டெத் விஷ் – விமர்சனம்

நடிகர் புரூஸ் வில்லிஸ் நடிகை எலிசபெத் ஷீ இயக்குனர் எலி ரோத் இசை லுத்விக் கோரன்சன் ஓளிப்பதிவு ரோஜியன் ஸ்டோப்பர்ஸ் கடந்த 1974-ஆம் ஆண்டு...

நடிகர் புரூஸ் வில்லிஸ்
நடிகை எலிசபெத் ஷீ
இயக்குனர் எலி ரோத்
இசை லுத்விக் கோரன்சன்
ஓளிப்பதிவு ரோஜியன் ஸ்டோப்பர்ஸ்

கடந்த 1974-ஆம் ஆண்டு சார்லஸ் புரோன்சன் நடிப்பில் வெளியாகிய டெத் விஷ் படத்தின் கதையை தழுவியே இந்த டெத் விஷ் படமும் உருவாகி இருக்கிறது. பழைய பதிப்பில் சார்லஸ் புரோன்சன் கட்டட வடிவமைப்பாளராக வருவார். தற்போது உருவாகி இருக்கும் டெத் விஷ் படத்தில் புரூஸ் வில்லிஸ் மருத்துவராக வருகிறார்.

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் புரூஸ் வில்லிஸின் வாழ்க்கையையே புரட்டிப் போடும் ஒரு பிரச்சனை வருகிறது. புரூஸ் வில்லிஸின் மனைவி எலிசபெத்தையும், அவர்களது மகள் கேமிலா மோரோனையும் மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கியால் சுட்டு விடுகிறது. இதில் எலிசபெத் இறந்துவிட, புரூஸின் மகள் கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். தனது குடும்பத்தின் இந்த நிலைக்கு காரணமானவர்களை தேடி பழிவாங்க துடிக்கிறார் புரூஸ் வில்லிஸ்.

ஒரு கட்டத்திற்கு மேல் தவறு எங்கு நடந்தாலும், அதற்கு காரணமானவர்களை கொல்ல ஆரம்பிக்கிறார். கடைசியில் தனது குடும்பத்தின் இந்த நிலைக்கு காரணமானவர்களை புரூஸ் பழிவாங்கினாரா? கோமா நிலையில் இருக்கும் அவரது மகள் உயிர் பிழைத்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

புரூஸ் வில்லிஸ், எலிசபெத் ஷீ, கேமிலா மோரோன் என மூவரும் அவர்களது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் புரூஸ் வில்லிஸின் நடிப்பு ரசிக்கும்படியாக இருந்தாலும், போதும் என்று சொல்லும்படியாகவே இருக்கிறது. வின்சென்ட் டி ஆனோப்ரியோ, ஆண்ட்ரியஸ் அபர்ஜிஸ், பியூ நாப், டீன் நாரீஸ் என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.

மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஒரு குடும்பம், அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் ஒரு துக்க சம்பவம், அந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை பழிவாங்குதல் என வழக்கமான பழிவாங்குதல் கதையை மையப்படுத்தியே இந்த படத்தை இயக்கியிருக்கிறார் எலி ரோத். குற்றவாளிகளை பழிவாங்க செல்லும் நாயகன் ஒரு கட்டத்திற்கு மேல் குற்றம் செய்யும் அனைவரையுமே கொல்லுவது, எல்லா பிரச்சனைக்கும் துப்பாக்கியை பயன்படுத்துவது என முகம் சுளிக்க வைக்கிறார்.

லுத்விக் கோரன்சன் இசையில் பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. ரோஜியன் ஸ்டோப்பர்ஸின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில் `டெத் விஷ்’ பார்ப்பவர்களுக்கு தான்.

மேலும் பல...

0 comments

Blog Archive