கட்டிப்பிடி வைத்தியருக்கு ஜோடியாக ஓவியா! அதிர்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்

கவிஞர் சினேகன் நடிக்கவிருக்கும் 'பனங்காட்டு நரி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஓவியா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...

கவிஞர் சினேகன் நடிக்கவிருக்கும் 'பனங்காட்டு நரி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஓவியா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு சினேகன், ஓவியா இருவருமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்கள்.

    'பனங்காட்டு நரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஓவியா சமீபத்தில் வெளியிட்டார். இந்நிலையில், சினேகனுக்கு ஜோடியாக ஓவியா நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

பாடலாசிரியர் சினேகன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். நடிகை ஓவியா பல படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் அதிகமாகப் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம்தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் ஓவியா நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. எனினும்,ஓவியா ரசிகர்கள் சிலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆரவ் கூட பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் ஓவியா நிராகரித்து விட்ட நிலையில் சினேகனுக்கு மட்டும் எப்படி ஓகே செல்லியிருப்பார் என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் பல...

0 comments

Blog Archive