ரூ 1000 கோடி பட்ஜெட்டில் அமீர்கான், ஒரே படம் தான்- தயாரிப்பாளர் யார் தெரியுமா?

அமீர்கான் இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி. இவர் நடிப்பில் வெளிவந்த தங்கல் ரூ 2000 கோடி, சீக்ரட் சூப்பர் ஸ்டார் ரூ 950 கோடி என வசூல் ...

அமீர்கான் இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி. இவர் நடிப்பில் வெளிவந்த தங்கல் ரூ 2000 கோடி, சீக்ரட் சூப்பர் ஸ்டார் ரூ 950 கோடி என வசூல் சாதனை படைத்தது.

இவரின் தூம்-3, 3 இடியட்ஸ் என பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ருத்ரதாண்டவம் ஆடியது, இந்நிலையில் அமீர்கான் தற்போது தங்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தில் இவருடன் நடிகர் அமிதாப் பச்சனும் நடிக்க, படம் இந்த தீபாவளிக்கு வருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் அமீர்கான் இனி ஒரு 10 வருடத்திற்கு ஒரே படத்தில் நடிக்க ப்ளான் செய்துள்ளாராம், இதுக்குறித்து நாம் முன்பே ஒரு முறை தெரிவித்து இருந்தோம்.

மேலும், இவை மஹாபாரதத்தை அடிப்படையாக கொண்டு எடுக்க, இதற்கு ரூ 1000 கோடி பட்ஜெட் ஒதுக்கிவுள்ளார்களாம். இப்படத்தை முகேஷ் அம்பானி தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் பல...

0 comments

Blog Archive