சட்டப்படி அனுமதியில்லை: கமல் குறித்த கேள்விக்கு நடிகை கவுதமி பதில்

பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட நடிகையின் பெயரை கமல்ஹாசன் குறிப்பிட்டது சட்டப்படி தவறு என நடிகை கவுதமி கூறியுள்ளார். கேரளாவில் பிரபல இள...

பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட நடிகையின் பெயரை கமல்ஹாசன் குறிப்பிட்டது சட்டப்படி தவறு என நடிகை கவுதமி கூறியுள்ளார்.

கேரளாவில் பிரபல இளம் நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டார். இது சம்மந்தமாக பல்சர் சுனில் உட்பட 7 பேரை பொலிசார் கைது செய்தார்கள்.

கடத்தலில் மலையாள நடிகர் திலீப்புக்கு தொடர்ப்பு இருப்பதாக அவரையும் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி சர்ச்சை தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பாதிக்கப்பட்ட கேரள நடிகையின் பெயரை குறிப்பிட்டார். இதையடுத்து நடிகையின் பெயரை குறிப்பிட்டத்தற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் கமலை வற்புறுத்தியுள்ளது.

இந்நிலையில், இது குறித்து நடிகை கவுதமியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர் அதற்கு பதிலளித்த அவர், இது வேதனையான விடயம். அந்த நடிகையின் பெயரை குறிப்பிட சட்டப்படி அனுமதி இல்லை என கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive