உண்மையில் ரஜினிக்கு இன்று தான் பிறந்தநாள், எப்படி தெரியுமா- சின்ன ரீவைண்ட்

சிவாஜி ராவ் என்ற பெயரோடு சினிமாவில் அறிமுகமானவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. இவருக்கு ரஜினி என்ற பெயரை வைத்தது இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் என்...

சிவாஜி ராவ் என்ற பெயரோடு சினிமாவில் அறிமுகமானவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. இவருக்கு ரஜினி என்ற பெயரை வைத்தது இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

அதுவும் சரியாக ஹோலி பண்டிகை அன்று தான் பாலசந்தர், சிவாஜி ராவாக இருந்த அவரது பெயரை ரஜினிகாந்த் என்று மாற்றினாராம். ரஜினி-பாலசந்தர் ஒரு பேட்டியில் கூட இதைப்பற்றி பேசியிருப்பார்கள்.

அதாவது பாலசந்தர்-ரஜினியிடம், நான் எப்போது உனது பெயரை மாற்றினேன் என்று தெரியுமா என கேட்க, உடனே ரஜினி ஹோலி தினம் அன்று என்று கூறினார். அதற்கு பாலசந்தர் எப்போதும் ஹோலி பண்டிகை அன்று எனக்கு போன் செய்து இதுபற்றி பேசுவாய், ஆனால் கடந்த சில வருடங்களாக பேசுவது இல்லை என்று கூறியிருப்பார்.

இன்று ஹோலி பண்டிகை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Blog Archive