அனுபவம்
நிகழ்வுகள்
மண்ணும் சூரியனும் தேவையில்லை... இனி விவசாயம் இப்படித்தானா?
July 13, 2017
தண்ணீர் இல்லை... விவசாயம் செய்ய வளமான மண் இல்லை... களத்தில் இறங்கி வேலை செய்ய ஆட்கள் இல்லை... இப்படி ஒவ்வொரு நாளும் விவசாயத்திற்கான சிக்கல்கள் சிரமமாகிக் கொண்டேயிருக்கும் சூழலில், அதற்கு மாற்றாகப் பல கண்டுபிடிப்புகளைப் பலரும் முன்னெடுத்துக் கொண்டே தானிருக்கின்றனர். அப்படி சமீப காலங்களில் உலகளவில் அதிகம் விவாதிக்கப்படும் விவசாய மாற்று வழியாக உருவாகியிருக்கிறது " வெர்டிகல் ஃபார்மிங் " ( Vertical Farming ) எனப்படும் " செங்குத்து விவசாய முறை" .
அறைகளில் செய்யப்படும் விவசாயம்
மண்ணும், சூரியனும் தேவையில்லா விவசாயம் !!!
ஒரு பெரிய அறை. ஒன்றன் மேல் ஒன்றாக, அடுக்காக இருக்கும் அலமாரி. ஒவ்வொரு தட்டிலும் செடிகள் நடப்பட்டிருக்கும். ஒவ்வொரு தட்டிற்கும் மேலே, எல்.ஈ.டி. பல்புகள் எரிந்துக் கொண்டிருக்கும். இதுதான் வெர்டிகல் ஃபார்மிங்கின் அடிப்படை. மிகக் குறைந்த அளவிலான தண்ணீர், மண்ணின் அவசியமில்லாமல் விவசாயம் செய்வது இந்த முறையின் சிறப்பம்சம். இதில் இரண்டு வகை இருக்கிறது : ஏரோபோனிக் ( Aeroponic ) மற்றும் ஹைட்ரோபோனிக் ( Hydroponic) .
பொதுவாக ஒரு செடி வளர சூரிய வெளிச்சம், கார்பன் டை ஆக்ஸைட், தண்ணீர், ஆக்ஸிஜன் மற்றும் நியூட்ரிஷன்கள் தேவை. இந்த வெர்டிகல் ஃபார்மிங்கில் சூரிய வெளிச்சத்திற்குப் பதில் எல்.ஈ.டி பல்புகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. மண்ணிற்கு பதில் செடிகள் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு வகை துணியில் நடப்படுகின்றன. இதில் ஏரோபோனிக் முறையில் வேர்களுக்குத் தண்ணீர் "ஸ்ப்ரே" ( Spray ) செய்யப்படுகிறது. ஹைட்ரோபோனிக் முறையில் நியூட்ரிஷன் நிறைந்த நீரின் பெட்டியில் வேர்கள் இருக்கின்றன. இந்த இரண்டு வகையிலுமே களத்தில் செய்யப்படும் விவசாய முறையைக் காட்டிலும் அதிகளவிலான தண்ணீரை மிச்சம் செய்ய முடியும். குறிப்பாக, ஏரோபோனிக் முறையில் வழக்கமாகக் களத்தில் உபயோகப்படுத்தப்படும் தண்ணீரில் 95 சதவீதம் வரை மிச்சம் பிடிக்க முடியும்.
இன்றைய தினத்தில் உலகிலிருக்கும் நன்னீர் அசுத்தமாவதற்குக் காரணம் 70 சதவீதம் விவசாயம் என்றுதான் சொல்லப்படுகிறது. அதே போல், உலகிலிருக்கும் நன்னீரில் 70 சதவீதம் விவசாயத்திற்காகத்தான் பயன்படுத்தப்படுகிறது. விவசாயம் செய்வதற்கான இடமும் பெருமளவு சுருங்கிப் போய்விட்டது. இந்தப் பிரச்னைகளிலிருந்து மனித இனத்தைக் காக்க மாற்று விவசாய முறைகள் அவசியப்படுகின்றன. அதற்கான மிகச் சிறந்த மாற்று முறையாக இந்த வெர்டிகல் ஃபார்மிங் முறை இருக்கிறது.
அறையின் சீதோஷ்ண நிலையைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால், வருடம் முழுக்கவே பயிர்களை இதில் விளைவிக்கலாம். மழை, வெள்ளம், வெப்பம், வெயில் போன்ற காரணங்களால் பயிர் சேதமடைவது பெருமளவு தடுக்கப்படும். மேலும், இந்த முறையைப் பெரும்பாலும் வளர்ந்த நகரங்களில்தான் செயல்படுத்துகின்றனர். நகர மக்களின் தேவைகளை அவர்களாகவே பூர்த்தி செய்துகொள்ளும் வழியை இந்த முறை கொடுக்கிறது. மேலும், அடுக்கு வரிசையில் விவசாயம் செய்யப்படுவதால் மண்ணின் பரப்பில் விவசாயம் செய்து கிடைக்கும் மகசூலை விட 130 தடவைகள் அதிகம் கொடுக்கும் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
விவசாயம் - வெர்டிகல் ஃபார்மிங்
1999ல் கொலம்பியா யுனிவர்சிட்டியைச் சேர்ந்த டிக்சன் டெஸ்பொம்மியர் ( Dickson Despommier ) எனும் பேராசிரியர் தன்னுடைய மாணவர்களைக் கொண்டு செய்த ஆராய்ச்சிதான் இன்றைய வெர்டிகல் ஃபார்மிங்கின் அடிப்படையாக அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் சில பள்ளி, கல்லூரிகளின் கேன்டீனில்தான் இந்த முறையைப் பரீட்சித்துப் பார்த்தார்கள். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாகப் பல நிறுவனங்கள் இந்தத் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தன.
லண்டனின் ஒரு பழைய வெடிகுண்டு தொழிற்சாலையில், நியுயார்க்கின் குடோனில், பெல்ஜியத்தின் கார்பெட் தொழிற்சாலையில் , மறுசீரமைக்கப்பட்ட கப்பல் கன்டெய்னரில் எனப் பல இடங்களில் இந்த வெர்டிகல் ஃபார்மிங் முறையைச் செயல்படுத்தியிருக்கிறார்கள். இதில் குறிப்பாக அமெரிக்க நியூ ஜெர்ஸி மாகாணத்தில் இயங்கும் " ஏரோ ஃபார்ம்ஸ் " ( Aero farms ) எனும் நிறுவனம் இந்தத் தொழில் முறையின் முன்னோடியாக இருக்கிறது.
இப்படிக் கருத்தியியல் ரீதியாக ஒரு சிறந்த முறையாக அறியப்பட்டாலும், இதில் நிறைய சிக்கல்கள் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. குறிப்பாக, இதில் மிகச் சில வகையான பயிர்களை மட்டுமே விளைவிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. இந்த விவசாய முறைக்குச் செலவும் அதிகம். நிலத்தில் செய்யும் போது, சூரிய வெளிச்சம் நமக்கு இலவசமாக கிடைக்கிறது. இங்கு வெளிச்சத்தை நாம் உருவாக்குகிறோம். இது இயற்கைக்கு எதிரான செயலாக இருக்கிறது . ரசாயனங்கள் கலக்காமல் இயற்கை முறையில்தான் இந்த விவசாயம் செய்யப்படுகிறது என்றாலும் கூட, எல்.ஈ.டி விளக்கு வெளிச்சத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு உயிர் வாழும் இந்தச் செடிகள் வீரியமிக்கவையாக வளருமா? என்ற கேள்வியும் எழுகிறது.
எதுவாக இருந்தாலும், 2050ல் உலக மக்கள் தொகை ஆயிரம் கோடியை எட்டும். அப்போது மிகப் பெரிய உணவுப் பஞ்சம் ஏற்படும். அத்தனைப் பெரிய மக்கள் தொகைக்கு, உணவளிக்கக் கூடிய ஒரே மாற்று வழி " வெர்டிகல் ஃபார்மிங்" தான் என்று உறுதியாக சொல்கிறார்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்போர்.

0 comments