கமல் & ரஜினியின் காலேஜ் விசிட்-டுகளுக்கு அரசு ஆப்பு!

தமிழகத்தில் புதிதாக அரசியல் கட்சி தொடங்கியிருப்பதாக சொல்லும் கமல் நடிகர் கமல் மற்றும் கட்சி தொடங்க போவதாக சொல்லிக் கொண்டே இருக்கும் நடிகர் ...

தமிழகத்தில் புதிதாக அரசியல் கட்சி தொடங்கியிருப்பதாக சொல்லும் கமல் நடிகர் கமல் மற்றும் கட்சி தொடங்க போவதாக சொல்லிக் கொண்டே இருக்கும் நடிகர் ரஜினி ஆகியோர் சமீப காலமாக சில கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களுடன் உரையாடினார்கள். இதையடுத்து கல்லூரி வளாகங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக்கூடாது என்று உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் மஞ்சுளா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் பிறப்பித்து இருக்கும் உத்தரவில் ”சமீப காலமாக கல்லூரி விழா, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அரசியல் தலைவர்கள் தங்கள் கட்சி சார்ந்த, இயக்கம் சார்ந்த கொள்கைகளை பேசுவதாக தெரிய வந்துள்ளது. மாணவர்களிடம் இப்படி பேசுவது அவர்களின் படிப்பை, ஆராய்ச்சியை பாதிக்கும். இது அவர்களின் கல்லூரிக்கு இடையூறாக அமையும்” என்று கூறப்பட்டு இருக்கிறது.

இதையடுத்து விருந்தினர்கள் அரசியல் பேசும் விழாவிற்கு கல்லூரி இனி அனுமதி அளிக்க கூடாது என்றும், விருந்தினர்கள் அரசியல் பேசுவது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இயக்குனர். ஜெ. மஞ்சுளா தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது. எல்லா கல்லூரிகளும் உடனடியாக இதை பின்பற்ற வேண்டும் என்றுள்ளார். முக்கியமாக அரசு உதவு பெறும்/ சுயஉதவி கல்லூரிகளுக்கும் இந்த விதி பொருந்தும் என்று கூறியுள்ளார்ராக்கும்.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog