கீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா?
June 18, 2018இயற்கை பல உன்னதங்களை நமக்கு வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது. பல அதிசயங்களையும் நம் கண் முன்னே நமக்குப் பந்தி வைக்கிறது. இயற்கையை நுகரத் தெரிய...
இயற்கை பல உன்னதங்களை நமக்கு வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது. பல அதிசயங்களையும் நம் கண் முன்னே நமக்குப் பந்தி வைக்கிறது. இயற்கையை நுகரத் தெரியாத, இயற்கையை இயற்கையாக விடத் தெரியாத நம்மால் இயற்கைப் பல பேரிடர்களை சந்தித்து வருகிறது. இருந்தாலும் இயற்கை ஒரு தாய் போல் இருந்து நம்மை அரவணைக்கவே செய்கிறது. பல அற்புதங்களை ஒரு கைத்தேர்ந்த மேஜிக் மேன் போல நம் கண்முன்னே அனுதினமும் நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறது. இயற்கை படைத்த ஏரழிஞ்சில் மரமும் நமக்குப் பல அதிசயங்களை வெளிப்படுத்தும் ஓர் அதிசயம்தான். இந்த மரத்திலிருந்து கீழே விழும் விதைகள் தானாக நகர்ந்து போய் மரத்தில் ஏறி ஒட்டிக் கொள்ளும் அதிசயத்தை நிகழ்த்துபவை. நமது உடம்பை நீண்டகாலம் வாழ வைக்கக்கூடிய காயகற்பத்தை தரவல்லவை.கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சியின் மேற்கு பகுதியில் தொடங்கி கேரளாவின் பாலக்காடு வரை தெற்கு வடக்காக இந்த மரங்கள் பரவலாக வளர்கின்றன. தமிழகத்தில் ஆங்காங்கே விரல்விட்டு எண்ணும் அளவில்தான் இந்த மரங்கள் இருக்கின்றன. இந்த மரத்தின் பால் நம் உடம்பில் பட்டுவிட்டால்,அது புண்ணாகி நான்கு மாதங்கள் வரை ஆறாது என்பது ஒரு பிரச்னை. ஆனால் நன்மைகள் ஏராளம். இந்த மரத்தின் அருமை தெரிந்து, ஏரழிஞ்சில் மரத்தின் விதைகளை வாங்கி வந்து தனது தோட்டத்தில் ஊன்றி வைத்திருக்கும் கரூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி மனோகரனிடம் பேசினோம்.
விவசாயி மனோகரன்``இந்த மரத்தின் தன்மைகளை பற்றிக் கேள்விப்பட்டதும் ஆச்சர்யமாயிட்டு. இந்த ஏரழிஞ்சில் மரத்திலிருந்து கீழே தரையில் விழும் விதைகள் தானாக நகர்ந்து போய், மரத்தில் ஏறி,அடிமரத்தில் ஒட்டிக்கொள்ளுமாம். ஏற்கெனவே,கரூர் மாவட்டத்தில் உள்ள எனது வேட்டையார்பாளையம் இயற்கை வேளாண்மைத் தோட்டத்தில் ஆப்பிள்,திருவோட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்த்து வர்றேன். `ஆப்பிள், திருவோட்டு மரங்கள் கரூர் மாவட்டத்து சீதோஷ்ண நிலைக்கு வளராது'ன்னு பலரும் சொன்னாங்க. நான் வளர்த்துக் காட்டுறேன்னு சொல்லி வாங்கி வந்து நட்டு வளர்த்துக் காட்டிட்டேன். அதேபோல்தான், `இந்த ஏரழிஞ்சில் மரத்தையும் இங்கே வளர்க்க முடியாது'ன்னு சொன்னாங்க. `அதையும் நான் வளர்த்துக் காட்டுறேன்'ன்னு சொல்லி பத்து விதைகளை பழனி ஸ்ரீவாலாம்பிகை அறக்கட்டளை செம்மலர் சித்தா மையத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் செல்வராஜ்கிட்ட வாங்கிட்டு வந்து, என் தோட்டத்தில் அங்கங்கே நட்டு வைத்திருக்கிறேன். நிச்சயமா அத்தனை விதைகளையும் மரமாக்கி காட்டுவேன்" என்றார்.
ஏரழிஞ்சில் மரத்தின் தன்மைகள், மருத்துவப் பயன்கள் பற்றி சித்த மருத்துவர் செல்வராஜிடமே பேசினோம்.செல்வராஜ்
``இயற்கையின் படைப்பில் ஏரழிஞ்சில் மரம் ஒரு வரப்பிரசாதம். எனது வீடு, கன்னிவாடி, உடுமலைப்பேட்டை, விழுப்புரம் பக்கம்ன்னு நான் பார்த்த வரையில் அங்கங்கே ஒவ்வொரு மரம் இருக்கிறது. இந்த மரத்திலிருந்து மாந்திரீக மை, வசிய மை தயாரிக்கிறார்கள். மாந்திரீக நாட்டம் உடையவர்கள் இந்த மரங்களைத் தேடி அலைவார்கள். ஏனென்றால்,மாந்திரீக வேலைகளில் இந்த மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மை ராஜ மையாகப் பயன்படுத்தப்படுகிறதாம். அதோடு, இந்த மரத்தின் விதைகளோடு,இன்னும் சில விதைகளைச் சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இந்தக் காயகற்பத்தை சாப்பிட்டால், நம் உடல் நீண்டகாலம் நலமாக இருக்கும். தொடர்ந்து இந்தக் காயகற்பத்தைச் சாப்பிட்டு வந்தால், அதிக வயது வரை நாம் உயிர் வாழலாம் என்பது நம்பிக்கை. அதேபோல், இந்த மரத்தின் இலைகள், மரப்பட்டைகளை எடுத்து அரைத்துப் பவுடராக்கி உண்டு வந்தாலும், நம் உடம்பில் உள்ள சகலப் பிரச்னைகளும் நீங்கி நாம் அதிகநாள்கள் உயிர் வாழலாம். இந்த ஏரழிஞ்சில் சின்னக் கன்றாக இருக்கும்போதே மரத்தில் பழம் பழுக்கும். பெரிய சைஸ் மரமாக வளரும். இந்த மரத்தின் பழங்களை பறவைகள் தின்றுவிட்டு, கீழே போட்டால், அது மரமாகும்.
ஆனால், ஏரழிஞ்சில் மரத்திலிருந்து தானாக கீழே விழும் பழங்களில் உள்ள விதைகள் முளைக்காது. பழங்கள் கீழே விழுந்த மூன்று நாள்களில் அந்தப் பழத்தில் உள்ள விதைகள் தானாக நகர்ந்து போய், ஏரழிஞ்சில் மரத்தில் ஏறி அடிமரங்களில் ஆங்காங்கே ஒட்டிக் கொள்ளும். அது எப்படின்னா, மரத்திலிருந்து கீழே விழும் பழங்களில் உள்ள விதைகளுக்குள் குறிப்பிட்ட ஒரு பூச்சியினத்தின் புழுக்கள் உள்ளே போயிரும். அந்தப் புழு ஏரழிஞ்சில் விதைகளை நகர்த்திக் கொண்டு போய் மரத்தில் ஏற்றி, அடிமரங்களில் ஒட்ட வைக்கும். பிறகு கூட்டுப்புழுக்கள் போய் இருந்துவிட்டு, பின்பு மரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் விதைகளிலிருந்து அந்தப் புழுக்கள் பூச்சிகளாக மாறி பறந்து போய்விடும். அந்த விதைகள் மட்டும் ஏரழிஞ்சில் மரங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும். நாளடவையில் அந்த விதைகள் வெறும் விதைக் கூடுகளாக மாறி, மரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும். இப்படி அதிசயங்களும், அற்புத மருத்துவக் குணங்களையும் கொண்ட இந்த ஏரழிஞ்சில் மரத்தை எல்லா இடங்களில் பயிர் செய்யவேண்டும்" என்றார்.
`சூழல் மாசுபாட்டைக் குறைக்கத் திட்டம்!' - மின்சாரப் பேருந்துகளுக்கு மாறும் கேரளப் போக்குவரத்துத் துறை சிந்து ஆர்
June 18, 2018கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய மின்சாரப் பேருந்து சோதனை ஓட்டம் திருவனந்தபுரத்தில் இன்று தொடங்கியது. கேரள மாநிலத்தில் முதன...

கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய மின்சாரப் பேருந்து சோதனை ஓட்டம் திருவனந்தபுரத்தில் இன்று தொடங்கியது.
கேரள மாநிலத்தில் முதன் முறையாக மின்சாரப் பேருந்து சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது. திருவனந்தபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டிலிருந்து மின்சாரப் பேருந்தை கேரளப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சோதனை முயற்சியாக இயக்கப்படும் இந்தப் பேருந்துகள் தம்பானூரிலிருந்து பட்டம் வழியாக கழக்கூட்டம் வரை இயக்கப்படுகின்றன. அடுத்ததாகக் கிழக்கேகோட்டை, கோவளம், டெக்னோபார்க், பாப்பனங்கோடு உள்ளிட்ட இடங்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது. எர்ணாகுளம், கோழிக்கோடு நகரங்களிலும் சோதனை ஓட்டம் நடைபெறும் எனவும். சோதனை வெற்றிபெற்றால் மாநிலம் முழுவதும் 300 பேருந்துகள் இயக்கப்படும் திட்டம் இருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கி.மீ.தூரம் வரை செல்லும் இந்த பஸ்ஸில் 40 இருக்கைகள் உள்ளன.
மின்சாரப் பேருந்து மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருந்தாலும் கேரளப் போக்குவரத்து விதிப்படி 80 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. ஒரு பேருந்தின் விலை ரூ. 2.50 கோடி என கே.எஸ்.ஆர்.டி.சி. தெரிவித்துள்ளது. புஷ்பேக் சீட்டுகள், கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ் கருவிகள் இந்த பஸ்ஸில் பொருத்தப்பட்டுள்ளன. இன்று முதல் 15 நாள்களுக்கு இந்தப் பேருந்து சோதனை ஓட்டமாக இயக்கப்படுகிறது
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் படத்திற்கு உலக அளவில் கிடைத்த கௌரவம்
June 18, 2018யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவில் பல தரமான படங்களுக்கு இசையமைத்தவர். இவர் தொடர்ந்து இயக்குனர் ராமுடன் கூட்டணி வைத்து வருகின்றார். இந்நில...
இந்நிலையில் இயக்குனர் ராமின் கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி படங்களுக்கு யுவன் தான் இசை, இதை தொடர்ந்து ராம் இயக்கிய பேரன்பு படத்திற்கும் யுவன் தான் இசையமைத்துள்ளார்.
இப்படம் சமீபத்தில் Shanghai international film festival-ல் திரையிடப்பட்டது, அப்போது படம் முடிந்து அனைவரும் எழுந்து நின்றி கைத்தட்டி படக்குழுவினர்களை பாராட்டினார்களாம்.
பிக்பாஸ், கமல்ஹாசன், ஓவியாவை வெளுத்து வாங்கிய பெண்!
June 15, 2018பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை மறுநாள் ஜூன் 17 முதல் ஒளிபரப்பாகவுள்ளது. கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இந்த சீசன் 2 நிகழ்ச்...
பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை மறுநாள் ஜூன் 17 முதல் ஒளிபரப்பாகவுள்ளது. கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.
இந்த சீசன் 2 நிகழ்ச்சியை எதிர்பார்த்து பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே வேளையில் இதில் கலந்துகொள்ளப்போவது யார் என்ற ஆர்வமும் உள்ளது.
இந்நிலையில் ராஜேஸ்வரி பிரியா என்ற பெண் நிகழ்ச்சிக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி மேற்கத்திய பாணியை கொண்டது.
இது தமிழ்நாட்டு தமிழ் மக்களுக்கு தேவையில்லை. எங்கள் வீட்டு பிள்ளைகள் கூட அதை பார்த்து கெட்டு விடுவார்களோ என பயம் இருக்கிறது.
கமல்ஹாசன் சினிமா படத்தில் நடிக்கிறார். நிகழ்ச்சியில் வருகிறார். அரசியலிலும் இருக்கிறார். இதனால் மக்கள் இளைஞர்கள் பலர் சினிமா மோகத்தில் உள்ளனர்.
இது முற்றிலுமாக மாற வேண்டும். விவசாயிகளின் பிரச்சனை எவ்வளவோ இருக்கிறது. அதெல்லாவற்றையும் காட்டுங்களேன்.
விவசாயிகளின் கஷ்டத்தை இளம் தலைமுறையினருக்கு எடுத்து சொல்லுங்களேன். ஓவியாவுக்கு ஆர்மி என ஆரம்பித்தார்கள். ஆர்மியில் உள்ள யாரையாவது நாம் ரியல் லைஃப் ஹீரோவாக ஏற்றுக்கொண்டுள்ளோமா?
இதனால் அவருக்கு சம்பளம் கூடியதே தவிர? மக்களுக்கு அவர் என்ன செய்தார் என பல கேள்விகளை முன்னெடுத்து வைத்துள்ளார்.
எனக்காக மட்டும் தான் பிக்பாஸ்-2 வீட்டில் அது உள்ளது, பவர்ஸ்டார் வெளியிட்ட தகவல்
June 15, 2018பிக்பாஸ் முடிந்து தற்போது இரண்டாவது சீசன் தொடங்கிவிட்டது. பலரும் இந்த வீட்டிற்குள் யார் வரப்போகிறார்கள் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். ...
அந்த வகையில் தற்போதைக்கு பவர்ஸ்டார் கண்டிப்பாக இந்த வீட்டிற்குள் வருவதை அவரே ஒரு பேட்டியில் உறுதியளித்துள்ளார்.
அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் ஜெயில் போல் ஒரு செட் உள்ளதை நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோம்.
இதுக்குறித்து பவர்ஸ்டாரிடம் கேட்கையில் ‘நம்ம பார்க்காத ஜெயிலா, அந்த வீட்டில் எனக்காக மட்டும் தான் அதை வைத்துள்ளார்கள் போல’ என்று கூறியுள்ளார்.
கண்ணியமான குரலுக்கு சொந்தக்காரர் மலேசியா வாசுதேவன் எப்படி இறந்தார் தெரியுமா?
June 15, 2018மலேசியா வாசுதேவன், இவர் பெயரை சொன்னதுமே சில பாடல்கள் நம் நினைவுக்கு வந்துவிடும். அந்த அளவிற்கு தனித்தன்மை வாய்ந்த கண்ணியமான குரலுக்கு சொந்த...
பாடல் பாடுவதை தாண்டி நிறைய படங்களில் வில்லனாகவும் கலக்கியுள்ளார். பல திறமைகளை வெளிக்காட்டி மக்களின் ஆதரவை பெற்ற இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றே கூறலாம். இந்த வருத்தம் வாசுதேவன் அவர்களின் குடும்பத்தாருக்கு இருக்கிறது.
இவருக்கு சர்க்கரை நோய் பிரச்சனை இருந்திருக்கிறது, ஒருமுறை காலில் இருந்த காயம் ஆறாமல் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கடுமையாக சிகிச்சை அளித்தும் அவர் பிப்ரவரி 20ம் தேதி 2011ம் ஆண்டு உயிரிழந்தார்.