"ரஜினி, கமல் அரசியல் நாடகம் நடத்துகின்றனர்!" - நெடுவாசலில் சீறிய இயக்குநர் கௌதமன்

"நடிகர்கள் கமலும் ரஜினியும் திரையில் நடித்து முடித்து விட்டு, இப்போது தரையில் நடிப்பதற்காக வந்துள்ளனர். அவர்களது அரசியல் நடிப்பைப் பார...

"நடிகர்கள் கமலும் ரஜினியும் திரையில் நடித்து முடித்து விட்டு, இப்போது தரையில் நடிப்பதற்காக வந்துள்ளனர். அவர்களது அரசியல் நடிப்பைப் பார்த்து மக்கள் ஒருபோதும் ஏமாறமாட்டார்கள்" என்று திரைப்பட இயக்குனர் கௌதமன் சீறினார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகிலுள்ள நெடுவாசல் கிராமத்துக்கு இன்று மாலை(21.02.2018) 4.30-மணிக்கு திரைப்படம் மற்றும் நெடுந்தொடர் இயக்குநரான கௌதமன்வந்திருந்தார். நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முழக்கத்துடன் தஞ்சாவூரிலிருந்து தனது நெடும் பயணத்தை தொடங்கிய இவர், பயணத்தின் ஒரு பகுதியாக நெடுவாசலையும் தெரிவு செய்திருந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யும் உத்திரவாதத்தை நிறைவேற்றக் கோரி,நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 18.02.2018.) அன்று பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி முடித்தார்கள். முழுக்க முழுக்க அந்தப்பகுதி கிராம மக்களும் முன்னாள்,இந்நாள் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர்களும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட பிரமுகர்களும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் அந்தப் போராட்டத்தில் கலந்துக்கொண்டர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து,ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் குழுவினரால் முன்கூட்டியே இயக்குநர் கவுதமன்,இசை அமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் போன்றவர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்பே திட்டமிட்ட தவிர்க்க முடியாத பணி அலுவல்கள் காரணமாக இருவரும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது. இந்தச் சூழலில்தான் இன்று மாலை தன் குழுவினருடன் நெடுவாசலுக்கு வந்தார் கௌதமன்.பேருந்துநிலையம் அருகே மைக் பிடித்து பேசிய அவர், நெடுவாசலின் முக்கியப் பிரச்னையான ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யவேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் வலியுறுத்திப்பேசினார். பிறகு, பத்திரிகையாளர்களிடம் அதனையே சுட்டிக்காட்டி பேசியவர் தொடர்ந்து, " ரஜினியும் கமலும் அரசியல் பிரவேசம் செய்வது பற்றி சீறினார். கிட்டதட்ட ஒருமணிநேரம் நெடுவாசல் கிராமத்தில் இருந்து அந்த மக்களுடனும் பள்ளி மாணவர்களுடனும் பேசி மகிழ்வூட்டிவிட்டு புறப்பட்டார்.

நாம் பயணத்திலிருந்த கௌதமனைத் தொடர்பு கொண்டு பேசினோம். "கடந்த ஞாயிற்றுக்கிழமை நெடுவாசல் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள  என்னை அழைத்தார்கள். இந்த நீட் எதிர்ப்பு பயணத் திட்டத்தில் நான் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் அன்றைக்கு என்னால் கலந்துக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் இன்று வந்து  அணையா போராட்டத்தீயை தங்களது நெஞ்சில் சுமந்துகொண்டு இருக்கும் அந்த மக்களையும்  போராட்டக்குழுவினரைம் சந்தித்து பேசினேன். நெடுவாசல் எனது சொந்த ஊர் போன்றது. அங்குள்ள மக்கள் எனக்கு சொந்தக்காரர்கள்"என்று நெகிழ்ந்து மகிழ்ந்தார்.

மேலும் பல...

0 comments

Blog Archive