாடுகள் ஆயிரமாயிரம் உள்ளன. அவைகளில் சில மட்டுமே எப்படியோ எங்கோ கசிந்து வெளிப்பட்டுள்ளன. அவைகளில் மிகவும் வியக்கத்தக்க 5 கோட்பாடுகளை பற்றிய விவரங்களையும், அது சார்ந்த சதியாலோசனை கோட்பாடுகளைப்பற்றி இதுநாள் வரை வெளியாகி உள்ள தகவல்களையும் உள்ளடக்கியதே இந்த கட்டுரை.!

இந்திய சதி கோட்பாடு #05 :

ஷிவ்கார் பாபூஜி டால்பேட் அவர்களின் விமான டிசைன் பற்றியது. ரைட் சகோதரர்கள் உலகின் முதல் விமானத்தை கண்டுப்பிடித்த 8 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியரான ஷிவ்கார் பாபூஜி டால்பேட், அவரின் சொந்த விமானம் ஒன்றை உருவாக்கியதாகவும், அது சுமார் 1500 அடி உயரம் வரை பறக்க கூடியது என்றும் கூறுகிறது ஒரு சதியாலோசனை கோட்பாடு.

நிதி உதவி வழங்கி ஊக்கப்படுத்த வேண்டாம்.!

1895-ஆம் ஆண்டு விபத்துக்குள்ளான அந்த விமானத்திற்கு எந்த விதமான நிதி உதவியும் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டாம் என்று பரோடா மகாராஜாவிடம் பிரிட்டிஷ் அரசு கேட்டுக் கொண்டதாகவும் விளக்கம் அளிக்கிறது அந்த சதியாலோசனை கோட்பாடு.

வரலாற்று துரோகம்.!

உலகின் முதல் விமான தொழில்நுட்பம் சார்ந்த வடிவமைப்பு ஒரு இந்தியரிடம் இருப்பதா என்று பிரிட்டிஷ் அரசாங்கம் செய்த வரலாற்று துரோகத்திற்க்கும், அப்படி ஒரு விமானம் பறந்தது என்பதற்கும் எந்த விதமான சான்றும் இல்லை.

மிகவும் பலவீனமானது

மறுபக்கம் ஷிவ்கார் பாபூஜி டால்பேட் (Shivkar Babuji Talpade) அவர்களின் சொந்த பறக்கும் ஊர்தி வடிவமைப்பு என்று கூறப்படும் அந்த விமான டிசைன் ஆனது மிகவும் பலவீனமானது போன்று தெரிகிறது என்ற கருத்தும் நிலவுகிறது.


இந்திய சதி கோட்பாடு #04 :

பண்டைய கால இந்தியாவில் நடந்த அணு போர் பற்றியது. 2010-ஆம் ஆண்டில் இந்திய நகரமான ஜோத்பூரில் கதிரியக்க சாம்பல் (Radioactive ash) கண்டுப்பிடிக்கப்பட்ட பின்னரே இந்த சதியாலோசனை கோட்பாடு கிளம்பியது.

கதிரியக்க சாம்பல்.!

குறிப்பிட்ட மகாபாரத வசனங்களில் மகாபாரத யுத்தமானது நடந்தாக சொல்லப்படும் இந்த இடத்தில் கதிரியக்க சாம்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளத்தால், பண்டைய காலத்திலேயே அணு ஆயுதப்போர் நடத்தப்பட்டுள்ளது என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. இதன் வழியாக, பண்டைய இந்தியர்களின் கற்பனைக்கு எட்டாத தொழிநுட்ப வளர்ச்சியையும் யூகிக்க முடிகிறது.
இந்திய சதி கோட்பாடு #03 :
இந்திய சதி கோட்பாடு #03 :

மன்னர் அசோகரின் ரகசிய சமூகம் என்று கூறப்படும் அடையாளம் தெரியாத 9 பேர் பற்றியது. மனித இனத்திற்கு அத்யாவசியமான 9 விடயங்களை உள்ளடக்கிய 9 புத்தகங்கள் கொடுக்கப்பட்டு மனித இனத்தை அழிவை நோக்கி செல்ல விடாமல் பாதுகாக்கும்படி அசோகரால் 9 பேர் நியமிக்கப்பட்டனர் என்கிறது ஒரு சதியாலோசனை கோட்பாடு.

தி நயன் அன்நோன்.!

அப்படியாக அந்த புத்தகங்களில் போர், சமூகவியல், தகவல்தொடர்பு, ரசவாதம், மரணம், நுண்ணுயிரியல், ஒளி, ஈர்ப்பு மற்றும் அண்டவியல் ஆகிய 9 விடயங்கள் அடங்கி இருந்தது என்றும் அந்த கோட்பாட்டில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ரகசிய சமூக நிகழ்வானது கிபி 270-ல் நடைபெற்றது என்று நம்பப்படுகிறது. இது சார்ந்த 'தி நயன் அன்நோன்' (The Nine Unknown) என்றவொரு நாவலும் இருக்கிறது என்பது கூடுதல் சுவாரசியம்.!

இந்திய சதி கோட்பாடு #02 :

இந்திய ராணுவத்தின் கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணையான அக்னி 5-ன் தாக்குதல் எல்லை பற்றியது. அதாவது, அக்னி 5 ஏவுகணையின் தாக்குதல் தூரம் (வீச்சு) மிகவும் ரகசியமாய் வைக்கப்பட்டிருந்தது, பின் அது 5500 - 5800 கிமீ தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடியது என்று இந்திய அரசாங்கம் கூறியது. ஆனால், 17000 கிலோ எடை கொண்ட அக்னி 4 ஏவுகணையானதே சுமார் 4000கிமீ தூரம் வரை சென்று தாக்கும் போது, அக்னி 5 அதைவிட அதிகமான தூரத்தை கடக்கும் என்கிறார்கள் சில சதியாலோசனை கோட்பாட்டாளர்கள்.

முக்கியமாக சீனா.!

சில கணிப்புகளின் படி, அக்னி 5 ஏவுகணையானது சுமார் 50000 கிலோ எடையும், 8000 கிமீ வரை பாய்ந்து சென்று தாக்கும் வல்லமையும் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், எதிரிகளை கலங்கடிக்கவே (முக்கியமாக சீனாவை) அக்னி 5-ன் தாக்குதல் எல்லை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் கருத்து கூறுகிறார்கள்.

இந்திய சதி கோட்பாடு #01 :

இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஹோமி பாபாவை (Homi Bhabha) கொலை செய்தது சிஐஏ தானா.? என்பது பற்றியது. ஹோமி பாபா உயிர் இழக்க காரணமான விமான விபத்தானது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை சம்பவம் என்கிறது ஒரு சதியாலோசனை கோட்பாடு.

இந்தியா முன்னேற்றம் அடைவதை நிறுத்த கொலை.!

தோரியத்தில் (Thorium ) இருந்து சக்தியை பிரித்து எடுப்பதில் இந்தியா முன்னேற்றம் அடைவதை நிறுத்த அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமை (CIA) தான் ஹோமி பாபாவை கொலை செய்தது என்கிறார்கள் சில சதியாலோசணை கோட்பாட்டாளர்கள். ஆனால், இந்த கோட்பாடுக்கு இதுநாள் எந்த விதமான சிறு ஆதாரமும் கூட இல்லை.

மேலும் பல...

0 comments

Blog Archive