ஒரு மாதத்திற்கு தொடர்ந்து திராட்சை சாப்பிட்டு வந்தால் என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படும்...?

எந்த ஒரு காரியத்தையும் தொடர்ந்து செய்து வந்தால் அதன் பயன் பல மடங்காக நமக்கு கிடைக்கும். பொதுவாக இதனை 1 வாரம், 15 நாட்கள், 21 நாட்கள் போன்ற ...

எந்த ஒரு காரியத்தையும் தொடர்ந்து செய்து வந்தால் அதன் பயன் பல மடங்காக நமக்கு கிடைக்கும். பொதுவாக இதனை 1 வாரம், 15 நாட்கள், 21 நாட்கள் போன்ற கால அளவில் குறிப்பிடுவர். இது நாம் உண்ணும் உணவு பழக்கத்துக்கும் பொருந்தும். அந்த வகையில் திராட்சையை தினமும் 1 மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஏராளமான பயன்கள் கிடைக்குமாம்.
ஒரு மாதத்திற்கு தொடர்ந்து திராட்சை சாப்பிட்டு வந்தால் என்னென்ன மாற்றங்கள் உடலில் நடக்கும்..?

நாம் நினைப்பது போன்று திராட்சை சாதாரண உணவு கிடையாது. பல்வேறு விதமான பயன்கள் இந்த திராட்சையில் நிறைந்துள்ளதாம். தொடர்ந்து 1 மாதம் இதை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் பிரச்சனை முதல் உடல் எடை பிரச்சினை வரை தீர்வுக்கு வரும் என ஆய்வுகள் சொல்கின்றது. இது எப்படி சாத்தியம் என்பதை இனி அறிந்து கொள்வோம்.

காரணம் என்ன..?

அப்படி என்னதான் இந்த திராட்சையில் இருக்குனு யோசிக்கிறவங்களுக்கு தான் இந்த முழு பதிவும். நாம் பெரும்பாலும் சாதாரணமாக நினைக்க கூடிய பழங்கள் தான் எண்ணற்ற பயன்களை நமக்கு தர கூடியதாக இருக்கும்.

அதிலும் இந்த திராட்சையில் வைட்டமின் சி, எ, இரும்பு சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை நிறைந்துள்ளது.

கெட்ட கொலெஸ்ட்ராலுக்கு டாட்..!

தினமும் தொடர்ந்து 1 மாத கால அளவு இந்த திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ரால் வந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.

திராட்சையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் கொலஸ்ட்ராலை முழுவதுமாக குறைத்து ரத்த அழுத்தத்தை சீராக வைத்து கொள்ளும்.

சிறுநீரக நோய்களுக்கு

திராட்சையில் anthocyanin என்கிற அதிக சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளதால் கிட்னியில் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு பார்த்து கொள்ளும். மேலும், சிறுநீர் பாதை தொற்றுகளில் உள்ள கிருமிகளை எதிர்த்து இது போராடும்.

முக்கியமாக சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் திராட்சை முதன்மையான பங்கு வகிக்கிறது.

புற்றுநோயிற்கு நோ நோ..!

புற்றுநோய் வராமல் நம்மை காக்கும் ஆற்றல் இந்த திராட்சைக்கு உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இவை எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்றவற்றில் இருந்து பெரிதும் காக்குமாம். எனவே, தினமும் திராட்சை எடுத்து கொண்டால் இந்த பலனும் கிடைக்கும்.

சோர்வை நீக்க

காலையிலே சோர்வாக இருக்க..? உங்களின் இந்த பிரச்சினைக்கு திராட்சை வைத்தியம் இருக்கே. திராட்சையை தினமும் தொடர்ந்து 1 மாத காலம் சாப்பிட்டு வந்தால் இதன் பலன் உங்களுக்கே புரியும் மக்களே. அதிக ஸ்டாமினாவை தந்து மூளையை திறனுடன் செயல்பட வைக்கும்.

இதய கோளாறுகளுக்கு...

எந்த நோய் வந்தாலும் அதற்கு தொடர்பான பலவித நோய்களும் கூடவே வர தொடங்கி விடுகிறது. அந்த வகையில் இதய நோய்களும் விதிவிலக்கல்ல. இதயம் சார்ந்த நோய்கள் வந்தால் அவை நமது உயிருக்கே ஆபத்தை தரும். தினமும் தொடர்ந்து திராட்சையை உங்களின் உணவில் சேர்த்து கொண்டால் இதய நோய்களுக்கான வாய்ப்புகள் மிக குறைவாம்.
ஆஸ்துமா பிரச்சினைக்கு
ஆஸ்துமா பிரச்சினைக்கு

சுவாச கோளாறால் இத்தனை நாட்கள் அவதிப்பட்டோருக்கு ஒரு எளிய வழி உள்ளது. திராட்சையை தினமும் சிறிதளவு உங்களின் உணவு பழக்கத்தில் சேர்த்து கொண்டால் சுவாச கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சினை ஆகியவற்றிற்கு தீர்வு கிடைக்கும் என அண்மைய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

மோசமான நிலையா..?

எதை சாப்பிட்டாலும் செரிக்காமல் இருக்கிறதா..? இதற்கு ஒரு முடிவு கட்டுகிறது திராட்சை.

திராட்சையில் உள்ள அதிக நார்சத்து செரிமான கோளாறை குணப்படுத்துகிறது. குடலின் செயல்திறனை அதிகரித்து, மலச்சிக்கல் ஏற்படாமலும் பார்த்து கொள்கிறது.

உடல் எடை குறைப்பு

தொடர்ந்து ஒரு மாதம் இந்த திராட்சையை சாப்பிட்டு வருவதால் எளிதாக உடல் எடையை குறைக்க முடியும். குறிப்பாக மற்ற வகை திராட்சையை விட கருப்பு திராட்சையில் இதன் பயன் ஒருபடி மேலே உள்ளது. எனவே, கருப்பு திராட்சை சாப்பிடுவது சிறந்தது.

தசைகளுக்கு பளு சேர்க்க

தசைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோர்க்கு திராட்சை நல்ல தீர்வை தரும். தொடர்ந்து 1 மாதகாலம் திராட்சை சாப்பிட்டு வந்தால் தசைகள் வலு பெற்று, உடனடி ஸ்டாமினா கிடைக்கும். மேலும், எலும்புகளுக்கும் ஆற்றல் அதிகமாக கிடைக்கும்.

கவனம்..!

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அளவுக்கு அதிகமாக திராட்சை சாப்பிட கூடாது. மீறி சாப்பிட்டால் அலர்ஜி, உடல் எடை கூடுதல், செரிமான கோளாறுகள், வாந்தி போன்றவை ஏற்பட கூடும்,. எனவே, இதன் அளவில் கவனம் தேவை.

மேலும் பல...

0 comments

Blog Archive