மோடி கவர்மெண்ட் மீதான நம்பிக்கை நம்மாள்கிட்டே எக்கச்சக்கமா இருக்குது!

உலக நாடுகளில் மக்கள் தங்கள் அரசாங்கத்தின் மீது கொண்ட நம்பிக்கை குறித்து போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட அறிக்கையில் இந்தியா முதல் மூன்றாம் இ...

உலக நாடுகளில் மக்கள் தங்கள் அரசாங்கத்தின் மீது கொண்ட நம்பிக்கை குறித்து போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட அறிக்கையில் இந்தியா முதல் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் 73 சதவீத மக்கள் மோடி தலைமை யிலான அரசின் மேல் அதிக நம்பிக்கை கொண்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஒரு நாட்டின் அரசின் மீது மக்கள் வைக்கும் நம்பிக்கை அந்நாட்டின் முன்னேற்றத்திற்கும், ஸ்திரதன்மைக்கும் மிக அவசியம். மேலும் அரசாங்கத்தின் முடிவுகள் மற்றும் திட்டங்களுக்கு மக்களின் நம்பிக்கையே அதிக பலனளிக்கும்.

ஒரு அரசு அதன் குடிமக்களை ஆபத்தில் இருந்து பாதுகாக்க முடியும் மற்றும் பொது சேவைகளை சிறப்பாக வழங்க முடியும் என்ற நம்பிக்கை அளித்தால் மட்டுமே அந்நாட்டு மக்களுக்கு தங்கள் அரசின் மீது நம்பிக்கை அதிகரிக்கும்.

அந்த வகையில் உலக புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை உலக நாடுகளில் உள்ள அரசாங்கள் மீது அந்நாட்டு மக்கள் எந்தளவு நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்ற அறிக்கையை வெளியிட்டது.

ஓசிஈடி என்ற பொருளாதார நிறுவனத்தின்  ‘கவர்ண்மண்ட் அட் அ கிளான்ஸ்’ (Government at a Glance) என்ற அறிக்கையின் விவரங்கள் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் வெளியான பட்டியலில் இந்தியா மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் பிரதமர் மோடியின் அரசின் மீது 73 சதவித மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக இந்த கணக்கெடுப்பு அறிவித்துள்ளது.

முதல் இரண்டு இடங்களில் சுவிட்சர்லாந்து (80 சதவீதம்) மற்றும் இந்தோனேசியா (79 சதவீதம்) இடம்பெற்றுள்ளன. இந்தியாவை தொடர்ந்து கனடா நான்காம் இடத்தை பிடித்துள்ளது. அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் டிரூடோ தலைமையிலான அரசின் மீது 62 சதவீத மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

கனடாவை தொடர்ந்து 58 சதவீதத்துடன் துருக்கி மற்றும் ரஷ்யா, 55 சதவீதத்துடன் ஜெர்மனி ஆகியவை அடுத்தத்த இடங்களை பிடித்துள்ளன.

பிரிட்டன் பிரதமர் தெரஸா மே அரசு 41 சதவீத மக்களின் நம்பிக்கை பெற்று 10ம் இடத்தையும், 36 சதவீதத்துடன் ஜப்பான் 11ம் இடத்தையும் பிடித்துள்ளது.

அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வெறும் 30 சதவீத மக்களின் நம்பிக்கை பெற்று 12ம் இடத்தில் உள்ளது

மேலும் பல...

0 comments

Blog Archive