வழக்கமான மசாலா படங்களில் இருந்து தப்பித்து புதிய அனுபவத்தை பெற ஒரு யூடர்ன் அடித்து வரலாம்.

தமிழ் சினிமாவில் தற்போது நாயகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது. நயன்தாரா, ஜோதிகா, த்ரிஷா வ...

தமிழ் சினிமாவில் தற்போது நாயகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது.

நயன்தாரா, ஜோதிகா, த்ரிஷா வரிசையில் சமந்தா களமிறங்கியிருக்கும் படம் தான் யுடர்ன்.

கன்னடத்தில் வெளியாகி ஹிட்டான இப்படத்தை அப்படத்தின் இயக்குனரான பவன் குமாரே தமிழ், தெலுங்கிலும் இயக்கியுள்ளார்.

இவர் ஏற்கனவே லூசியா என்ற படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இப்படமும் தமிழில் எனக்குள் ஒருவன் என்றபெயரில் வெளியானது.

தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்துவரும் சமந்தாவுக்கு இப்படமும் வெற்றி கொடுத்ததா பார்ப்போம்.

கதைக்களம்

சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் தொடர்ந்து பல கொலைகள் நடக்கிறது. இதை பற்றி தொடர்ந்து பத்திரிக்கையாளரான சமந்தா எழுதி வருகிறார்.

இதனால் இவரின் மீது போலிஸ்க்கு சந்தேகப்பார்வை விழுகிறது. போலிசாக ஆதி நடித்துள்ளார்.

இதன் பின் பல பிரச்சனைகளை சந்திக்கிறார் சமந்தா. கடைசியில் அந்த விபத்துக்கான காரணம் என்ன? மரணம் தடுக்கப்பட்டதா? சமந்தா பிரச்சனையிலிருந்து தப்பித்ததா என்பதே மீதி கதை.

பல முடிச்சுகளுடன் சுவாரஸ்யமாக செல்லும் இப்படத்தில் கமெர்ஷியலுக்காக பாடல்கள் என எதையும் சேர்க்கவில்லை.

படத்தை அதிகம் இழுக்காமல் 2 மணிநேரத்தில் முடித்துள்ளனர். யூகிக்க முடியாத பல காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

படத்தில் சமந்தா, ஆதியைப்போல மற்ற கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன், ராகுல் ரவீந்திரன், பூமிகா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பூர்ணசந்திர தேஜஸ்வியின் பின்னணி இசையில் திரில்லரை மெயிண்டெயின் பண்ணியுள்ளார். ஓளிப்பதிவுக்காக மெனக்கெட்டிருக்கிறார் நிகித் பொம்மிரெட்டி.

க்ளாப்ஸ்

சமந்தா உள்ளிட்ட மற்ற நடிகர்களின் நடிப்பு

வலுவான திரைக்கதை, யூகிக்க முடியாத முதல்பாதி காட்சிகள்

பல்ப்ஸ்

இரு மொழிகளில் தயாரானதால் பல இடங்களில் டப்பிங் செட் ஆகவில்லை.

சில இடங்களில் வரும் நாடகத்தன்மையான வசனங்கள்

மொத்தத்தில் வழக்கமான மசாலா படங்களில் இருந்து தப்பித்து புதிய அனுபவத்தை பெற ஒரு யூடர்ன் அடித்து வரலாம்.

மேலும் பல...

0 comments

Blog Archive