புஷ்பவனம் குப்புசாமிக்கு இப்படியொரு சோகமா!இத்தனை டாக்டர் பட்டம் பெற்றும், திறமை இருந்தும் தகுதி இல்லையா?

கிராமிய பாடல்களை பாடுவதின் மூலம் மிகவும் பிரபலமானவர் புஷ்பவனம் குப்புசாமி. கர்நாடக இசை, நாட்டுப்புற இசை என அனைத்துவிதமான இசையையும் முறையாக ...

கிராமிய பாடல்களை பாடுவதின் மூலம் மிகவும் பிரபலமானவர் புஷ்பவனம் குப்புசாமி. கர்நாடக இசை, நாட்டுப்புற இசை என அனைத்துவிதமான இசையையும் முறையாக கற்று பல வருடங்களாக மக்கள் இசைக்காக சேவை செய்து வரும் இவர் தமிழிசையிலும், கர்நாடக இசையிலும் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.

இவர் தமிழ்நாடு அரசு இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தார். அத்தனை தகுதி இருந்தும், சரியான நேரத்தில் விண்ணப்பித்திருந்தும் இவரை நிராகரித்துவிட்டு கடைசி நேரத்தில் கர்நாடக இசைக்கு மட்டும் முக்கியத்துவம் தரும் பிராமண பெண்ணான பிரமிளா குருமூர்த்தியை நியமித்துள்ளனர்.

பிற்படுத்தப்பட்டவன் என்பதற்காகவும், தமிழிசையை வளர்த்து விடுவேன் என்பதற்காகவும், ஆசிரியர் பதவிக்காக பணம் வாங்கமாட்டேன் என்பதற்காகவும் தான் வஞ்சிக்கப்பட்டேன் என வருந்தியுள்ளார்.

பணத்துக்காக இந்த பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை, நான் இதைவிட அதிகமாகவே எனது கச்சேரிகளில் சம்பாதிக்கிறேன். ஆனால் உண்மையான கலைஞனுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே எனது ஆதங்கம் என்று கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive