விஷாலை சந்திக்க விரும்பவில்லையா ரஜினி?

சினிமா ஸ்டிரைக்! தியேட்டர்கள் வெறிச்! கடந்த ஒரு மாத காலமாக இதுதான் தமிழ்நாட்டின் நிலைமை. பொழுதுபோக்க வருகிற குடும்பத்தின் பாவத்தையும் சேர...

சினிமா ஸ்டிரைக்! தியேட்டர்கள் வெறிச்!

கடந்த ஒரு மாத காலமாக இதுதான் தமிழ்நாட்டின் நிலைமை. பொழுதுபோக்க வருகிற குடும்பத்தின் பாவத்தையும் சேர்த்துக் கொட்டிக் கொண்ட தியேட்டர்கள், இப்போது பாவத்தின் சம்பளத்தை அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள். தியேட்டரை நம்பி உள்ளே கடை போட்டவர்களுக்கும் சேர்த்து கூழும் கஞ்சியும்தான் கலெக்ஷன்!

மூதேவிக்கும் சீதேவிக்குமான வித்தியாசத்தை இப்போது தெரிந்து கொண்ட சில தியேட்டர்கள் மட்டும், தங்களது டிக்கெட் தில்லாலங்கடி மேட்டர்களுக்கு விடை கொடுக்க துணிந்துவிட்டன. பாதிக்கு மேல் நோ நோ… என்கிறார்கள். இந்த ஸ்டிரைக் இன்னும் ஒரு மாதம் நீடித்தால், நினைத்ததை நடத்தி விடலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் நினைத்துக் கொண்டிருக்க… தனது காலா படத்தை ஏப்ரல் 27 ந் தேதி கொண்டு வந்தே தீருவது என்பதில் படு தீவிரமாக இருக்கிறாராம் ரஜினி.

சினிமா எக்கேடு கெட்டால் என்ன? நான் பிழைத்தால் போதும் என்கிற இந்த நல்ல மனசுக்காரரின் நிஜ உருவம் புரிந்த சினிமா ஏரியா படு ஷாக் ஆகியிருக்கிறது. இந்த மாதம் ரிலீஸ் ஆகாத படங்கள்தான் அடுத்த மாதம் வெளியாக வேண்டும். நடுவில் யார் நுழைந்தாலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று குரல் உயர்த்த ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னும் சிலர் தயாரிப்பாளர் சங்கம் நடத்திய கூட்டத்தில், ‘ரஜினி வீட்டு முன் தீக்குளிப்போம்’ என்கிற அளவுக்கு பேசியிருக்கிறார்கள்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, தமிழ்சினிமாவின் முதல் மரியாதைக்குரியவர்களான ரஜினியும் கமலும் தங்களது போராட்டத்திற்கு வியூகம் அமைத்து தருவார்கள் என்று நம்புகிறார் விஷால். இதற்காக கமல்ஹாசனை சந்தித்து ஆலோசனை கேட்டு வந்தார். அடுத்து ரஜினி முறை.

அவரை சந்திக்க முன் அனுமதி கேட்டு பல நாட்கள் ஆச்சாம். ஆனால் அங்கிருந்து ஒரு நல்ல பதிலும் வந்து சேர்ந்த பாடில்லை.

ஏன்யா… காலாவுக்கு வழி விட மாட்டீங்க, ஆனா காலாட்ட ஐடியா மட்டும் கேட்பீங்களா? நல்லாயிருக்கு உங்க நட்டுவாங்கம்?

மேலும் பல...

0 comments

Blog Archive