தடையை மீறி நடக்குதா விஜய் ஷுட்டிங்?

முன் எப்போதும் இல்லாதளவுக்கு படு சூடாக நடந்து கொண்டிருக்கிறது தமிழ்சினிமா ஸ்டிரைக். ‘கிழங்கு கெட்டா பசு மாட்டுக்கு, கிழவன் கெட்டா சுடுகாட்ட...

முன் எப்போதும் இல்லாதளவுக்கு படு சூடாக நடந்து கொண்டிருக்கிறது தமிழ்சினிமா ஸ்டிரைக். ‘கிழங்கு கெட்டா பசு மாட்டுக்கு, கிழவன் கெட்டா சுடுகாட்டுக்கு’ என்பதை போல இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், கண்ணும் கருத்துமாக வேலை நிறுத்தத்தை கண்காணித்துக் கொண்டிருக்கிறது தயாரிப்பாளர் சங்கம். அப்படியிருந்தும் இன்று காலையிலிருந்து வெந்நீரை கொட்டிக் கொண்டது போல குய்யோ முய்யோ ஆகிவிட்டார்கள் சில தயாரிப்பாளர்கள். ஏன்?

விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தின் ஷுட்டிங் சென்னையிலிருக்கும் விக்டோரியா ஹாலில் நடந்து வருகிறது. அதெப்படி? விஜய் படம்… அதுவும் சன் டி.வி தயாரிக்கும் படம் என்றால் மட்டும் சலுகை கொடுப்பீங்களா? என்றுதான் இவ்வளவு ஆத்திரம். அதிலும் ஒரு நியாயம் இருக்கிறதல்லவா? ஆனால் அதைவிட பெரிய நியாயத்தை முன் வைத்து வாயடைக்க வைத்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.

23 ந் தேதியிலிருந்து வெளியூர் ஷுட்டிங், வெளிநாட்டில் நடக்கும் படப்பிடிப்புகள் நிறுத்தப்படுகின்றன. அதற்கு முன் தமிழ்நாட்டில் 16 ந் தேதியிலிருந்தே ஸ்டிரைக். தவிர்க்க முடியாத காரணத்தால் ஷுட்டிங் வைப்பவர்கள் மட்டும் சங்கத்தில் ஆதாரத்தோடு கடிதம் கொடுத்தால் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்திக் கொள்ள அனுமதி தரப்படும் என்று கூறப்பட்டதாம்.

அப்படி சன் டி.வி நிர்வாகமும், மேலும் மூன்று தயாரிப்பாளர்களும் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். இதில் ஒருவர் டெல்லி ஏர்போர்டில் ஷுட்டிங் எடுப்பதற்கு 18 லட்சத்தை முன் பணமாக கட்டியிருக்கிறார். அது வேஸ்ட் ஆகிவிடக் கூடாது என்பதற்காக அவருக்கு ஒரு நாள் பர்மிஷன் கொடுத்திருக்கிறது சங்கம். இரண்டே நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. முடித்துவிட்டால் படம் ரெடி என்பதால் சமுத்திரக்கனிக்கு பர்மிஷன் வழங்கப்பட்டுள்ளது என்று சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

முன்பெல்லாம் விஜய் படம் வந்தால்தான் பரபரப்பு. இப்போது ஷுட்டிங் நடக்கும் போதேவா? நல்லாயிருக்கு… பேஷ். பேஷ்.

மேலும் பல...

0 comments

Blog Archive