அனுபவம்
நிகழ்வுகள்
பிக்பாஸ் முதல் க்ரோம் வரை... கமல் கட்சி சின்னத்தின் ஆறு குறியீடுகள்!
February 22, 2018
'என்னவா இருக்கும்?' என சில மாதங்களாக மண்டை காய்ந்துகொண்டிருந்த தமிழனுக்கு நேற்று மாலைதான் விடை கிடைத்திருக்கிறது. 'மக்கள் நீதி மய்யம்'. கமல் படங்களைப் போலவே கட்சிப்பெயரும் லோகோவும் வித்தியாசமாகத்தான் இருக்கின்றன. அவர் இரண்டையும் அறிமுகப்படுத்திய அடுத்த நொடியிலிருந்து ஆளாளுக்கு மீம்ஸ், டீகோடிங் என பரபரப்பு கிளப்புகிறார்கள். கமலே தெளிவுரை விளக்கம் வேறு கொடுத்திருக்கிறார். நாமும் நம் பங்கிற்கு அவர் கட்சிப் பெயரையும் சின்னத்தையும் டீகோட் செய்ததிலிருந்து...!
* தமிழ்நாட்டில் கட்சி தொடங்கினால் திராவிட, தமிழர், கழகம், கட்சி போன்ற வார்த்தைகள் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால், முதன்முறையாக 'மய்யம்' என அறிவித்திருக்கிறார் கமல். 80 களில் கமல் நடத்திவந்த பத்திரிகையின் பெயர் 'மய்யம்'. பொதுவாகவே எழுத்தாளர்களை அரசியல்வாதிகள் மதிப்பதில்லை என்ற குரல்கள் கேரளா நீங்கலாக மற்ற இடங்களில் கேட்பதுண்டு. இதுநாள் வரை ஓரங்கட்டப்பட்ட எழுத்தாளர்களையும் அரவணைத்துச் செல்லும் அமைப்பாக இது இருக்கும் என்பதைத்தான் இந்தப் பத்திரிகைப் பெயர் குறிக்கிறது.
* கட்சி லோகோவை குறுகுறுவென உற்றுப் பார்த்தால் இதற்குமுன் எங்கேயோ பார்த்தது போலவே இருக்கிறது. யெஸ்... பிக்பாஸ் லோகோவேதான்! நடுவே வட்டமாக ஒரு கண், அதைச் சுற்றி ஒரு நீள்வட்டம்! போக, வையாபுரி, பரணி, சினேகன் எனக் கூடவே பிக் பாஸ் செட்டையும் அழைத்துச் செல்கிறார். அந்நிகழ்ச்சியின் கேப்ஷனான 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' என்பதை ஊழல்வாதிகளுக்கு எதிரான எச்சரிக்கையாகப் பதிவு செய்திருக்கிறார் கமல் என்றால் அது மிகையாகாது.
* சின்னத்தை தட்டையாக்கிப் பார்த்தால் பறக்கும் தட்டு போலவே இருக்கிறது. கமல் தனது ஆஸ்தான குருவாக நினைப்பது அப்துல் கலாமை! அவர் விண்வெளித்துறையில் செய்த சாதனைகளை உலகமே அறியும். அவரை மரியாதைக்குட்படுத்தும் விதமாகவே அவர் ஊரிலிருந்து பயணத்தைத் தொடங்கியதோடு மட்டுமல்லாமல் பறக்கும் தட்டு குறியீடையும் வைத்திருக்கிறார் கமல்.
* கமலின் லோகோ கூகுள் க்ரோம் போல இருப்பதாக சமூகவலைதளங்களில் சிலர் சொல்லிவருகிறார்கள் சிலர். ஏன் இருக்கக் கூடாது? சினிமாவின் எக்சைக்ளோபீடியாவாக கமல் இருக்கும்போது அவர் தொடங்கும் கட்சி, அரசியலின் கூகுளாக இருக்கக் கூடாதா? 'இங்கே கேட்டது எல்லாம் கிடைக்கும் எம் மக்களுக்கு' என்பதை குறியீடு மூலமாக உணர்த்துகிறார் கமல் என்பதை நாம் உணர வேண்டும்.
* ஆறு கைகள், சிவப்பு, வெள்ளை, கறுப்பு ஆகிய நிறங்கள் கொடியில் இடம்பெற்றிருக்கின்றன. ஆறு கைகள் தமிழகத்தின் ஆறு பெரிய கட்சிகளையும் சிவப்பு, வெள்ளை, கறுப்பு அவற்றின் கட்சிக்கொடிகளையும் குறிக்கிறது. நட்சத்திரம் வி.சி.கவைக் குறிக்கிறது. இந்தக் கட்சிகள் அனைத்தோடும் இணைந்து தமிழர் நலனுக்காக குரல் கொடுப்பேன் என்பதைத்தான் கமல் சொல்லவருகிறார். மாற்றுக்கட்சிகளிலிருந்து வருபவர்களுக்கும் எங்களிடையே இடமுண்டு என அவர் சொல்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
* இந்தியத் தேசியமே முக்கியம் எனச் சொல்லியிருக்கிறார் கமல். இதன்மூலம் தமிழ்தேசியவாதிகளுக்குக் கடுமையான ஏமாற்றத்தை பரிசளித்ததோடு கொடியின் நடுவே அசோக சக்கரத்தைக் குறிக்கும் வட்டத்தையும் வைத்திருக்கிறார். தேக்க நிலையில் இருக்கும் அரசு இயந்திரத்தை ஓடவைக்கும் சக்கரமும் அதைச் சுற்றி இருக்கும் சைக்கிள் செயினுமாக இருப்போம் என்பதை இந்த வட்டம் வழியாகச் சொல்லவருகிறார் என்பதாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.

0 comments