காலா அறிவித்த தேதியில் ரிலீஸ் ஆக வேண்டும், இல்லையென்றால் வழக்கு தொடர்வோம் - சலசலப்பை உண்டாக்கிய காலா தரப்பு!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கியுள்ள காலா திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 27ம் தேதி வெளிவருகிறது என்று லைக்கா நிறுவனம...

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கியுள்ள காலா திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 27ம் தேதி வெளிவருகிறது என்று லைக்கா நிறுவனம் அறிவித்தது. ஆனால் இடையில் ஏற்பட்ட சினிமா ஸ்ட்ரைக் காரணமாக ரிலீஸ் ஆகவேண்டிய சின்ன படங்களுக்கு முதலுரிமை கொடுக்கப்படும் என்ற தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.

அதன்படி காலா சொன்ன தேதியில் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்ற பேச்சு கடந்த சில நாட்களாக பரவலாக பேசப்பட்டது. இதனிடையே நேற்று நடந்த தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் காலா தரப்புக்காக பேசிய பிரதிநதி கடந்த மாதமே சென்சார் செய்வதற்காக தயாரிப்பாளர் சங்கத்திடம் கடிதம் கேட்டிருந்தோம், ஆனால் இதுநாள் வரை எங்களுக்கு கடிதம் தரவில்லை, சென்சார் செய்வதற்கு தயாரிப்பாளர் சங்க கடிதம் முக்கியம் என்பது அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் தெரியும்.

நாங்கள் ஒவ்ரசீஸ் பிசினஸ் எல்லாத்தையும் முடித்துவிட்டோம். எங்களுக்கு முதலில் தயாரிப்பாளர் சங்கம் கடிதம் கொடுங்கள், சொன்ன தேதியில் காலா ரிலீஸ் ஆக வேண்டும் இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று கூறி கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தினர்.

லைக்கா தரப்பு பேச்சை கேட்டு மற்ற தயாரிப்பாளர்கள் ஆவேசம் அடைந்தனர்.

மேலும் பல...

0 comments

Blog Archive