டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்? உங்களுக்கான எச்சரிக்கைதான் இது...!

நிம்மதியான தூக்கம் என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். நமது உடலுக்கு போதுமான ஓய்வு கிடைக்கவும், இழந்த ஆற்றலை மீண்டும் பெறவும் தூக்கம் ஒன்...

நிம்மதியான தூக்கம் என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். நமது உடலுக்கு போதுமான ஓய்வு கிடைக்கவும், இழந்த ஆற்றலை மீண்டும் பெறவும் தூக்கம் ஒன்று மட்டுமே சிறந்த வழியாகும். ஆற்றலுக்கு மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் உங்களுக்கு குறிப்பிட்ட அளவு தூக்கம் அவசியமாகும்.

இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறையில் போதுமான அளவு தூக்கம் தூங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக விளக்கு எரியும்போதே தூங்குவது, டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குவது போன்றவை உங்கள் ஆரோக்கியத்தின் மீது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

ஆராய்ச்சி

சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் வெளிச்சத்தில் தூங்குவபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமுள்ளது கண்டுபிடிக்கட்டது. மேலும் வெளிச்சத்தில் தூங்குபவர்களுக்கு தொடர்ந்து எடை அதிகரிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காரணம்

விளக்கு அல்லது டிவியில் இருந்து வெளிப்படும் செயற்கை ஒளியானது மெலடோனின் ஹார்மோன் சுரப்பில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் பெண்களின் நாள்சுழற்சி அமைப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும். பெண்களின் எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் டிவி ஓடும்போது அதன் அருகில் தூங்குவதாகும். ஆண்களுக்கும் இதனால் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வெளிச்சத்தால் ஏற்படும் பாதிப்புகள்

சரியான தூக்கம் இல்லாதபோது எடை தானாக அதிகரிக்கும். அதிக கலோரிகள் எடுத்துக்கொள்ளும் வாழ்க்கை முறையுடன் இந்த தூக்க பிரச்சினையும் சேரும்போது உடல் பருமன் தானாக அதிகரிக்கிறது. மேலும் இது மனதளவிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

தூக்க பிரச்சினைகள்

அமைதியான சூழ்நிலையில் மட்டுமே உங்களால் நிம்மதியாக தூங்க முடியும். டிவி ஓடிக்கொண்டிருக்கும்போது அதன் வெளிச்சமும், சத்தமும் உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை தராது. நிம்மதியாக தூங்கவும், கனவு காணவும் கவனசிதறல்கள் இல்லாமல் தூங்குவதுதான் நல்லது. எனவே ஒருபோதும் டிவி ஓடும்போது தூங்க முயற்சிக்காதீர்கள்.

மற்ற சாதனங்கள்

டிவி மட்டுமின்றி படுக்கையறையில் நீங்கள் உபயோகிக்கும் எந்த மின்னணு சாதனமும் உங்கள் தூக்கத்தின் தரத்தை கெடுக்கக்கூடும். தூங்கும் முன் செல்போனை பார்த்துக்கொண்டே தூங்குவது என்பது இன்று பலரின் அன்றாட பழக்கங்களில் ஒன்றாக மாறிவிட்டது. செல்போனை தலைக்கு அருகிலேயே வைத்துக்கொண்டு தூங்குவது உங்கள் மூளையின் செயல்பாட்டின் மீது பல பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் உங்கள் மூளையின் மீது நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். தொலைக்காட்சிக்கும் இந்த விதி பொருந்தும். டிவி ஓடிக்கொண்டிருக்கும் அறையில் தூங்கும்போது அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் உங்கள் மீது பாதிப்புகளை உண்டாக்கும்.

மேலும் பல...

0 comments

Blog Archive