ஷாப்பிங் மால்களில் ‘ஹஸ்பண்ட் ரெஸ்ட் ரூம்’ – சீனா அசத்தல்!

ஒரு காதலியை ஷாப்பிங் அழைத்து செல்லும் ஆடவன் அதே பெண் தன் மனைவியான பிறகு  ஷாப்பிங் அழைத்து செல்லும் போது மட்டும் ஒவ்வொரு கணவர்களும் முகத்த...

ஒரு காதலியை ஷாப்பிங் அழைத்து செல்லும் ஆடவன் அதே பெண் தன் மனைவியான பிறகு  ஷாப்பிங் அழைத்து செல்லும் போது மட்டும் ஒவ்வொரு கணவர்களும் முகத்தை சுளிக்கத்தான் செய்கிறார்கள்! இதற்கு பல்வேறு உள வியல் காரணங்கள்  இருந்தாலும் ஒவ்வொரு  கடையிலும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும் என்பதும் அவர்க ளது வேதனைக்கு காரணமாகும். அதிலும் திருவிழா காலங்களில் பெண்கள் ஆடைகள் எடுக்கும் போது கணவர்கள் அந்த கடையின் ஓரத்தில் நின்று கொண்டு, பொழுது போகாமல் தவிப்பது வாடிக்கையான ஒன்றுதான். நம் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதிலுமே இந்த பிரச்னை இருக்கின்றது. இப்படி மணிக்கணக்கில் காத்துக்கிடக்கும் கணவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், நேரத்தை செலவழிக்கும் வகையிலும் சீனாவில் ஷாப்பிங் மால்களில் இன்கிரெம் என்ற நிறுவனம் சார்பில் ‘ஹஸ்பண்ட் ரெஸ்ட் பூத்’ அமைக்கப்பட்டுள்ளது.

ஆம்.. ஆண்களின் இந்த ‘தனிமை’ கஷ்டத்தை உணர்ந்துதான் சீனா ஷாங்காயில் உள்ள ‘குளோபல் ஹார்பர் மால்’ என்ற வர்த்தக நிறுவனம் போக்கும் வகையில் ஒரு ஸ்பெஷலான் தனி கண்ணாடி அறைகளை அமைத்து அசத்தி  உள்ளது. ‘கணவர்கள் ஓய்வு பூத்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த தனி கண்ணாடி அறையில், பெண்கள் ஷாப்பிங் செய்யும் நேரத்தில் கணவர்கள் பொழுதை போக்கலாம். கண்ணாடி அறையில் ‘டிவி’ வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் பிடித்த சேனல்களை வைத்து நிகழ்ச்சிகளை பார்த்து மகிழலாம்.

மேலும் கண்ணாடி அறையின் ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதியில் தேவைப்பட்டால் மசாஜ் வசதியையும் ஏற்படுத்தி கொள்ளலாம். படுக்கையில் படுத்து கொண்டால், அதுவே உடலை மசாஜ் செய்து விடும். முதல் கட்டமாக 4 ஷாப்பிங்கள் மால்களில் கணவர்களுக்கான இந்த பிரத்யேக ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. தலா ரூ.4 லட்சம் செலவில் இவை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இலவசமாக இந்த மையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். பின்னர் இந்த மையத்தை பயன்படுத்துவதற்கு மொபைல் ஆப் மூலமாக சிறு தொகை செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வசதி தற்போது ஷாங்காய் நகரில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால், அனைத்து கடைகளிலும் தனிமை கணவர்களுக்கு சிறப்பு அறைகளை ஏற்படுத்த பல்வேறு நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பல...

0 comments

Blog Archive