பரபரப்பான நேரத்தில் அமைதியாக வேட்டையை தொடங்கிய காலா!

ரஜினிகாந்த் நடிப்பில் காலா வரும் ஜூன் 7 ம் தேதி வெளியாகவுள்ளது. உலகம் முழுக்க அவரின் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். தமிழகத்தில் ஸ்டெர...

ரஜினிகாந்த் நடிப்பில் காலா வரும் ஜூன் 7 ம் தேதி வெளியாகவுள்ளது. உலகம் முழுக்க அவரின் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். தமிழகத்தில் ஸ்டெர்லைட் பிரச்சனையால் அமைதியின்றி இருப்பதால் காலா படம் வெளியாகுமா என ரசிகர்கள் மத்தியின் சிறு சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் வரும் 29 ம் தேதி ஹைதராபாத்தில் தெலுங்கு புரமோஷனுக்கு படக்குழு செல்கிறது. அங்கே பிரிமியர் காட்சிகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் நாட்டில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தர் உரிமையை ஐங்கரன் நிறுவனம் பெற்றுள்ளதாம். இதனால் அங்கும் ரிலீஸ் வேலைகள் தொடங்கிவிட்டன.

அதே போல் அரபு நாடுகளில் முக்கிய சினிமா நிறுவனமான VOX CINEMAS ல் அடவான்ஸ் புக்கிங் தொடங்கியுள்ளது. இங்கே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் காலா படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.

மேலும் பல...

0 comments

Blog Archive