லட்சியம் நிறைவேற என்ன செய்ய வேண்டும்? - உண்மைக் கதை!
June 27, 2018`ஒரு கனவு நிஜமாவது ஏதோ மாயாஜாலத்தால் நிகழ்வதில்லை. அதற்கு அரும்பாடுபட வேண்டும்; மன உறுதி வேண்டும்; கடின உழைப்பு வேண்டும்’ என்று வலியுறுத்து...
டி.வி ஷோ காம்பியர்
அமெரிக்கா, க்ளீவ்லேண்டிலிருக்கும் (Cleveland) கிளென்வில்லி ஹைஸ்கூலில் (Glenville High School) அந்த மாணவன் படித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு அப்போது 12 வயது. ஒருநாள் பாடம் எடுத்து முடித்திருந்தார் ஆசிரியை. வகுப்பு முடிய இன்னும் நேரமிருந்தது. மாணவர்களிடம் `நீங்க எதிர்காலத்துல என்னவாக ஆக விரும்புறீங்கனு ஒரு கேள்வி உங்க பாடத்துல இருக்குல்ல... அதுக்கான பதிலை எழுதுங்க!’ என்றார். ஒரு வரி பதில் அது. எல்லா மாணவர்களும் நிமிடத்தில் அதற்கான பதிலை எழுதிவிட்டார்கள். எழுதிய பேப்பரில் தங்கள் பெயரை எழுதி, ஆசிரியையிடம் கொண்டுபோய்க் கொடுத்தார்கள். எல்லா பேப்பர்களையும் படித்துப் பார்த்தார், அவருக்கு திருப்தியாக இருந்தது, அந்த ஒரு மாணவன் எழுதிய பதிலைத் தவிர.
அன்றைக்கு பள்ளிக்கூடம் முடிந்ததும், அந்த மாணவனின் வீட்டுக்குப் போனார் ஆசிரியை. அவர் போன நேரத்தில், அந்த மாணவனின் தந்தையும் வீட்டில்தான் இருந்தார். ஆசிரியையை வரவேற்றார். அமரச் சொன்னார். மனைவியை அழைத்து காபி கொண்டு வரச் சொன்னார். மாணவனுக்கு டீச்சரைப் பார்த்ததும் உதறலெடுக்க ஆரம்பித்துவிட்டது. அதற்குக் காரணமும் இல்லாமலில்லை. அவனுடைய அப்பா மிகவும் கண்டிப்பானவர். டீச்சரோ சாதாரணமாக யார் வீட்டுக்கும் போகிறவரில்லை. `அவர் இங்கே வந்திருக்காருன்னா, என்னைப் பத்தி ஏதாவது புகார் சொல்றதுக்காகத்தான் இருக்கும்’ மாணவனுக்கு நெஞ்சு `திக் திக்’ என்று அடித்துக்கொண்டது.
``சொல்லுங்க மேடம்... என்ன விஷயம்?’’ நேரடியாக விஷயத்துக்கு வந்தார் தந்தை.
``ஒண்ணுமில்லை. இன்னிக்கி ஸ்கூல்ல ஒரு டெஸ்ட்... ஸ்டூடன்ஸ்கிட்ட உங்க கனவு என்ன, எதிர்காலத்துல நீங்க என்னவா ஆக விரும்புறீங்கனு ஒரு கேள்வி... அதுக்கு உங்க பையன் அபத்தமான ஒரு பதிலை எழுதியிருந்தான்...’’
அப்பா, மகனை அழைத்தார். ``பேப்பர்ல நீ என்ன பதில் எழுதியிருந்தே?’’
அவன் தயங்கினான். அப்பாவையும், ஆசிரியையும் மாறி மாறிப் பார்த்தான். பிறகு சொன்னான்... ``டி.வி ஷோவுல பெரிய ஆளா வரணும்னு எழுதியிருந்தேன்.’’
அப்பா, ஆசிரியையின் பக்கம் திரும்பினார். ``இதுல என்ன தப்பு?’’
``என்ன சார் நீங்களும் புரியாத மாதிரி கேட்குறீங்க... சாத்தியமே இல்லாத ஒண்ணை எழுதுறது அபத்தமில்லையா? இந்தப் பையனாவது... டி.வி ஷோவுல வர்றதாவது! இருக்குறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்படலாமா?’’
அப்பா ஒரு கணம் யோசித்தார். மகனை அவன் அறைக்குப் போகச் சொன்னார். அந்த மாணவன் பயந்து, நடுங்கியபடி தன் அறைக்குள் போனான். இன்றைக்கு அப்பா அடி வெளுத்து வாங்கிவிடுவார் என்று நினைத்துக்கொண்டான்.
அவர் இப்போது ஆசிரியையிடம் சொன்னார்... ``ரொம்ப நன்றி மேடம். நான் என் பையனை இனிமே கவனமாப் பார்த்துக்குறேன்.’’
ஆசிரியை கிளம்பிப் போனார். அப்பா, மகனின் அறைக்குள் நுழைந்தார். ``சொல்லுப்பா... இன்னிக்கி டீச்சர் எழுதச் சொன்ன கேள்விக்கு புத்தகத்துல இருக்குற பதில் என்ன?’’
ஒளிப்பதிவாளர் - நிகழ்ச்சித் தொகுப்பாளர்
``புத்தகத்துல இருக்குற பதில், `நான் ஃபுட்பால் ப்ளேயராக ஆகணும்’கிறது. எல்லாரும் அதைத்தான் எழுதினாங்க. எனக்கு என்னவோ, எதிர்காலத்துல டி.வி-யில பெரிய ஆளா வரணும், எல்லாரும் என்னைப் பார்க்கணும்னு ஆசை. அதனாலதான் `டி.வி ஷோவுல வேலை பார்க்கணும்கிறது என் ஆசை’னு எழுதிவெச்சேன்.’’
அப்பா, மகனை நெருங்கினார். அவன் பயத்தோடு அவரைப் பார்க்க, அவனைத் தழுவிக்கொண்டார்.
``நீ ஒண்ணு பண்ணு. உன் டீச்சர் எதிர்பார்க்கிற பதிலை எழுதி, அவங்ககிட்டயே குடுத்துடு. ஆனா, உண்மையிலேயே நீ என்னவாகணும்னு நீ விரும்புறியோ, அந்தக் கனவை ஒரு பேப்பர்ல எழுதி உன் டெஸ்குக்குக் கீழே வெச்சுக்கோ. அது உனக்கே உனக்கான பேப்பர். தினமும் காலையில படுக்கையிலருந்து எந்திரிச்சதும் அதை எடுத்துப் படிச்சுப் பாரு; ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னால அதைப் படி... விடாமப் படி... நீ நினைக்கிற, விரும்புற வாழ்க்கை உனக்குக் கிடைக்கும்.’’ அப்பா போய்விட்டார்.
அந்த மாணவன், அப்பா சொன்னதை வேதவாக்காக நினைத்து அப்படியே கடைப்பிடித்தான். அடுத்த பதினாறே ஆண்டுகள்... அந்த மாணவர் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகிவிட்டார். கனவு கண்டு, அதை நிஜமாகவும் ஆக்கிய அந்த மாணவர் அமெரிக்காவின் சிறந்த தொலைக்காட்சித் தொகுப்பாளர்களில் ஒருவர் எனக் கருதப்படும் ஸ்டீவ் ஹார்வி (Steve Harvey).
ஒரு கட்டத்தில் வாரத்தின் ஏழு நாள்களும் தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் தோன்றிக்கொண்டிருந்தார் ஸ்டீவ் ஹார்வி. அவ்வளவு பிரபலமான மனிதராக ஆன பின்னரும், தன் பழைய டீச்சரை அவர் மறக்கவில்லை. ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்துமஸ் தினத்தன்று தன் டீச்சருக்கு ஒரு டி.வி-யை பரிசாக அனுப்பிவைப்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஒருநாள், தொலைபேசியில் டீச்சர் அழைத்தார்... ``ஹார்வி! வீட்டுல நிறைய டி.வி சேர்ந்து போச்சு... இனிமே வேண்டாமே!’’
``பரவாயில்லை டீச்சர். அதுபாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டும்...’’ மென்மையான குரலில் பதில் சொன்னார் ஹார்வி.
திருடர்கள் ஜாக்கிரதை! அலர்ட் ஆகும் சினிமாவுலகம்!
June 26, 2018முதலில் நம் எல்லோருக்கும் இருக்கும் சந்தேகம்… தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது கேமரா வைத்தோ, மொபைல் போன் வைத்தோ அல்லது பேனா கேமரா ...
எதார்த்தத்தில் எல்லோருக்கும் எழும் சாதாரணமான, நியாயமான சந்தேகம் இது. கண்டுபிடிக்க முடியும் என்பதுதான் டிஜிட்டல் யுகத்தின் சாதகமான அம்சம்.
ஒரு சிறிய விளக்கம் நம் சந்தேகத்தைப் போக்கும் என நம்புகிறேன்.
தியேட்டர்களில் ‘ஈ சினிமா’, ‘டி சினிமா’ என்ற இரண்டு வகை உண்டு. புரிதலுக்காக ஈ சினிமாவை ஒன்கே என்றும் டி சினிமாவை டூகே, ஃபோர்கே என்றும் சொல்கிறோம்.
ஈ சினிமா என்பது எம்பெக்4 முறையில் வீடியோவாகவும், டி சினிமா என்பது ஜேபெக்2000 முறையில் தனித்தனி ஃபிரேமாகவும் மாஸ்டரிங் செய்து ஓட்டப்படுகிறது. மாஸ்டரிங் செய்த கையோடு இன்விசிபிள் வாட்டர்மார்க் என்கிரிப்சன் செய்யப்படுகிறது. இந்த என்கிரிப்சன் செய்யப்பட்ட கன்டென்ட் ஒவ்வொரு தியேட்டரிலும் பொருத்தப்பட்டுள்ள சர்வர் மூலமாகப் போகும்போது நம் சாதாரண கண்களுக்குத் தெரியாத வாட்டர் மார்க் அந்த சம்பந்தப்பட்ட திரையோடு சேர்த்து காட்டப்படுகிறது. எனவே, இந்த டிஜிட்டல் யுகத்தில் தப்பு செய்வது எவ்வளவு எளிதோ அதைவிட கண்டு பிடிப்பதும், அதனை ஆதார பூர்வமாக நிரூபிப்பதும் மிக எளிது.
தமிழ்நாட்டிலிருக்கும் 1070 தியேட்டர்களிலும் இந்த வகையான ஃபாரன்சிக் வாட்டர்மார்க் கோடு பொருத்தும் வகையில் சர்வர்கள் இருக்கின்றன. எனவே, நள்ளிரவு பிசாசு போல போர்வையைப் போர்த்திக் கொண்டு இரண்டாம் ஆட்டம் முடிந்தபின் ‘யாருக்குத் தெரியப் போகிறது’ என்ற அறியாமை தெனாவெட்டில் இரண்டு மணிக்குமேல் ஓடவிட்டு படம் பிடித்தாலும் ‘சிவொலுசன்’ முறையில் கண்டு பிடித்துவிட முடியும். ஓடவும் முடியாது, ஔியவும் முடியாது.
நிற்க!
எனது ‘மனுசனா நீ’ படத்தைத் திருடிய கிருஷ்ணகிரி முருகன் தியேட்டர் மேல் கிரிமினல் வழக்கும், நஷ்ட ஈடு கேட்டு சிவில் வழக்கும் போடப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் ஒருவரை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.
திரு. விஷால்! திருட்டுக்கு எதிராக அவருடைய கோபம், அதனைக் கட்டுப்படுத்த, ஒழிக்க வேண்டுமென்ற அவரது ஆர்வம், என் போன்றவர்களுக்கு உள்ளுக்குள் எழுந்த தடைகளையும் மீறி உதவி செய்து பைரஸியைக் கட்டுப்படுத்த எத்தனித்த அவரது செயல்பாடு… அவருக்கு என் பாராட்டுக்கள்!
‘ஒரு குப்பைக் கதை’ படத்தைத் திருடிய மயிலாடுதுறை கோமதி தியேட்டர் மீது கிரிமினல் வழக்கு நடக்கிறது. அந்தப் படத்தை இணையத்தில் இதுவரை முப்பது லட்சம் பேர் வரை பார்த்திருப்பதாகத் தகவல். வயிறெரிந்து கோபத்தோடு பொங்கிய அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அஸ்லம் குறைந்தபட்சம் எட்டு கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போடப்போவதாகக் கூறினார்.
அதே படத்தை திருட்டுத்தனமாக எடுத்த இன்னொரு தியேட்டரும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.
அடுத்து ‘கோலிசோடா டூ’ படத்தைத் திருடிய தியேட்டரும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பரத் சீனி முன்பு சம்பந்தப்பட்ட தியேட்டர் திருடன் வராமல் இருப்பது நல்லது. அத்தனை கோபம் அவருக்கு.
‘டிக்டிக்டிக்’ படம் வெளிவந்த வெள்ளிக்கிழமை இரவே தேவ…. மகன்கள் நடத்தும் திருட்டு இணையத் தளத்தில் வகைவகையாய் வந்துவிட்டது. அதன் தயாரிப்பாளர் ஜபக் உடல்நிலை சரியில்லாமல் படுத்து விட்டார்.
சினிமா என்பது ‘தயாரிப்பு, விநியோகம், தியேட்டர் ஔிபரப்பு’ என்ற கூட்டுக் குடும்பச் செயல்பாடு. சில கேடு கெட்ட தியேட்டர் திருடர்களால் ‘நம் கையை எடுத்து நம் கண்ணைக் குத்தியதுபோல்’ எல்லோருக்கும் இழப்பு வருகிறது. இத்தனை நடந்தும்
… நடிகர் சங்கம், சம்பந்தப்பட்ட நடிகர்கள்,
… இயக்குநர்கள் சங்கம்,
… ஃபெப்ஸி அமைப்பு,
… விநியோகஸ்தர்கள் சங்கம்,
… திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்
… வேறு தயாரிப்பாளர்கள் சங்கங்கள்
என யாருமே பெரிய அளவில் குரல் கொடுக்கவில்லை.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளிப்படையாக பல மீட்டிங்கில் தியேட்டர் பைரஸி பற்றிப் பேசியிருக்கிறது. பின்புலத்தில் பெரிய சப்போர்ட்டாக இருக்கிறது. அது ஒன்றுதான் ஆறுதல்.
சரி, தியேட்டர் திருடர்களை எப்படிக் கண்டு பிடிப்பது? எப்படி தண்டனை வாங்கித் தருவது?
1. படம் வெளியானபின் கடையில் திருட்டு டிவிடியோ அல்லது நெட்டில் தேவ… மகன்களின் சைட்டில் படமோ இருந்தால் அதனை ஒரு பிரதி எடுத்து முதலில் ‘கியூப்’ கம்பெனிக்கு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் அல்லது படத்தை வாங்கிய உரிமையாளர் தன் லெட்டர் பேடில் ‘எங்கிருந்து எடுக்கப்பட்டது’ என்ற விபரம் கேட்டு லெட்டரும், டிவிடியும் கொடுக்க வேண்டும். இது இலவச சேவை அல்ல. அவர்கள் முதலில் ‘ஈ சினிமா’ வகையில் செக் பண்ணுவார்கள். அதிலேயே திருடன் பிடிபட்டால் ரூ. 29,500/- செலுத்த வேண்டும். திருடன் டி.சினிமா தியேட்டராக இருந்தால் ரூ. 59,000/- செலுத்த வேண்டும். கெடுத்தாலும் மேன் மக்கள் காஸ்ட்லியான மேன் மக்களே!
அதிகபட்சம் மூன்று நாட்களில் திருடன் பற்றிய விபரம் கொடுத்து விடுவார்கள். எந்தத் தியேட்டர் என்ற விபரம் அவர்கள் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் தவிர யாருக்கும் சொல்ல மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது… சமீபத்து சந்தேகத்தைத் தவிர!
2. அடுத்து எக்மோரில் பழைய கமிசனர் ஆபீஸில் இயங்கி வரும் IPREC – Intellectual Property Rights Enforcement Cell, தமிழில் ‘அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு’ துறையில் ‘எஸ்பி’ க்கு மனு எழுதி அதனோடு
…கியூப் அல்லது யூஎஃப்ஓ வில் கிடைத்த கடிதம்,
… டைட்டில் பதிந்த சங்கத்தின் நகல்
… சென்சார் சான்றிதழ் நகல்
… திருட்டு டிவிடி மூன்று பிரதிகள்
ஆகியவற்றை இணைத்து மனுச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் 12 இடங்களில் இந்தத் துறை இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் இயங்குகிறது. இதனோடு விபரங்கள் இணைக்கப்பட்டிருக்கிறது. எஸ்பி ஆபீஸில் சம்பந்தப்பட்ட சரகத்துக்கு கையெழுத்திட்டு கொண்டுபோகச் சொல்வார்கள்.
3. சம்பந்தப்பட்ட சரக இன்ஸ்பெக்டருக்கு அதேபோல் ஒரு மனுவும், ஆதார இணைப்புகளும், கையிலிருக்கும் மூன்று டிவிடி க்களும் கொடுக்க வேண்டும். அங்கு எஃப்ஐஆர் எழுதி திருட்டுத் தியேட்டருக்குச் சென்று உரிமையாளர் அல்லது லீஸ் எடுத்தவர், மேனேஜர் மற்றும் ஆப்பரேட்டர் ஆகியோரைக் கைது செய்து, மெசின்களை கழட்டி ஸீஸ் செய்து மறுநாள் கோர்ட்டில் ஒப்படைப்பார்கள். பல நேரம் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கும். சில வேளை தயாரிப்பாளர் உறுதியாக இருந்தால் ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் வரும்.
4. இந்த வழக்கு கிரிமினல் வழக்கு. இதன்மூலம் தண்டனை மட்டுமே பெற்றுத் தர முடியும். எனவே, படத்தின் பட்ஜெட்டைப் பொறுத்து நஷ்ட ஈடு வாங்க சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் அந்தத் தியேட்டர் மேல் சிவில் கேஸ் போட வேண்டும். குறைந்தது ஒரு கோடியிலிருந்து ஐம்பது கோடி வரை நஷ்ட ஈடு கேட்க வாய்ப்பு உண்டு.
இதில் கவனிக்க வேண்டிய ஒரு விசயம்: லோக்கல் கோர்ட்டில் கேஸ் போட்டால் 3.5% கோர்ட் ஃபீஸ் கட்ட வேண்டும் எனக் கேள்விப் பட்டேன். அதாவது ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போட்டால் மூன்றரை லட்ச ரூபாய் கோர்ட்டில் தயாரிப்பாளர் கட்ட வேண்டும். அதோடு வக்கீல் செலவு வேறு.
அதேவேளை உயர் நீதி மன்றத்தில் வழக்குப் போட்டால் ஒரு சதவீதம்தான் கோர்ட் ஃபீஸ்.
ஏற்கெனவே படத்தை ரிலீஸ் செய்து கோவணமும் கழண்டு கிடக்கும் தயாரிப்பாளர் இந்தச் செலவுகளெல்லாம் எப்படிச் செய்வது? இந்த நிலைதான் இதுவரை திருட்டுத் தியேட்டர்களுக்குச் சாதகமாக இருந்தது. இப்போது நிலை மாறியிருக்கிறது.
அடி வாங்கியவன் வெகுண்டு எழுந்தால் என்ன நடக்குமோ அது இப்போது நடக்கிறது.
இங்கு குறிப்பிட வேண்டிய இன்னொரு முக்கிய விசயம்: இந்தத் துறையின் எஸ்பி மேடம் சினிமா திருட்டை ஒழிப்பதில் ஆர்வமாக இருக்கிறார். ஆம்னி பஸ்ஸில் படம் போட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கிறார்.
இந்தத் துறையின் டிஎஸ்பி திரு. நீதிராஜன். உண்மையிலேயே நீதி ராஜன்தான். எந்த நிலையிலும் லஞ்சமில்லாத நேர்மையான ஆட்களைக் கொண்ட துறையின் இந்த டிஎஸ்பி வட நாட்டுக் கொள்ளையர்களைப் பிடித்த நிஜ ‘தீரன்’களில் ஒருவர். லோக்கல் டீவி சேனல்களில் உரிமை வாங்காமல் படங்களை ஔிபரப்பினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கிறார். இது தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய ஆறுதல்.
தமிழ்நாட்டில் இயங்கும் அதிகபட்ச தியேட்டர்கள் திருட்டு விசயத்தில் நியாயமாகவே நடந்துகொள்கின்றன. ஒரு சில எச்சைப் பொறுக்கிகளால் வாழ்க்கையை இழந்த தயாரிப்பாளர்கள் அநேகம் பேர்.
இண்டர்நெட் திருடன் வெளிநாட்டில் திருடுகிறான் என்று சொன்னதெல்லாம் உண்மையில்லை என்று நிரூபணம் ஆகியிருக்கும் இந்த வேளை அனைவரும் கை கோர்த்து திருட்டுக்கு எதிராகப் போராட வேண்டியது காலத்தின் கட்டாயம்! இல்லையென்றால்…
நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி!
நிலைமைதான்!
`வடிவேலுக்கு ஏன் ஃபுட்பால் மேட்ச் பிடிக்காது தெரியுமா?’
June 26, 2018விளையாட்டு ரூல்ஸ்னா எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்கணும்ல. எல்லாரும் காலால பந்தை உதைக்கிறப்ப கோல் கீப்பர் மட்டும் பந்தை கையால புடிக்கலாம்கறத...
`வடிவேலுக்கு ஏன் ஃபுட்பால் மேட்ச் பிடிக்காது தெரியுமா?’
நம்ம வக்கீல் வண்டு முருகன் வடிவேலுக்கு, கிரிக்கெட்னா இஷ்டம். ஆனா, ஃபுட்பால் மட்டும் பிடிக்கவே பிடிக்காது! ஏன் பிடிக்காதுன்னு வண்டுமுருகனே பாயின்ட் பாயின்ட்டா சொல்றதைக் கேட்போமா...
``என்ன விளையாட்டு விளையாடுறாய்ங்க. விளையாட்டுன்னா ஒரு டிசிப்ளின் வேணாமா. இந்த ஃபுட்பால் மேட்ச்ல எங்க இருக்கு டிசிப்ளின்? யூனிஃபார்ம்னு எதுக்குக் குடுக்குறாய்ங்க... எல்லாரும் ஒண்ணுபோல தெரியணும்கிறதுக்காகத்தான. வேர்ல்டு கப் கிரிக்கெட்ல அம்புட்டு மேட்சுக்கும் ப்ளூ கலர் பனியனத்தானய்யா இந்திய பிளேயர் டோனிலருந்து அம்புட்டு பேரும் போட்டிருப்பாங்க. ஆனா, வேர்ல்டு கப் ஃபுட்பால்ல மட்டும் ஒவ்வொரு மேட்சுக்கும் ஒவ்வொரு கலர் பனியனைப் போட்டுட்டு விளையாடுறது, சின்னப்புள்ளத்தனமால இருக்கு! இப்படி இஷ்டத்துக்கு கலர் கலரா பனியன் போட்டுக்கிட்டா, சப்போர்ட் பண்றவிங்களுக்கு கன்ஃபியூஸ் ஆகாது? அதை டி.வி-யில பார்க்கிறவங்களுக்கும் இது எந்த நாடுன்னு தெரியாம மண்டை குடையுதுல்ல! ஒவ்வொரு மேட்சுக்கும் பனியனை மாத்திக்கிட்டிருந்தா பார்க்கிறவிங்களுக்குக் கிறுக்குப் பிடிச்சுப்போகும்ல நன்னாரிப் பயலுங்களா?
அதேபோல, எந்த விளையாட்டுலயும் ஒரு மட்டு மரியாதை இருக்கணும். பந்தாகட்டும், பேட்டாகட்டும், ரெண்டையுமே கிரிக்கெட்ல கையாலதானய்யா புடிக்கிறோம். இந்த ஃபுட்பால்ல மட்டும் காலால மிதிக்கிறாய்ங்க, உதைக்கிறாய்ங்க, தலையால முட்டுறாய்ங்க! ஆனா, கையால மட்டும் தொட மாட்றாய்ங்க! இப்படி மரியாதையில்லாத ஒரு விளையாட்டை என் ஆத்தா சத்தியமா நான் பார்த்ததேயில்ல!
மரியாதைன்னதும் இன்னொரு மேட்டர் ஞாபகத்துக்கு வந்து தொலையுது. ஏய்யா, நம்மூரு கிரிக்கெட்ல ஒவ்வொரு பிளேயரும் பேன்ட் ஷர்ட் போட்டு எவ்வளவு டீசன்ட்டா விளையாடுறாங்க. ஃபுட்பால்ல பாருங்க, அம்புட்டுப் பயபுள்ளையும் என்னவோ ஸ்கூல் பயக மாதிரி டவுசரை மாட்டிக்கிட்டு ஓடுறாய்ங்க. அவிங்கதான் அப்டின்னா, இந்த அம்பயர் பெருசுங்களும் டவுசரோடு ஓடுறதைப் பார்க்கப் பார்க்க கண்ணுல பொசுங்கிடும்போல! பார்க்கிற எனக்கே கண்ணக்கட்டுதே! இதுல அவங்களோட டீம் கோச் மட்டும் என்னவோ ஐ.நா சபை அதிகாரி மாதிரி கோட் சூட், டையோட இருக்காங்க... இதெல்லாம் எந்த ஊரு நியாயம்?
நம்ம கிரிக்கெட்டுல ஃபீல்டிங் பண்ற டீம் மட்டும்தான் கிரவுண்டுல பந்து எடுக்க ஓடுவாய்ங்க. விளையாட்டுன்னா அப்டித்தான் ஒரு ஒழுங்கோட இருக்கணும். ஆனா ஃபுட்பால்ல, அம்புட்டு பேரும்ல கிரவுண்டுல குறுக்க மறுக்க ஓடுறாய்ங்க. போதாக்குறைக்கு அம்பயருங்க ரெண்டு பேரும் அவிங்ககூடவே சேர்ந்து ஓடுறாய்ங்க! அது ஃபுட்பால் மேட்சா... இல்ல ஓட்டப்பந்தயமான்னே தெரியலை! அந்தப் பந்து பாவம்யா. ஆளாளுக்கு வெவ்வேறு திசைக்கு உதைக்கிறாய்ங்க. ஒரு நேர்மையான ஆபீஸரை இஷ்டத்துக்கு டிரான்ஸ்ஃபர் பண்ற மாதிரி இப்டியா அங்கயும் இங்கயுமா விரட்டுறது?
விளையாட்டுன்னா ரூல்ஸ் எல்லாருக்கும் ஒண்ணுபோல இருக்கணும்யா. அம்புட்டு பேரும் காலால பந்தை உதைக்கிறப்ப, கோல் கீப்பர் மட்டும் கையால புடிக்கிறது எப்டியா ஏத்துக்க முடியும்? மத்த பிளேயர் எல்லாரும் லொங்குலொங்குன்னு ஓடியாடி விளையாடுறப்ப கோல்கீப்பர் மட்டும் கோல் போஸ்ட்கிட்டயே காவக்காத்துக்கிட்டு இருக்கிறது பார்க்க நல்லாவா இருக்கு? அதுவா ஒரு வீரனுக்கு அழகு? அதுமட்டுமா... பேஸ்கட் பால் விளையாட்டுல இத்துணூண்டு கூடைக்குள்ள பந்தைப் போடுவாய்ங்க பாருங்க, அதுதான் கஷ்டமான விளையாட்டு... ஆனா இந்த ஃபுட்பால்ல, அவ்ளோ அகலமான ஒசரமான வலைக்குள்ள பந்தை அடிக்கிறதாய்யா விளையாட்டு? இதுல என்னய்யா வீரம் இருக்கு? அடப்போங்கய்யா! எங்கூர்ல
அதவிடுங்க, கிரவுண்டுதான் அவ்ளோ பெருசா கட்டிவிட்டுருக்காய்ங்கல்ல, அவ்வளவு பெரிய கிரவுண்டுல ஒருத்தனை ஒருத்தன் இடிக்காமக்கூட ஓட முடியாதா? அதுலயும் ஒருத்தன் மேல லைட்டா இடிச்சிட்டாக்கூட என்னவோ வயித்துப்புள்ளக்காரி பிரசவத்துக்குத் துடிக்கிற மாதிரி சுருண்டு விழுந்து ஓவரா சீன் போடுறாய்ங்க. `சந்திரமுகி' அரண்மனையில ஒவ்வொரு பொருளும் விழுகுதாம்... உருளுதாம் மாதிரியில ஒவ்வொருத்தணும் அங்கங்க பொத்துபொத்துனு விழுறாய்ங்க, உருளுறாய்ங்க... என்னய்யா நடக்குது அந்த விளையாட்டுல... இல்ல என்ன நடக்குதுங்கிறேன்? காளியாத்தா கோயில்ல அங்கப்பிரதட்சணம் பண்ற மாதிரியில்ல இருக்கு!
கடைசியா ஒண்ணு சொல்லிக்கிறேன். லாஸ்ட் பட் லீஸ்ட்! எங்களுக்கும் இவிங்கள மாதிரி விளையாடத் தெரியும். ஆனா, விளையாட மாட்டோம். இவிங்களவிட சூப்பரான கிரிக்கெட் எங்ககிட்ட இருக்கு. எங்க கிரிக்கெட்டுல டெஸ்ட் மேட்ச்லாம் அஞ்சு நாளைக்கு அசராம நடக்கும். சாப்பிட்டு உறங்கிட்டு வந்துகூட அஞ்சு நாளா விளையாடுவோம். ஒன் டே மேட்ச்னா ஒருநாள் முழுக்க இருட்டுற வரைக்கும் நடக்கும். டி-20 மேட்ச்கூட மொத்தமா நாலு மணி நேரம் நடக்கும். இதென்னய்யா வெறும் ஒன்றை மணி நேரம் நடக்கிற ஃபுட்பாலெல்லாம் ஒரு மேட்சா? இதுல வேற சப்ஸ்டியூட்னு அடிக்கடி ஆளை மாத்துறாய்ங்க! போங்க தம்பி, இதெல்லாம் ஒரு விளையாட்டுன்னு இதுக்கு வேர்ல்டு கப் வேற! எங்கூருப் பக்கம் சொன்னா சிரிச்சுடப்போறாய்ங்க!
சர்கார் படத்தில் மிகப்பெரும் சர்ச்சை பன்ச் டயலாக், லீக் ஆனது- இதோ
June 25, 2018விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இந்தியளவில் செம்ம வரவே...
இந்நிலையில் சர்கார் படத்திலிருந்து ஒரு பன்ச் லீக் ஆகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகின்றது.
இதில் ஒரு காட்சியில் வில்லன்களை பார்த்து விஜய் ‘ஒரு தொகுதியில் தான் நிற்கலாம் என்று இருந்தேன்.
தற்போது 234 தொகுதிகளிலும் நிற்பேன்’ என்று கூறுவது போல் ஒரு வசனமாம், விஜய் அரசியலுக்கு வருகின்றார் என நீண்ட காலம் பேசி வர, இப்படி ஒரு வசனம் உண்மை என்றால் கண்டிப்பாக சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது.
என்னுடைய முதல் காதலர் இவர் தான், மேடையிலேயே உண்மையை உடைத்த அமலா பால்
June 24, 2018அமலா பால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். விஜய், விக்ரம் என பிரபல நடிகர்கள் படத்தில் நடித்தார். பிறகு இயக்குனர் விஜய்யை திரு...
பிறகு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக்கொண்ட ஒரே வருடத்தில் அவரை விட்டு பிரிந்தார். தற்போது மீண்டும் பிஸியாக நடித்து வருகின்றார்.
இந்நிலையில் ப்லீம்பேர் விருது விழாவில் மாதவனுக்கு சிறந்த நடிகர் விருதை கொடுத்த அமலா பால் பேசுகையில் ‘எல்லோருக்கும் முதல் காதல் வந்திருக்கும், அப்படி நான் முதன்முதலாக காதலித்தது வேறு யாரையும் அல்ல. மாதவனை தான்’என கூறி மேடையை அதிர வைத்தார்.
டிராபிக் ராமசாமி - திரை விமர்சனம்
June 22, 2018தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என வாய்ப்பேச்சோடு நிற்காமல் களத்தில் இறங்கி வேலை செய்பவரான டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை வைத்து அவரின் பெ...
கதைக்களம்:
ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஆரம்பிக்கிறது படம். அந்த புத்தகத்தை நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் அமர்ந்து படித்து அவர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை நினைத்து பார்ப்பது போல விரிகிறது கதை.
சமூகத்தில் பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளும் போலீஸ், அரசியல்வாதிகள் என ஒருவரையும் விட்டுவைக்காமல் கோர்ட்டுக்கு இழுத்து மக்களுக்கு நியாயம் கிடைக்க போராடுகிறார். அதனால் அவரை தீர்த்துக்கட்ட நினைக்கும் எதிரிகளிடமிருந்து சில அடி-உதைகளை பரிசாக பெறுகிறார்.
இருப்பினும் சோர்ந்துவிடாமல், அரசால் தடை செய்யப்பட்டும் இன்னும் சட்டவிரோதமாக பல இடங்களில் ஓடிக்கொண்டிருக்கும் மீன் பாடி வண்டிகள் மற்றும் அதனால் ஏற்படும் விபத்துகளை தடுக்க ஒரு வழக்கை தொடுக்கிறார்.
அதில் பல பெரிய அரசியல் தலைகள் சிக்க, அந்த கேசில் ராமசாமி ஜெயித்தார் இல்லையா என்பது தான் கதை.
படத்தை பற்றிய அலசல்
டிராபிக் ராமசாமி என்றால் வெறும் போஸ்டர்/பேனர்களை கிழிப்பவர், பொதுநல வழக்கு தொடர்பவர், அடிக்கடி தற்கொலை மிரட்டல் விட்டு போராட்டம் நடத்துபவர் என்பதோடு மட்டும் நில்லாமல் அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள், நியாயத்திற்காக போராடியதால் அவர் அனுபவித்த துன்பங்கள் என அனைத்தையும் திரையில் கொண்டுவந்துள்ளனர்.
ஆனால் படம் கமெர்சியலாக இருக்கவேண்டும் என்பதற்காக சேர்க்கப்பட்ட சில கதாப்பாத்திரங்கள், சீன்கள் - பார்ப்பவர்களுக்கு சலிப்பை தான் எற்படுத்துகின்றன.
வில்லன்களாக வரும் இமான் அண்ணாச்சி, மோகன் ராமன் உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களும் அழுத்தமாக இல்லாதது படத்திற்கு பின்னடைவு. சில கோர்ட் சீன்கள் ஏதோ காமெடி ஷோ போலவே இருந்தன.
அங்கும் இங்கும் அரசியல் கருத்துக்களை சேர்க்க முற்பட்ட இயக்குனரால் இந்த படம் ஒரு முழுமையான வாழ்க்கை வரலாற்று படமாக இல்லாமல் போய்விட்டது என்றும் சொல்லலாம்.
கிளாப்ஸ்:
- டிராபிக் ராமசாமியின் ரோலில் கச்சிதமாக பொருந்தி நடித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர்.
பல்ப்ஸ்:
- எதார்த்தமாக இல்லாமல் போன சீன்கள்.
- அழுத்தம் இல்லாத நெகட்டிவ் கதாபாத்திரங்கள்.
டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையையும் போராட்டங்களையும் இன்னும் சிறப்பாகவே பதிவு செய்திருக்கலாம்.