விஸ்வரூபம் எடுத்ததா கமலின் ‘விஸ்வரூபம் 2’? முதல் நாள் கலெக்ஷன் விவரம்!

கமல் நடிப்பில், மிகப் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்தின், முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் ரிப்போர்ட் வெளியாகி உள்ளது. நட...

கமல் நடிப்பில், மிகப் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்தின், முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், அவரே இயக்கி, தயாரித்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘விஸ்வரூபம்’.சர்வதேச தீவிரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், வெளியீட்டிற்கு முன் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்தது. இருப்பினும், படம் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களின் பேராதரவைப் பெற்று, மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்றது.


இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘விஸ்வரூபம் 2’ நீண்ட இடைவெளிக்குப் பின், நேற்று உலகம் முழுவதும் வெளியானது. முதல் பாகத்தின் வெற்றியால், இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் இருந்தது. மேலும், நடிகர் கமல் அரசியல் கட்சித் தொடங்கிய பின் வெளியாகும் முதல் படம் இது என்பதால், பலரது கவனத்தை இந்தப் படம் ஈர்த்தது.

சென்னையைப் பொறுத்த வரையில், ‘விஸ்வரூபம் 2’ படம் முதல் நாளில் மட்டும் ரூ.92 லட்சம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இது ஆல்டைம் ரெக்கார்ட்டில் 7வது இடமாகும். தமிழகத்தைப் பொறுத்தவரையில், விஸ்வரூபம் திரைப்படம் சுமாரான வசூலையையே பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் பல...

0 comments

Blog Archive