பிக்பாஸ் ரசிகர்களுக்கு வந்த ஏமாற்றம்- இனி என்ன நடக்கும்?

ஹாலிவுட், பாலிவுட் ரசிகர்களுக்கு பேவரெட் நிகழ்ச்சியான பிக்பாஸ் இப்போது தென்னிந்திய சினிமா ரசிகர்களும் ரசிக்க ஆரம்பித்துவிட்டனர். தமிழ் மற...

ஹாலிவுட், பாலிவுட் ரசிகர்களுக்கு பேவரெட் நிகழ்ச்சியான பிக்பாஸ் இப்போது தென்னிந்திய சினிமா ரசிகர்களும் ரசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

தமிழ் மற்றும் தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் தொடங்க இருக்கிறது. தமிழில் அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில் தெலுங்கில் நேற்று (ஜுன் 10) தொடங்கியுள்ளது. இந்த சீசனில் ஜுனியர் என்.டி.ஆருக்கு பதிலாக தொகுப்பாளராக நானி கமிட்டாகியுள்ளார்.

Natural ஸ்டார் என்று பெயர் வாங்கிய நானி மீது பெரிய நம்பிக்கை இருந்தது ரசிகர்களிடம். கண்டிப்பாக இவர் என்.டி.ஆர் போல் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவார் என்று, ஆனால் நேற்று நடந்தது வேறு.

அவர் நிகழ்ச்சியை ஜாலியாக கொண்டு போவதற்கு பதிலாக நிறைய கண்டிஷன்களை பாலோ செய்வதிலேயே இருந்துள்ளார். போட்டியாளர்களையும் வேக வேகமாக வீட்டிற்குள் அனுப்பியுள்ளார்.

இதனால் அவர் மீது ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இனி வரும் நிகழ்ச்சிகளில் என்.டி.ஆர் இடத்தை நானி பிடிக்கிறாரா என்பதை பார்ப்போம்.

மேலும் பல...

0 comments

Blog Archive