மீண்டும் பிரமாண்ட படத்திற்காக உடல் எடையை ஏற்றி, இறக்கும் விக்ரம்

பாலிவுட்டில் மிக பிரமாண்டமாக தயாராக உள்ள ‘மாஹாவீர் கர்ணன்’ படத்தில் கர்ணனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள சியான் விக்ரம், அந்த கதாபாத்திரத்திற்கா...

பாலிவுட்டில் மிக பிரமாண்டமாக தயாராக உள்ள ‘மாஹாவீர் கர்ணன்’ படத்தில் கர்ணனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள சியான் விக்ரம், அந்த கதாபாத்திரத்திற்காக தன் உடல் எடையை கூட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பிரமாண்ட படம்:

‘துருவ நட்சத்திரம்’, ‘சாமி 2’ படப்படிப்பு முடிந்து இறுதிக் கட்ட பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இதையடுத்து பாலிவுட்டில் ரூ. 300 கோடி செலவில் உருவாக உள்ள ‘மஹாவீர் கர்ணன்’ படத்தில், கர்ணனாக நடிக்க விக்ரம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முதலில் ப்ரித்வி ராஜ் நடிக்க முய்ற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு கால்ஷீட் வழங்க முடியாத சூழல் உள்ளதால், கர்ணனாக விக்ரமை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

உடம்பை கூட்டும் விக்ரம்:

சாமி 2 படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டதால், கர்ணன் படத்திற்காக, பீமா படத்தை விட உடல் எடையை கூட்டி, ஆஜானுபாகுவான உடலுடன் ‘கர்ணன்’ ஆக நடிக்க விக்ரம் தயாராகி வருகின்றார்.

இதற்காக வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை விக்ரம் தவிர்த்து வருகின்றார்.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog