’சென்னையின் பெருமை’ சத்யம் சினிமாஸை சொந்தமாக்கும் பிவிஆர் சினிமாஸ்

இந்தியாவின் முன்னணி திரையரங்கு நிறுவனங்களில் ஒன்றான சத்யம் சினிமாஸை பிவிஆர், இமாலய தொகை கொடுத்து வாங்குகிறது. மிக நவீன கட்டமைப்பில், அசரட...

இந்தியாவின் முன்னணி திரையரங்கு நிறுவனங்களில் ஒன்றான சத்யம் சினிமாஸை பிவிஆர், இமாலய தொகை கொடுத்து வாங்குகிறது.

மிக நவீன கட்டமைப்பில், அசரடிக்கும் தொழில்நுட்ப தரத்துடன் திரையரங்கில் பார்வையாளர்களுக்கு படம் பார்க்கும் அனுபவத்தை வழங்கிய நிறுவனம் எஸ்பிஐ சினிமாஸ்.

இந்தியாவில் நவீன திரையரங்க கட்டமைப்பிற்கான முன்னோடியாகவும் எஸ்பிஐ திகழ்கிறது. இந்நிறுவனம் சத்யம் சினிமாஸ், சத்யம் எஸ்2 சினிமாஸ், எஸ்கேப் சினிமாஸ், பாலஸ்ஸோ சினிமாஸ் என பல்வேறு பெயர்களில் திரையரங்குகளை நிர்வகித்து வருகிறது.

இதற்கு சென்னையில் மட்டும் ராயப்பேட்டை, பெரம்பூர், வடபழனி போன்ற மூன்று இடங்களில் திரையரங்குகள் உள்ளன. தவிர, கோயம்புத்தூரில் இது ’தி சினிமாஸ்’ என்ற பெயரில் ப்ரூக் ஃப்லீட்ஸ் வணிக வளாகத்தில் இயங்கி வருகிறது.


தமிழ் நாட்டை தவிர, புதுச்சேரி, ஆந்திராவின் ஹைதராபாத், கேரளாவின் கொச்சி, கர்நாடகாவின் பெங்களூரு, மஹாராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட நகரங்களில் எஸ்பிஐ சினிமாஸ் செயல்பட்டு வருகின்றன. நாட்டின் பெரிய சினிமா தியேட்டர் நிறுவனமாக உள்ள எஸ்பிஐ-க்கு இந்தியளவில் மொத்தம் 10 திரையரங்குகள் உள்ளன. அவற்றில் 76 திரைகளில் படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்நிலையில், இந்தியாவின் மெகா திரையரங்க நிறுவனமான எஸ்பிஐ சினிமாஸின் 77.1 சதவீத பங்குகளை பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. உலகின் 7வது பெரிய திரையரங்க நிறுவனமாக உள்ள பிவிஆர் சினிமாஸுக்கு 60 நகரங்களில் 152 திரையரங்குகள் உள்ளன.

எஸ்பிஐ சினிமாஸ் மற்றும் பிவிஆர் சினிமாஸ் நிறுவனங்களுக்கு இடையில் சுமார் ரூ. 850 மதிப்பில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இன்னும் 35 நாட்களுக்குள் இந்த தொகையை எஸ்பிஐ நிறுவனத்திற்கு பிவிஆர் வழங்கவுள்ளது.

அதை தொடர்ந்து 9 முதல் 12 மாதங்களுக்குள் எஸ்பிஐ சினிமாஸ் பிவிஆர் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியளவில் 706 திரைகள் கொண்ட பிவிஆர் நிறுவனத்திற்கு திரையரங்குகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவுள்ளது

மேலும் பல...

0 comments

Blog Archive