கடிகார மனிதர்கள் திரைவிமர்சனம் - கதை காலத்தின் பின்னால் ஓடும் ஏழை மனிதர்களை பற்றியது என்று.

கடிகார மனிதர்கள் தலைப்பை பார்த்ததும் புரிந்திருக்கும் படத்தின் கதை காலத்தின் பின்னால் ஓடும் ஏழை மனிதர்களை பற்றியது என்று. நடிகர் கிஷோர், ...

கடிகார மனிதர்கள் தலைப்பை பார்த்ததும் புரிந்திருக்கும் படத்தின் கதை காலத்தின் பின்னால் ஓடும் ஏழை மனிதர்களை பற்றியது என்று.

நடிகர் கிஷோர், கருணாகரன் மற்றும் லதா ராவ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வாடகை வீட்டில் உள்ளவர்கள் படும் இன்னல்களை காட்டியுள்ளது.

கதை:

வறுமை காரணமாக சென்னையை தேடி வருகிறது கிஷோர் மற்றும் லதா ராவ் குடும்பம். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். வண்டியில் வீட்டு சாமான்களை ஏற்றிக்கொண்டு புரோக்கர் உதவியுடன் தெருத்தெருவாக வீடு தேடுகின்றனர்.

5 பேர் கொண்ட குடும்பம் என்பதால் எந்த வீட்டு ஓனரும் இவர்களுக்கு வீடு தர முன்வரவில்லை. 3500 ரூபாய்க்கு மேல் இவராலும் வாடகை கொடுக்க முடியாது.பின்னர் இறுதியாக இவர்களுக்கு ஒருவர் மட்டும் வீடு தர முன்வருகிறார். ஆனால் 4 பேர் மட்டுமே இருக்க வேண்டும் என அவர் கூற புரோக்கர் இவருக்கு இரண்டு குழந்தைகள் மட்டும் தான் இருக்கிறார்கள் என பொய் கூறிவிடுகிறார்.

இந்த பொய்யை மறைக்க கிஷோர் அவரின் கடைசி பையனை ஒரு பெட்டியில் போட்டு தினமும் வீட்டுக்குள் கொண்டுவந்து மீண்டும் காலையில் அதே பெட்டியில் ஸ்கூலுக்கு கொண்டு சென்று விடுவார்.

அதே காம்பவுன்டுக்குள் குடிவரும் கருணாகரனுக்கும் ஹவுஸ் ஓனர் மகளுக்கும் காதல் - அது தனி ட்ராக்கில் செல்கிறது.

இப்படியே தொடரும் வாடகை வீடு வாழ்க்கையில் காலம் கடக்க கடக்க அவர்கள் சொன்ன பொய்யால் அதிக பிரச்சனைகள் வருகிறது.

அதையெல்லாம் எப்படி சமாளித்தார்கள், அவர்களால் சொந்த வீடு வாங்கமுடிந்ததா என்பது தான் மீதி கதை

க்ளாப்ஸ் & பல்ப்ஸ்:

வாடகை வீடு கஷ்டங்களையும், வீடு உரிமையாளர்களின் அராஜகத்தையும் வெட்ட வெளிச்சமாக காட்டியதற்கும், பொய் சொல்லாமல் பலருக்கும் வீடு கிடைக்காது என தற்போதைய சமூக பிரச்சனையை காட்டியதற்கும் அறிமுக இயக்குனர் வைகறை பாலன் அவர்களை பாராட்டலாம். கிஷோர், லதா ராவ் நடிப்பு பர்ப்பெக்ட். கருணாகரனின் காதல் சீன்களை சாம்.C.S மியூசிக் தூக்கி நிறுத்துகிறது.

ஆனால் மெதுவாக செல்லும் திரைக்கதை பார்ப்பவர்களை கொஞ்சம் அதிகமே சோதிக்கிறது. ஒரு சைக்கிள் ரேசை எதோ F1 ரேஸ் அளவுக்கு பில்டப் கொடுத்ததெல்லாம் டூமச்.

மொத்தத்தில் கடிகார மனிதர்கள் 2 மணி நேர வாடகை வீடு சீரியல். எதார்த்த சினிமாவை ரசிப்பவர்கள், அதிக பொறுமை இருப்பவர்கள் பார்க்கலாம்.

மேலும் பல...

0 comments

Blog Archive