மோமோவை கலாய்த்து எடுக்கும் மீம்ஸ் கிரியேட்டர்கள்... அடக்கடவுளே இப்படியொரு பரிதாப நிலையா?

மோமோ சேலஞ்சில் வரும் ஏலியன் பொம்மையை கலாய்த்து உண்டாக்கப்பட்ட ஏராளமான மீம்ஸ்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சில மாதங்களுக்கு...

மோமோ சேலஞ்சில் வரும் ஏலியன் பொம்மையை கலாய்த்து உண்டாக்கப்பட்ட ஏராளமான மீம்ஸ்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு ப்ளுவேல் கேம் என்ற விளையாட்டு இளைய தலைமுறையை குறிவைத்து தாக்கியது. இந்த கேம் தாக்கம் பல நாடுகளில் பெரிதும் உயிர் இழப்பை ஏற்படுத்தியது.

இதனால் இந்தியாவிலும் கூட நிறைய பேர் இந்த விளையாட்டால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

அதன் பின் கிகி சேலஞ்ச் என்னும் விளையாட்டு பிரபலமாகி வருகிறது. கிகி சேலஞ்ச் என்னும் கேம் ஓடும் காரில் இருந்து இறங்கி பாடலுக்கு நடனம் ஆடிவிட்டு பின்னர் காரில் மீண்டும் ஏற வேண்டும். இதனால் ஆபத்தான இந்த விளையாட்டை மேற்கொள்வோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்தது.

தற்போதும் இதெல்லாம் கடந்து வந்த நிலையில் மோமோ சேலஞ்சும், ப்ளுவேல் கேம் போல் இளைய தலைமுறையை குறிவைக்கிறது. இதைப் என்ன என்று நீங்கள் அறிந்தது உண்டா...?

முதலில் இதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று காவல் துறை ஆய்வு செய்ததில் சிறுமியின் செல்போனை சோதனை செய்ததில் வாட்ஸ் ஆப்பில் வந்த குறுந்தகவல் மூலம் அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டிருக்கிறார் என்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. வாட்ஸ் ஆப் லிங்கில் மோமோ சேலஞ்ச் விளையாட்டு இருந்துள்ளது.

இந்த கேம் ஆனது மனநிலை பாதிக்கப்பட்ட தோற்றம் கொண்ட பெண்ணின் உருவத்தை முன் நிறுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ஏலியன் பெண்ணின் பெயரே மோமோ.

இந்த விளையாட்டு ஆனது பல கேள்விகளை கேட்டு அதை டாஸ்க் ஆக தொடங்கிறது. குறிப்பிட்ட சவாலை ஏற்காதவர்கள் தற்கொலை முயற்சி செய்ய வேண்டும் இது தான் மோமோ சேலஞ்ச் சவால்.

பல நாடுகளை அச்சுறுத்தி வரும் இந்த மோமோ தமிழ்நாட்டில் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. மோமோ சேலஞ்ச் பற்றி எங்களுக்கு பயமில்லை. எங்களை பார்த்து தலைதெறிக்க ஓடி விடு என்கிற அளவிற்கு மீம் கிரியேட்டர்கள் அதனை வெச்சு செய்துள்ளனர்.

மீம் உண்டாக்க சின்ன விஷயம் கிடைக்காத என ஏங்கி தவிக்கும் மீம் கிரியேட்டர்களுக்கு தற்போது மோமோ தான் தீனியாக உள்ளது.

மேலும் பல...

0 comments

Blog Archive