விஜய் சேதுபதியின் சீதக்காதி அக்டோபர் 5ல் ரிலீஸ்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீதக்காதி படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடுவுல கொஞ்சம் ...

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீதக்காதி படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன், மறுபடியும் விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ள படம் ‘சீதக்காதி’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 80 வயது முதியவராக நடிக்க, அவருடன் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி உள்பட பலர்நடித்துள்ளனர்.

பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தில், விஜய் சேதுபதி முதல்முறையாக அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பயங்கர வரவேற்பை பெற்றது.

ஒரு கலைக்கும், கலைஞனுக்கும் இடையிலான பயணத்தை கூறவிருக்கும் இந்த படத்தை அக்டோபர் 5ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘செக்கச்சிவந்த வானம்’, 28-ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது

மேலும் பல...

0 comments

Blog Archive