அஜீத்துடன் இணையும் இசையப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்!

‘விஸ்வாசம்’ படத்தை அடுத்து அஜீத், வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். நடிகர் அஜீத் தற்ப...

‘விஸ்வாசம்’ படத்தை அடுத்து அஜீத், வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

நடிகர் அஜீத் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அஜீத்தின் அடுத்த படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இயக்குனர் வினோத் இயக்க வுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இந்தப் படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்தப் படத்திற்கு இசையப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் விஜய்யின் ‘சர்க்கார்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். அடுத்ததாக அஜீத் படத்திற்கு இசையமைக்கும் பணியில் இறங்கவுள்ளார். இதற்கு முன் அஜீத் நடிப்பில் வெளியான ‘வரலாறு’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Blog Archive