தமிழகத்தை சுடுகாடாக்கும் ஸ்டெர்லைட் திட்டம்: பின்னணியில் நடப்பது என்ன?

 சமீபகாலமாக வலைதளங்களில் அதிகளவு ட்ரெண்டாகி வருகிறது. ஸ்டெர்லைட் என்றால் என்ன அதனை ஏன் மக்கள் வேண்டாம் என போராடுகிறார்கள் என்பது இங்கு எத்த...

 சமீபகாலமாக வலைதளங்களில் அதிகளவு ட்ரெண்டாகி வருகிறது. ஸ்டெர்லைட் என்றால் என்ன அதனை ஏன் மக்கள் வேண்டாம் என போராடுகிறார்கள் என்பது இங்கு எத்தனை பேருக்கு தெரியும்.

ஸ்டெர்லைட் என்பது வேதாந்தா குரூப்ஸ் -ன் காப்பர் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை. இந்த தொழிற்சாலையிலிருந்து தான் இந்தியா பல்வேறு இடங்களுக்கு அதிகளவு காப்பர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இந்த காப்பர் தான், புதிய புதிய கார், பைக் மற்றும் பல பொருட்கள் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில் காப்பர் எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் அறிவோம். அப்படியிருக்கையில், இந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மட்டும் ஏன் மக்கள் எதிர்க்கிறார்கள்?

பொதுவாக, இந்த மாதிரியான தொழிற்சாலைகளையெல்லாம் இயற்கை வளங்களை தாண்டி 25 கி.மீ தொலைவிலும், மக்கள் வாழக்கூடிய பகுதியிலிருந்து 15 கி.மீ தொலைவில் தான் அமைக்க வேண்டும்.

ஆனால், தூத்துக்குடியில், இந்த விதிகளை கடைபிடிக்காமலே ஸ்டெர்லைட் தொழிற்சாலை நிறுவப்பட்டது. மேலும், இங்கு சல்ஃபர் டை ஆக்ஸைடு போன்ற வாயு வெளியாகும். ஆனால் அதையும் இந்த தொழிற்சாலை சல்ஃப்யூரிக் ஆசிட், பாஸ்ஃபுயூரிக் ஆசிட் போன்ற ஆசிட்களை தயாரிக்க ஆரம்பித்தனர்.

இதற்கு, அதிகளவு தண்ணீர் தேவைப்படும், ஆனால், இந்த தொழிற்சாலை மக்கள் வாழக்கூடிய பகுதிக்கு அருகிலேயே இருப்பதால் மக்களுக்கு செல்லக்கூடிய தண்ணீரை இவர்கள் உபயோக்கபடுத்திக் கொண்டனர்.

இதனால், இதைச் சுற்றி உள்ள விவசாய நிலங்கள் எல்லாம் அதிகளவு பாதிக்கப்பட்டது. இதனால் தான் இந்த தொழிற்சாலை ஆரம்பித்ததிலிருந்து மக்கள் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு 23 ஆம் திகதியில் இந்த தொழிற்சாலைகளுக்கு அருகில் உள்ள பகுதி மக்களுக்கு கண் எரிச்சலும், மூச்சுத் திணரலும் அதிகளவு ஏற்பட்டுள்ளது.

திடீரென்று, பகுதி மக்கள் அனைவருக்கும் மூச்சு திணரல் ஏற்பட காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்த பொழுது தான் தெரிந்தது, தொழிற்சாலையில் ஏற்பட்ட ஒரு பிரச்சணையால் அதிகளவு சல்ஃபர் டை ஆக்ஸைடு வாயு காற்றுடன் கலந்து தான் இந்த மூச்சு திணரல் ஏற்பட்டுள்ளது என்பது.

வழக்குகள்

ஸ்டர்லைட் நிறுவனம் சூழலியல் மாசை உண்டாக்குவதாக குற்றஞ்சாட்டி, நேஷனல் ட்ரஸ்ட் ஆஃப் க்ளீன் என்விரான்மென்ட், வைகோ, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட தரப்பிலிருந்து வழக்குகள் பதியப்பட்டன.

1997-2012 ஆம் ஆண்டு காலத்தில் சில ஆண்டுகள் முறையான அரசு ஒப்புதல்களை புதுப்பிக்காமலும் ஆலையை நடத்தியதுதான் இந்த நிறுவனத்தின் மீதான பிரதான குற்றச்சாட்டு.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், 2010 ஆம் ஆண்டு நிறுவனத்தை மூடக்கோரியது. உச்சநீதிமன்ற மேல் முறையீட்டில், நூறு கோடி அபராதம் அளித்து நிறுவனம் தொடர்ந்து செயல்பட அனுமதி அளித்தது.

இத்தனை நாட்கள் இல்லாமல் ஏன் இந்த திடீர் போராட்டம் என்று கேட்பவர்களுக்கு?

இது திடீர் போராட்டம் எல்லாம் இல்லை. அந்த நிறுவனம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து சட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வழிகளிலும் போராடி வருகிறோம். சனிக்கிழமையன்று நடந்த போராட்டம் அந்நிறுவனத்தின் விரிவாக்கத்தை எதிர்த்து நடந்தது. அந்நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி திறன் ஆண்டிற்கு 4 லட்சம் டன். இதுவே மோசமான சூழலியல் விளைவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில். மேலும் ஆண்டிற்கு 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி செய்யும் அளவுக்கு விரிவாக்குவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் அந்நிறுவனத்துக்கு எதிராக போராடி வரும் போராட்டக் குழுவினர்.

"நாங்கள் ஸ்டர்லைட் நிறுவனத்தை எதிர்க்கிறோம் என்று குறுக்கி பார்க்காதீர்கள். குடியிருப்பு பகுதியில் தாமிர உருக்காலை இருப்பதைதான் எதிர்க்கிறோம். அந்நிறுவனத்தின் சூழலியல் தவறுகளை சரியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்காத, மக்கள் பாதுகாப்பின் மீது அக்கறை கொள்ளாத அரசைதான் எதிர்க்கிறோம் என்கின்றனர் தூத்துகுடி மக்கள்.

இரண்டு நாட்களில் ஒரு இளம்பெண்ணை உலகறிய செய்த நம்மால் ஏன் இரண்டு வாரமாக போராடும் மக்களை பற்றி நினைக்க நேரமில்லை. இது என்ன பல மாதமாக போராடும் விவசாயிகளையே நாம் நினைக்கவில்லை.

மாட்டுக்காக போராடிய நம்மால் அதை வளர்க்கும் மனிதனுக்கு போராட தோணவில்லை என்பதை நினைத்தால் தான் வருத்தமாக உள்ளது.

மேலும் பல...

0 comments

Blog Archive