அமலா பாலுக்கு என்ன ஆச்சு? கேரளா மருத்துவனையில் அனுமதி!

சண்டைக்காட்சியின் போது கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நடிகை அமலா பால் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ...

சண்டைக்காட்சியின் போது கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நடிகை அமலா பால் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சண்டைக்காட்சியின் போது கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நடிகை அமலா பால் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அமலா பால். விஜய், தனுஷ், ஜெயம் ரவி என்று மாஸ் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பிஸியான நடிகையாக இருந்தார். தற்போது ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். அண்மையில் பாலிவுட் படத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியானது.

இந்த நிலையில், அறிமுக இயக்குனர் வினோத் இயக்கும் அதோ அந்த பறவை போல படத்தில் அமலா பால் நடித்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் அமலா பால் சண்டைக்காட்சியில் நடித்து வந்துள்ளார். அப்போது, அமலா பாலுக்கு அவரது வலது கையில், அடிபட்டுள்ளது. அதனை பொருட்படுத்தாமல், தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். ஆனால், அவரால், வலி தாங்க முடியாமல், கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது வலது கையில் தசைநாரில் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். மேலும், தொடர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள காட்டுப்பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிந்துள்ள நிலையில், அமலா பாலுக்கு கையில் காயம் ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து படக்குழுவினர் படப்பிடிப்பை ரத்து செய்துள்ளனர்.

மேலும் பல...

0 comments

Blog Archive