‘சந்திரமுகி’ படத்தில் சிம்ரன் விலகியது ஏன்? வெளியான காரணம்!

ரஜினி நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி’ படத்தில் சிம்ரன் நடிக்க முடியாமல் போனதற்கு உண்மையான காரணம் தற்போதுதான் தெரியவந்துள்ளது. ரஜினி திரைப் ப...


ரஜினி நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி’ படத்தில் சிம்ரன் நடிக்க முடியாமல் போனதற்கு உண்மையான காரணம் தற்போதுதான் தெரியவந்துள்ளது.

ரஜினி திரைப் பயணத்தில் மறக்க முடியாத மெகா ஹிட் படங்களில் ஒன்றுதான் ‘சந்திரமுகி’. இந்தப் படம் 2005ல் வெளியானது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும்படத்தில் பிரபு, ஜோதிகா, வடிவேலு, நாசர், விஜயகுமார் உட்பட பலர் நடித்திருந்தனர்.


இந்தப் படத்தில் நயன்தாரா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை சிம்ரன்தானாம். இந்தப் படத்திற்காக முதல் 3 நாட்கள் படப்பிடிப்பில் எல்லாம் கலந்து கொண்டார் சிம்ரன். அந்த நேரத்தில் நடிகை சிம்ரன் தான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இந்த விஷயத்தை இயக்குனர் பி.வாசு மற்றும் தயாரிப்பு நிர்வாகத்திடம் சிம்ரன் கூறினார். அவர்கள் எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் சிம்ரனுக்கு வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார்களாம். அப்புறம்தான் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தமானார்.


அப்போது ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை விட்டுவிட்டேன் என்று வருத்தப்பட்டாராம் நடிகை சிம்ரன். அதற்குப் பலனாக தற்போது ‘பேட்ட’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு மிக்க சந்தோஷப்பட்டாராம் நடிகை சிம்ரன்.

மேலும் பல...

0 comments

Blog Archive