வனிதாக்கு என்னா வாய்.. அப்பப்பா.. கேட்கமுடியல.. பார்க்க முடியல.. பீர்க்கங்கா இல்ல.. சொர்ணாக்கா 2.0!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சின்னப் பிரச்சனையை பேசி பெரிதாக்கியது வனிதாதான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று வெளியான ப்ரமோவிலேயே தெரிந்தது சண்டை ந...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சின்னப் பிரச்சனையை பேசி பெரிதாக்கியது வனிதாதான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று வெளியான ப்ரமோவிலேயே தெரிந்தது சண்டை நடப்பது. வழக்கமாக சின்ன சின்ன விஷயங்களை கூட ப்ரமோவில் ஓவர் பில்டப் செய்து புரோகிராமில் புஸ் என்று ஆக்கிவிடுவார்கள்.

ஆனால் நேற்றைய எபிசோடில் ப்ரோமிவில் காட்டியதைவிட பெரும் சண்டை நடந்துள்ளது பிக்பாஸ் ஹவுஸில். சண்டைக்கு முக்கிய காரணமே வனிதாதான்.

பெட் ரூமுக்குள் பேச்சு

காம் டவுன் என வாயை விட்ட மீராவை, ஏற்கனவே பிடிக்காமல் இருந்த அபிராமி முகத்தில் அடித்தாற் போல் நான் உன்னிடம் பேசவில்லை என கூறிவிட்டார். இதைத்தொடர்ந்து பெட்ரூமுக்குள் சென்ற அபிராமி அங்கிருந்த வனிதாவிடம் பொதுவாக நடந்ததை கூறுகிறார்.

மீராவை வாங்கிய வனிதா

ஆனால் அதை பெரிசு படுத்திய வனிதா நீ என்னிடம் கம்ப்ளையன்ட் செய் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். இதைத்தொடர்ந்து மீராவிடம் சென்ற வனிதா அவரை லெப்ட் அன்ட் ரைட் வாங்குகிறார். ஷெரினும் மீராவை கார்னர் செய்கிறார்.

கண்டமேனிக்கு பேசிய வனிதா

ஷெரின், சாக்ஷி, வனிதா, அபிராமி, ரேஷ்மா ஆகியோர் ஒரு குரூப்பாக பெட்ரூமுக்குள் சென்றனர். பெட் ரூமில் இருந்தபடியே மீராவை கண்டமேனிக்கு பேசினார் வனிதா.

மீரா ஒரு சாக்கடை

மீராவை ஒரு சாக்கடை என்றும் கடுமையான சொற்களால் விமர்சிக்கிறார். அப்பப்பா வனிதா பேசும் பேச்சு கடவுளே.. ஒரு கேப்டன் போல் நடந்து கொள்ளவில்லை வனிதா.

அபிராமிக்கு சொம்பு தூக்கிய குரூப்

மீரா அழும் போது ஃபாத்திமா, தர்ஷன், உள்ளிட்டவர்கள் மட்டுமே ஆறுதல் கூறினர். வேறு யாரும் கண்டுகொள்ளவில்லை. சும்மா சீன் கிரியேட் செய்து அபிராமி அழ அனைவரும் சேர்ந்து சொம்பு தூக்கினர்.

கவினை கட்டிப்பிடித்த அபி

அதுதான் சாக்கு என்று கவினை அழைத்து கட்டிப்பிடித்தார் அபிராமி. கேப்டனாக நியூட்ரலாக இருக்க வேண்டிய வனிதா, கேப்டன் என்ற கெத்தை காட்ட ஒரு சார்பாக டீம் கிரியேட் செய்து பிரச்சனையை பெரிதாக்கி குளிர்காய்ந்தார் வனிதா.

சொர்ணாக்கா 2.0

ஏற்கனவே கணவருடன் தகராறு தந்தையுடன் தகராறு, செய்தியாளர்களுடன் தகராறு என வனிதாவுக்கு என ஒரு ஹிஸ்டரி உள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா வந்தவுடன் எல்லோருக்குமே ஒரு பயம் இருந்தது. வனிதாவுக்கு மதுமிதா சொர்ணாக்கா தங்கச்சி பீர்க்கங்கா என்றார். ஆனால் பீர்க்கங்காவெல்லாம் இல்லை. சொர்ணாக்கா 2.0.


மேலும் பல...

0 comments

Blog Archive