கண்ட மாடுகளுக்கும் பதில் சொல்ல வேண்டியதில்ல! கமல் ஆவேசம்!

கூடங்குளம், கதிராமங்கலம், நெடுவாசல் என்று எந்த ஆபத்துக்கும் வராத சந்து மக்கள் கட்சி, சினிமாக்காரர்கள் தும்மினால் கூட போட்டது போட்டபடி ஓடி வ...

கூடங்குளம், கதிராமங்கலம், நெடுவாசல் என்று எந்த ஆபத்துக்கும் வராத சந்து மக்கள் கட்சி, சினிமாக்காரர்கள் தும்மினால் கூட போட்டது போட்டபடி ஓடி வருவது வெகு கால வாடிக்கை. யாரை தொட்டாலும் எருமை மாட்டின் மீது போஸ்டர் ஒட்டிய கதையாக அமைதி காக்கும் மக்கள், சினிமாக்காரன் அல்லது காரி என்றால், கண்ணை விழித்துக் கொண்டு கவனிப்பதும் யதார்த்தம்தானே?

இருந்தாலும், ஒருவித ‘பப்ளிசிடி ஸ்டன்ட்’ இது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். இந்த விஷயம் மக்களுக்கு தெரியும் என்பதே தெரியாத இந்த மக்குகளுக்கு நேற்றும் கொலகுத்து. இவர்களின் போராட்டத்திற்கு சின்னதாக அசைந்து கொடுத்தார் கமல். (ஒருவேளை விஜய் டிவிக்கு பப்ளிசிடியாக இருக்கும் என்று நினைத்திருக்கலாம்)

நேற்றிரவு எட்டரை மணி சுமாருக்கு மீடியாக்களை கமல் அழைக்க, மற்ற சேனல்களின் வேன்கள் கூட நேரடி ஒளிபரப்புக்கு அலைபாய்ந்தன. முண்டியடித்துக் கொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இதுவரை இல்லாத கோபத்துடன் பதிலளித்தார் கமல். எல்லா கேள்விகளையும் துணிச்சலாக எதிர்கொண்டது அவரது அறிவையும் ஆற்றலையும் ஒருசேர வெளிப்படுத்த… ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் அவர் சொன்ன பதில் செருப்படி.

சந்து மக்கள் கட்சி குறித்த கேள்விதான் அது. “ஆராய்ச்சி மணியை யார் வேண்டுமானாலும் அடிக்கலாம். ஆனால், கன்றை இழந்த மாட்டுக்குதான் பதில் சொல்ல வேண்டும். கண்ட மாடுகளுக்கும் அல்ல” என்று யாருமே எதிர்பார்க்காத பதிலை கூறி பதற விட்டார் கமல். இவர்களை மாடு என்று திட்ட வேண்டும் என்று கமல் முடிவு செய்துவிட்டதாகவே தெரிகிறது. ஏன்?

பொதுவாகவே சங்க காலத்தில் பசு தன் கன்றின் மரணத்திற்காக நீதி கேட்ட வரலாறை ஒப்பிக்கும் தமிழறிஞர்கள், ‘கன்றை இழந்த பசு’ என்றுதான் குறிப்பிடுவார்கள். ‘கன்றை இழந்த மாடு’ என்று குறிப்பிட்டதேயில்லை. நேற்று கமல் வித்தியாசமாக உச்சரித்ததன் மூலம், அவர் எவ்வளவு பெரிய புத்திசாலி என்பதை நிரூபித்தார்.

சந்து மக்கள் கட்சி இனிமேலாவது இதுபோன்ற அற்ப விஷயங்களில் கவனம் செலுத்தாமல், கதிராமங்கலம் பக்கம் போய் சாகும் வரை தண்ணி குடிக்காமலிருக்கலாம்!

மேலும் பல...

0 comments

Blog Archive