கார்த்திக் சுப்புராஜின் புதிய படத்தில் ரஜினிக்கு சம்பளம் இத்தனை கோடியாம்!
May 02, 2018சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் காலா படம் வரும் ஜூன் மாதம் வெளியாவுள்ளது. நேற்று இப்படத்தின் செம வெயிட்டு என்னும் பாடல் லிரிக் வீடியோ வெளியான...
ஏற்கனவே இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவர் அடுத்ததாக நடிக்க இருப்பது உறுதியானது. அனிருத் இசையமைக்க படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ரூ 65 கோடி சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாருக்குமேவா அறிவில்ல? பிரஸ் மீது சிம்பு கடுப்பு
May 01, 2018சிம்பு எங்கு போனாலும் கூட்டம் கூட்டமாக பின்னாலேயே ஓட ஆரம்பித்துவிட்டார்கள் தொலைக்காட்சி கேமிராமேன்கள். ‘டம்ளர்ல தண்ணி வைங்க. பாட்டில்ல ஊறுக...
ஆனால் அவரது ரசிகர்கள் மட்டும் சிம்புவின் ஒவ்வொரு செயலுக்கும் பூரிப்படைகிறார்கள். சிம்பு ஹியூமானிடி என்றொரு ஹேஷ்டாக்கை உருவாக்கி அதை ட்ரென்டிங் ஆக்கவும் ட்ரை பண்ணுகிறார்கள். இது ஒருபுறமிருக்க… தண்ணி கொடுக்க சொன்னீங்களே, காவேரியில தண்ணி வந்திச்சா? என்று கேள்வி கேட்டு கடிதம் அனுப்பி இம்சிக்கிறார்களாம் சிலர்.
நம்மள வெறுப்பேத்துறாங்களே என்று நொந்து போயிருந்த சிம்புவை மேலும் வெறுப்பேற்ற கிளம்பியிருக்கிறார்கள் இந்த சேனல் காரர்கள். சில தினங்களுக்கு முன் மன்சூரலிகானை விடுதலை செய்யக் கோரி கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தாரல்லவா? அப்போது கேள்வி கேட்டு நச்சரித்தார்கள் பத்திரிகையாளர்கள்.
‘ஆமாங்க. எனக்கு மத்திய அரசுன்னா என்னன்னு தெரியாது. மாநில அரசுன்னா என்னன்னு தெரியாது’ என்று வெறுப்பாக பதில் சொல்லிவிட்டு கிளம்பினார் சிம்பு. அவர் சொன்ன பதிலில் பாதியை மட்டுமே தலைப்பாக போட்டார்கள். உண்மையில் அவர் சொன்னது இதுதான். ‘மத்திய அரசு பற்றியோ, மாநில அரசு பற்றியோ இப்ப பேச வேண்டிய அவசியம் இல்ல. உங்க கேள்விக்கு அதைவிட தெளிவா எனக்கு பதில் சொல்லத் தெரியும். ஆனால் எனக்கு தெரியாதுன்னே கூட வச்சுக்கோங்க. இப்ப நமக்கு ஆக வேண்டிய காரியம், மன்சூரலிகானை வெளியில் கொண்டு வர்றதுதான். அதைவிட்டு மற்ற விஷயங்களை பற்றி எதற்கு வெட்டியா பேசிட்டு இருக்கணும்’ என்றார்.
‘நான் சொன்னதையே புரிஞ்சுக்காம, எனக்கு ஒண்ணுமே தெரியாது. முட்டாள்ங்கிற மாதிரி மீடியா புரஜக்ட் பண்ணுறது எந்த விதத்திலும் சரியில்ல. யாரோ ஒருத்தர் இப்படி பண்ணினா பரவால்ல. யாருக்குமேவா அறிவில்ல?’ என்று தனக்கு நெருக்கமான மீடியா நண்பர்களிடம் புலம்பினாராம்.
ஆணானப்பட்ட விஜயகாந்தையே அரை லூசாக்கிவிட்ட ஊரு இது. கவனமா டீல் பண்ணுங்க சிம்பு. அவ்ளோதான் நம்ம அட்வைஸ்!
இந்தியா குறித்து நாசா வெளியிட்டுள்ள அதிர்ச்சிப் புகைப்படம்!
May 01, 2018இந்தியாவின் பருவநிலை மாற்றத்தை நாசா படம்பிடித்து வெளியிட்டுள்ளது. அதில் இருக்கும் சிவப்பு நிறப் புள்ளிகள், காட்டுத் தீயாக இருக்கலாம் எனத் த...
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, இந்தியாவின் பருவநிலை மாற்றத்தைப் புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளது. அந்தப் படங்களில், கடந்த பத்து நாள்களில் மட்டும் வயல்வெளிகள், காடுகள் தீப்பிடித்துள்ளதாகக் கூறியுள்ளது. உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, தென் இந்தியாவின் சில பகுதிகளில் சிவப்பு நிறப் புள்ளிகள்போல காணப்படுகின்றன. இந்தப் புள்ளிகள், புவி வெப்பமயமாதலால் ஏற்படும் மாறுபாட்டைக் குறிப்பதாக இருக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. மேலும், அதிக வெப்பத்தால் ஏற்படும் காட்டுத்தீயாகக்கூட இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த காட்டுத் தீயினால் ஏற்படும் கரும் புகைகள் மிகவும் ஆபத்தானது என்றும், இது மிகப்பெரிய இயற்கைப் பேரிடருக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை உடனடியாகத் தடுத்துநிறுத்த வேண்டும் என நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
கண் திருஷ்டியால் கஷ்டங்கள் தொடர்கிறதா?... இதோ சில டிப்ஸ்
May 01, 2018ஆரத்தி விசேஷ வைபவங்கள், சுபநிகழ்வுகளிலும், மணமக்கள் வீட்டினுள் வருதல், தாயும் குழந்தையும் முதல் முறை வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆரத...
விசேஷ வைபவங்கள், சுபநிகழ்வுகளிலும், மணமக்கள் வீட்டினுள் வருதல், தாயும் குழந்தையும் முதல் முறை வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆரத்தி எடுத்து திலகம் இடுவது பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது. ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு.
வாழை மரம்
விசேஷங்களின்போது குலை தள்ளி, பூவுடன் இருக்கும் வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.
வீட்டிற்குள் வைக்கும் பொருட்கள்
வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்ப கண்ணாடி, மீன் தொட்டி,கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம்.
உப்புக்குளியல்
வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.
எலுமிச்சம்பழம்
வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.
கடல் நீர்
வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.
மோடியாக மாறிய பிரபல நடிகர்! பொது இடத்தில் நடந்த உண்மை சம்பவம் - அதிர்ச்சியான புகைப்படம் உள்ளே
April 30, 2018இந்தியாவின் பிரதமராக இருப்பவர் மோடி என பலருக்கும் தெரிந்திருக்கும். சமூக வலைதளங்களில் கேலி கிண்டல்களுக்கு ஆளாவதில் இவர்களும் தப்பவில்லை. ...
மக்களை பொறுத்தவரை மிமி மற்றும் நெட்டிசன்களால் மகிழ்ச்சி தான். ஆனால் இவர்களை பார்த்து அரசியல் பிரமுகர்களும் பயப்பட தொடங்கியுள்ளனர் என்பதே உண்மை நிலை.
அண்மையில் மோடி, ரயில் நிலையத்தில் நிற்பது போல ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. உண்மை என்னவெனில் அவர் மோடியல்ல. அவர் கன்னட சினிமாவின் பிரபல நடிகர் M.P.ராமசந்திரன்.
ஸ்டேட்மெண்ட் 8/11 என்ற படத்தில் 3 காட்சிகளில் இவர் மோடியாக நடிக்கிறாராம். படத்திற்கு இப்படி ஒரு பெயர் வைக்க காரணம் கடந்த 2006 அக்டோபர் 11 ல் வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையாம்.
சரவணன்-மீனாட்சி புகழ் ரச்சிதா நடிக்கப்போகும் புதிய சீரியல்- அவருக்கு ஜோடி யாரு தெரியுமா? கேட்டா சந்தோஷப்படுவீங்க
April 30, 2018உண்மையான பெயரை மறந்து மீனாட்சியாக தமிழ் சினிமா மக்களின் மனதில் இடம் பிடித்திருப்பவர் ரச்சிதா. இவர் நடித்து சரவணன்-மீனாட்சி என்ற சீரியல் இப்...
ஆனால் அவ்வப்போது இந்த சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்கிற பேச்சும் அடிபடுகிறது. இந்த நேரத்தில் நடிகை ரச்சிதா அவருடைய அடுத்த சீரியல் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், நானும் என் கணவரும் இணைந்து ஒரு புது சீரியல் நடிக்க இருக்கிறோம்.
தற்போதைக்கு இது மட்டும் தான் கூற முடியும், என்ன சீரியல் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்பதை பொறுமையாக அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இவர்கள் இருவரும் இணைந்து இதற்கு முன் நடிக்க பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் ஹிட் சீரியலாகும்.
