'தமிழ் தலைவாஸ்’ பிராண்டு அம்பாசிடரானார் கமல்!

புரோ கபடி லீக் 5-வது சீஸன் போட்டி வருகிற 28-ம் தேதி முதல் அக்டோபர் 28-ம் தேதி வரை இந்தியாவின் 12 நகரங்களில் நடக்கிறது. இதில் களம் காணும் 12...

புரோ கபடி லீக் 5-வது சீஸன் போட்டி வருகிற 28-ம் தேதி முதல் அக்டோபர் 28-ம் தேதி வரை இந்தியாவின் 12 நகரங்களில் நடக்கிறது. இதில் களம் காணும் 12 அணிகளில் ஒன்றான ‘தமிழ் தலைவாஸ்’ அணியைப் பிரபலப்படுத்த அந்த அணியினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், 'தமிழ் தலைவாஸ்' அணிக்கு நடிகர் கமல்ஹாசனை பிராண்டு அம்பாசிடராக்கி இருக்கிறார்கள்.

கமல் தனது ட்விட்டர் பக்கத்தில்  'அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்' என்று ட்விட்டினார். பலரும் அர்த்தம் புரியவில்லை என தொடர்ந்து கமென்ட் செய்தனர்.

அடுத்த ட்விட்டாக, 'புரியாதோர்க்கு ஆங்கிலப் பத்திரிகையில் நாளை வரும் சேதி' எனத் தலைப்பிட்டு ஒரு கவிதையையும்  எழுதியிருந்தார். இந்நிலையில்தான் இந்த பிரஸ் ரிலீஸ் வெளியாகியிருக்கிறது. ‘தமிழ் தலைவாஸ்’ பிராண்டு அம்பாசிடர் ஆனதைத்தான் கமல் இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கிறார் என்கிறார்கள். 

மேலும் பல...

0 comments

Blog Archive