சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய்சேதுபதி!!

நடிகர் விஜய்சேதுபதி, சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் முன்னதாகவே இரண்டு படங்களில் நடிக்க இருந்ததாகவும், ஆனால் அந்த வாய்ப்பை தவறவிட்டதாகவும் தெரிவித...

நடிகர் விஜய்சேதுபதி, சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் முன்னதாகவே இரண்டு படங்களில் நடிக்க இருந்ததாகவும், ஆனால் அந்த வாய்ப்பை தவறவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரஜினியுடன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிமரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இந்தப் படத்தில் நடிக்க உள்ள விஜய் சேதுபதி, சூப்பர் ஸ்டாருடன் முன்பே தனக்கு நடிக்க வாய்ப்பு வந்ததாக தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், “ப.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘கபாலி’ படத்தில் தனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அப்போது வேறு படங்களில் கமிட் ஆகியதால், அதில் நடிக்க முடியாமல் போனது.

அதேபோல், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ‘லிங்கா’ படத்தில் தன்னை சிறப்பு தோற்றத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார். அப்போது, அவரால் என்னைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால், அந்த வாய்ப்பும் தவறிப்போனது,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive