அனுபவம்
நிகழ்வுகள்
இந்த பிக் பாஸ் கமல் பிளானை நம்ம அரசியல்வாதிங்களே புரிஞ்சிக்கலை!
July 18, 2017
வெள்ளித்திரையிலிருந்து சின்னத் திரைக்கு வந்திருக்கும் நடிகர் கமல் விஸ்வரூபம் பட பஞ்சாயத்திற்கு பின்னர் தமிழக அரசியல்களத்தின் மைய புள்ளியாக சில நாட்களாக மையம் கொண்டுள்ளார். நாட்டில் இதுதான் தலையாய பிரச்னையக்கும் என்ற ரீதியில் சிலபல தனியார் தொலைக்காட்சிகள் அவரைப் பற்றி விவாத மேடை நடத்தி பொழப்பு நடத்தி வருகின்றன. இந்த கமல ஹாசன் தமிழக அரசை விமர்சித்து பேசுவது நியாயம் தான், அது தமிழக மக்களின் பொருமலாக,குரலாக பார்த்து தங்களை அமைச்சர்கள் திருத்திக் கொள்ள வேண்டும் என்று கமலஹாசனுக்கு ஆதரவாக அறிக்கை விடுகிறது திமுக தலைமை. கூடவே முன்னாள் முதல்வர் ops அவசர அவசரமாக கமலஹாசன் ஊழல் மலிந்த தமிழக அரசு என விமர்சனம் செய்தது சரிதான் என்று அறிக்கை விடுகிறார்.
அதே சமயம் அரசியலுக்கு வந்து விட்டு ஊழல் பற்றி பேசு என்கிறார் அமைச்சர் ஒருவர் எங்களை விமர்சிக்க கமலுக்கு தகுதியில்லை என்று ஒரு அமைச்சர் பேசுகிறார்.BJP மாநில தலைவர் தமிழிசையோ ஜெயலலிதா இருந்த போது கமல் ஏன் ஊழல் பற்றி பேசவில்லை என கேள்வி எழுப்பி குட்டையை குழப்புகிறார். இதையெல்லாம் கவனிக்கும் போது இவர்கள் அனைவரும் அரசியலில் மட்டுமல்ல சினிமாக்காரர்களை அனுமானிப்பதிலும் தப்புக் கணக்குதான் போடுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
கமலஹாசன் அரசியல் விமர்சனம் செய்பவர்தான், தற்போது அவர் பேசிய பேசி வருகிற அரசியல் விமர்சனங்கள் தமிழக மக்கள் நலன் சார்ந்தது அல்ல. நம் தமிழக மக்கள் விலைவாசி உயர்வு, குடி தண்ணீர், டெல்டா விவசாயம் பொய்த்து போனது என மக்களின் அடிப்படையான ஜீவாதார பிரச்சினைகள் பற்றி பேசவோ, நீட் தேர்வை ரத்து செய்யவோ உரிமைக் குரல் எழுப்பவில்லை. மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்ததால், மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதைக் கண்டித்து ட்விட் போட வில்லை..
தனியார் தொலைக்காட்சி ஒன்று வியாபார நோக்குடன் நடத்தி வரும் நிகழ்ச்சியின் தலைமை பொறுப்பு வகிக்கும் கமலஹாசன் தனது நிகழ்ச்சியை பிரபலப்படுத்தும் பொறுப்பும் கடமையும் அவருக்கு உண்டு. அதற்கு கமலஹாசன் எடுத்த ஆயுதம்தான் இந்த தமிழக அரசியல்.
தற்போதைய ஸ்டராங்காக இல்லாத அரசின் ஊழல்களை பற்றி பேசினால் எதிர்ப்புகள் அதிகமாகும். அப்போதுதான் நடத்தும் Cameshow பிரபலமடைந்து விடும் என்ற அவரின் நம்பிக்கை வீண் போகவில்ல. அத்துடன் நடிகரின் அரசியல் விமர்சனங் களுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் தாங்களும் பிரபலமடையலாம் என்ற அவர்களின் கணக்கு தவறாகவில்லை.
மொத்தத்தில் தமிழக மக்களை பாதிக்கும் உண்மையான பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளி, மக்களை திசை திருப்ப கமலை தமிழக அரசு பயன்படுத்திக் கொண்டது போல,தனதுநிகழ்ச்சியை பிரபலப்படுத்த அரசியல் சர்ச்சைகளை பயன்படுத்தி பன்னாட்டு கம்பெனிக்கு பணம் சம்பாதித்து கொடுக்கும் வேலையை கச்சிதமாக செய்து முடித்துள்ளார் – கமலஹாசன் இந்த சூட்சமம் தெரியாமல் – புரியாமல் தமிழக அரசியல்வாதிகள் கமல்ஹாசனுக்கு ஆதரவு குரல் எழுப்பியது வேடிக்கையானதே.

0 comments