`சூழல் மாசுபாட்டைக் குறைக்கத் திட்டம்!' - மின்சாரப் பேருந்துகளுக்கு மாறும் கேரளப் போக்குவரத்துத் துறை சிந்து ஆர்

கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய மின்சாரப் பேருந்து சோதனை ஓட்டம் திருவனந்தபுரத்தில் இன்று தொடங்கியது. கேரள மாநிலத்தில் முதன...


கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய மின்சாரப் பேருந்து சோதனை ஓட்டம் திருவனந்தபுரத்தில் இன்று தொடங்கியது.

கேரள மாநிலத்தில் முதன் முறையாக மின்சாரப் பேருந்து சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது. திருவனந்தபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டிலிருந்து மின்சாரப் பேருந்தை கேரளப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சோதனை முயற்சியாக இயக்கப்படும் இந்தப் பேருந்துகள் தம்பானூரிலிருந்து பட்டம் வழியாக கழக்கூட்டம் வரை இயக்கப்படுகின்றன. அடுத்ததாகக் கிழக்கேகோட்டை, கோவளம், டெக்னோபார்க், பாப்பனங்கோடு உள்ளிட்ட இடங்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது. எர்ணாகுளம், கோழிக்கோடு நகரங்களிலும் சோதனை ஓட்டம் நடைபெறும் எனவும். சோதனை வெற்றிபெற்றால் மாநிலம் முழுவதும் 300 பேருந்துகள் இயக்கப்படும் திட்டம் இருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கி.மீ.தூரம் வரை செல்லும் இந்த பஸ்ஸில் 40 இருக்கைகள் உள்ளன.

மின்சாரப் பேருந்து மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருந்தாலும் கேரளப் போக்குவரத்து விதிப்படி 80 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. ஒரு பேருந்தின் விலை ரூ. 2.50 கோடி என கே.எஸ்.ஆர்.டி.சி. தெரிவித்துள்ளது. புஷ்பேக் சீட்டுகள், கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ் கருவிகள் இந்த பஸ்ஸில் பொருத்தப்பட்டுள்ளன. இன்று முதல் 15 நாள்களுக்கு இந்தப் பேருந்து சோதனை ஓட்டமாக இயக்கப்படுகிறது

மேலும் பல...

0 comments

Blog Archive