அதிசய கோயில்: இலை, தழைகள் பாறைகளாக மாறும் விடைதெரியாத மர்மம்..!

இந்த உலகம் பல அதிசயங்கள் நிறைந்தது. இன்னும் பல அதிசய நிகழ்வுகளுக்கு விடை தேடிக்கொண்டு இருக்கின்றன. அப்படியொரு விடைதெரியாத அதிசயம் சுருளிமல...

இந்த உலகம் பல அதிசயங்கள் நிறைந்தது. இன்னும் பல அதிசய நிகழ்வுகளுக்கு விடை தேடிக்கொண்டு இருக்கின்றன. அப்படியொரு விடைதெரியாத அதிசயம்
சுருளிமலையில் உள்ளது.

அந்த காலத்தில் கோயில் கட்டும் போது ஒவ்வொரு கோயிலிலும் ஏதாவது ஒன்றைத் தனித்தன்மையுடன் அமைத்துள்ளனர். அந்தவகையில் இந்த முருகன் கோயிலுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு!

தேனி மாவட்டம், கம்பம் அருகில், சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது சுருளி அருவி. மேற்குத்தொடர்ச்சி மலையின் சுருளிமலையில் அருள்மிகு சுருளிவேலப்பர் கோயில் கொண்டுள்ளார். சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இங்கு சுருளிவேலப்பர் மூலவராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.   

பொதிகை மலையும் சதுரகிரி மலையும் இணைந்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பிரிவுகளில் சுருளி மலை அமைந்துள்ளது. முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தெட்டாயிரம் ரிஷிகளும், பதினெண் சித்தர்களும் தவம் புரிந்து அருள்பாலிக்கும் அற்புதமான மலை இது. சுருளி அருவியான பல மூலிகைகள் பட்டு மருத்துவ குணங்களுடன் வெள்ளியை இறைத்தது போல் கொட்டுவதால் இதற்கு சுருளி தீர்த்தம் என்று பெயர். பழனி முருகனின் நவபாசான சிலையை உருவாக்கிய போகர் சித்தர் தனது இறுதி மூலிகையை இந்த மலையில் இருந்து தான் எடுத்ததாகக் கூறப்படுகிறது. அவரின் குருநாதர் காலாங்கி சித்தர் பன்னெடுங்காலம் தவம் செய்த பூமி இது. சுருளி மலையைச் சுற்றி சுமார் 225 குகைகள் உள்ளதாகவும் இன்றும் பல சித்தர்கள், ரிஷிகள், தவமிருப்பதாகவும் நம்பப்படுகிறது.

அப்படிப்பட்ட குகைக்கோயிலில் தான் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். அங்குள்ள விபூதிக் குகையில் என்ன சிறப்பு என்றால், அங்கிருக்கும் ஈர மணல் காய்ந்த பின் விபூதியாக மாறுகிறதாம். இங்குள்ள மரம் ஒன்று தொடர்ந்து நீர் விழுந்ததில் பாறையாக காட்சியளிக்கிறது. 48 நாட்களில் இந்நீரில் விழும் இலை, தழைகள் பாறை போல மாறுமாம். பாறை மீது நீர் விழுந்தாலும் வழுக்குத்தன்மையின்றி இருப்பது வியப்பிற்குரியது. இந்தக் கோயில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்றுநீர் பொங்கி வந்து கொண்டிருப்பது அதிசயமாகும்.

இங்குப் பிரதானமாக வீற்றிருக்கும் சுருளியாண்டவர் சந்நதியில் கிழக்கு பாகத்தில் அமைந்துள்ள இமயகிரி சித்தர் குகை மிகவும் பிரசித்தி பெற்றது. இமயமலையில் வாழ்ந்த சித்தர் ஒருவர் சுருளி மலையில் தங்கி தவமியற்றி சிவபெருமான் தரிசனம் பெற்ற குகையில் சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்துள்ளார். இது இமயகிரி சித்தர் குகை என்று அழைக்கப்படுகிறது. 

மேலும் பல...

0 comments

Blog Archive