''இந்தியாவில் போர் மூண்டால் 10 நாளில் வெடிமருந்து தீர்ந்து விடும்!'' - சி ஏ.ஜி அதிர்ச்சி அறிக்கை

அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா இரண்டுமே இந்தியாவுடன் போரிடத் தயார் நிலையில் இருக்கின்றன. இரு முனையில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டாலும் ச...

அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா இரண்டுமே இந்தியாவுடன் போரிடத் தயார் நிலையில் இருக்கின்றன. இரு முனையில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டாலும் சமாளிக்கும் திறமை இந்தியாவுக்கு  இருப்பதாக ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் கூறியிருந்தார். ஆனால், நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள சி.ஏ.ஜி அறிக்கையில் அதற்கு எதிர்மாறான கருத்து சொல்லப்பட்டுள்ளது. எதிரிநாடுகளுடன் போர் மூண்டால் 10 நாள்களில் இந்திய ராணுவத்திடம் வெடிமருந்துகள் தீர்ந்துவிடும் என்று சி.ஏ.ஜி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 41 வெடி மருந்து தொழிற்சாலைகள் உள்ளன. இவை, ராணுவத்துக்கு வெடிபொருள்களை உற்பத்தி செய்து தருகின்றன.

ஆனால், இந்த வெடிமருந்துகள் தரமானதாக இல்லை. பற்றாக்குறையை சமாளிக்க  தனியாரிடம் இருந்து வெடிமருந்துகள் வாங்கத் திட்டமிட்டும் பயனில்லை. ஆவடியில் உள்ள, கனரக வாகனத் தயாரிப்பு நிறுவனத்தையும் கடுமையாக விமர்சித்திருக்கிறது சி.ஐ.ஜி அறிக்கை.  டி 72 பி.எல்.டி என்ற 20 மீட்டர் ஏணி பாலத்துடன் கூடிய கனரக வாகனத்தை உற்பத்தி செய்து ராணுவத்துக்கு அளிக்க ஆர்டர் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.. 2012-17 ஆண்டுக்குள்  இந்த வாகனங்கள் சப்ளை செய்யப்பட்டிருக்க வேண்டும். தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்பட்டுக் கொண்டே வருவதால்,  டி 72 பி.எல்.டி வாகனங்கள் சப்ளை செய்யப்படவில்லை.  இதே நிறுவனம் தயாரித்த டி90 டாங்குகளில் பொருத்தப்பட்டுள்ள ரேடியேட்டர்கள் தரமானதாக இல்லை என்பதால் ராணுவம் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது என்றும் சி.ஐ.ஜி அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே, போபர்ஸ் பீரங்கியை மாதிரியாகக் கொண்டு உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தனுஷ் பீரங்கியில் சீன நாட்டின் மலிவு விலை பேரிங்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள, ‘துப்பாக்கி கேரேஜ் தொழிற்சாலை’ இந்த ரக பீரங்கிகளைத் தயாரிக்கிறது. இதற்கான உதிரி பாகங்களை டெல்லியைச் சேர்ந்த சித் சேல்ஸ் இன்டிகேட் என்கிற நிறுவனம் சப்ளை செய்திருக்கிறது. 2013-ம் ஆண்டு 35.38 லட்சத்துக்கும் 2014-ம் ஆண்டு 53.07 லட்சத்துக்கும் 6 பேரிங்குகள் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது. இரு பேரிங்குகளை அந்த நிறுவனம் துப்பாக்கி கேரஜ் நிறுவனத்துக்கு அளித்திருக்கிறது. அதில், ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல CRB Antriebstechnik, Germany நிறுவனத்தின் முத்திரைக் குத்தப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்த பேரிங்குகளை சீனாவில் லுயாங்கில் உள்ள 'சைனோ யுனைடெட் இன்டஸ்ட்ரீஸ்' நிறுவனம் தயாரித்திருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. மலிவு விலை என்பதற்காக இதை வாங்கி 'மேட் இன் ஜெர்மனி' என முத்திரைக் குத்தி சித் சேல்ஸ் நிறுவனம் விற்றிருக்கிறது. சித் சேல்ஸ் நிறுவனத்துக்கும் சீன நிறுவனத்துக்கும் இடையே பரிவர்த்தனை குறித்து நடந்த இ- மெயில் விவரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.' இந்த பேரிங்குகள் சரியான முறையில் இயங்கவில்லை என்றால் இலவசமாகவே மாற்றித் தருகிறோம்' என சீன நிறுவனம் கூறியிருக்கிறது. வருங்கால விற்பனையைக் கருத்தில்கொண்டு, சீன நிறுவனம் இத்தகைய வாக்குறுதியை அளித்திருக்கிறது.   இதற்கு ஜபல்பூர் தொழிற்சாலையைச் சேர்ந்த அதிகாரிகளுடன் உடந்தையாக இருந்திருக்கின்றனர். அந்த அதிகாரிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சித் சேல்ஸ் நிறுவனம், துப்பாக்கி கேரேஜ் நிறுவனத்தின் அடையாளம் தெரியாத அதிகாரிகள் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

1999-ம் ஆண்டு கார்கில் யுத்தத்தின்போது, இந்த ரக பீரங்கிகளை இந்திய ராணுவம் அதிகம் பயன்படுத்தியது.

மேலும் பல...

0 comments

Blog Archive