நீங்க ஸ்டிரைக் நடத்துங்க; நாங்க படத்த போடுறோம்… அபிராமி ராமநாதன்

டிஜிட்டல் சேவை அமைப்புகளின் கட்டணங்களை எதிர்த்து கடந்த 1-ந் தேதி முதல் புதிய படங்களை ரிலீஸ் செய்யக்கூடாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்...

டிஜிட்டல் சேவை அமைப்புகளின் கட்டணங்களை எதிர்த்து கடந்த 1-ந் தேதி முதல் புதிய படங்களை ரிலீஸ் செய்யக்கூடாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்து இருந்தது.

இதனால் தியேட்டர்களில் வசூல் குறைய ஆரம்பித்தது.

இதனிடையில் நாளை மார்ச் 16ஆம் தேதி உள்நாட்டில் நடைபெறும் சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்படுகிறது.

இதற்கிடையே தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களும் 8 சதவீத கேளிக்கை வரிவிதிப்பு, திரையரங்கு உரிமத்தை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிப்பது, பராமரிப்பு கட்டணத்தை உயர்த்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் தியேட்டர்களை மூடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து உள்ளனர்.

இந்நிலையில் சென்னை மாநகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்க அவசர கூட்டம் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

இதில் நிறைய கிட்டதட்ட 147 மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து அபிராமி ராமநாதன் கூறியதாவது…

‘சென்னையில் உள்ள தியேட்டர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. நாளை வழக்கம்போல் சென்னையில் உள்ள தியேட்டர்கள் இயங்கும்.

மல்டி பிளக்ஸ் தியேட்டர்களும் இயங்கும். 147 தியேட்டர்களில் படங்கள் ஓடும். இந்த தியேட்டர்களில் வழக்கம்போல் 4 காட்சிகள் திரையிடப்படும்’ என்று தெரிவித்தார்.

இவை அனைத்திலும் பழைய ஹிட் படங்களே திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது.

அவர்கள் என்ன முடிவு எடுக்க போகிறார்களோ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

மேலும் பல...

0 comments

Blog Archive